ஒமிக்ரான் குறித்த சந்தேகங்களுக்கு அரசு அளிக்கும் விளக்கங்கள் என்ன?

ஒமிக்ரான் உருவானதால் இந்தியாவில் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது

ஒமிக்ரான் உருவானதால் இந்தியாவில் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது

author-image
WebDesk
New Update
ஒமிக்ரான் குறித்த சந்தேகங்களுக்கு அரசு அளிக்கும் விளக்கங்கள் என்ன?

Kaunain Sheriff M

Govt answers questions on Omicron : ஒமிக்ரான் வைரஸ் மாறுபாடு தொடர்பாக தொடர்ந்து எழுந்து வரும் சந்தேகங்களுக்கு மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவில் வேகமாக அளிக்கப்பட்டு வரும் தடுப்பூசி மற்றும் டெல்டா மாறுபாட்டினால் ஏற்பட்ட அதிகமான தாக்குதல் காரணமாக ஒமிக்ரான் தொற்றால் ஏற்படும் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளது சுகாதாரத்துறை.

Advertisment

ஒமிக்ரான் உருவானதால் இந்தியாவில் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் உள்ளதா?

தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடு பரவி வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் அதன் பண்புகள் குறித்து கூறப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த மாறுபாடு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால், இந்த தொற்றின் தீவிரம் மற்றும் பரவும் தன்மை குறித்த தெளிவான தரவுகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசியின் வேகமான வேகம் மற்றும் டெல்டா மாறுபாட்டின் அதிக வெளிப்பாடு ஆகியவை காரணமாக நோயின் தீவிரம் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அறிவியல் சான்றுகள் இன்னும் உருவாகி வருகின்றன.

‘ஆபத்தான நாடுகளிலிருந்து’ இந்தியா வந்த 12 பயணிகள் தனிமைப்படுத்தல்; 8 பேருக்கு கொரோனா

தற்போதுள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுமா?

Advertisment
Advertisements

தற்போதுள்ள தடுப்பூசிகள் ஓமிக்ரானில் வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், ஸ்பைக் மரபணுவில் பதிவாகும் சில பிறழ்வுகள் தற்போதுள்ள தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், தடுப்பூசி பாதுகாப்பு என்பது ஆன்டிபாடிகள் மற்றும் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவும் உள்ளது, இது ஒப்பீட்டளவில் ஒமிக்ரானில் இருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும். இருக்கும் தடுப்பூசிகளை கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியமானது. தகுதியான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தால் செலுத்திக் கொள்வது அவசியம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் குறித்து நாம் எவ்வளவு தூரம் கவலை கொள்ள வேண்டும்?

கவனிக்கப்பட்ட பிறழ்வுகள், அதிகரித்த பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு ஏய்ப்பு ஆகியவற்றின் முன்னறிவிக்கப்பட்ட அம்சங்கள், மற்றும் அதிகரித்த மறுநோய்கள் போன்ற கோவிட்-19 தொற்றுநோய்களில் தீங்கு விளைவிக்கும் மாற்றத்திற்கான ஆரம்ப சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் Omicron VoC என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை முன்னிலைப்படுத்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அதிகரித்த பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு ஆண்ட்டிபாடிகளில் இருந்து தப்பித்துக் கொள்வது போன்ற விவகாரங்களில் உறுதியான சான்றுகள் இன்னும் இல்லை என்றும் அந்த குறிப்பு தெரிவிக்கிறது.

‘Omicron’ – இதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியுமா?

சுகாதார அமைச்சகம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது?

சரியான முறையில் முகமூடி அணிந்துகொள்வதும், இன்னும் தடுப்பூசி போடப்படாவிட்டால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்வதும், சமூக இடைவெளியைப் பேணுவதும், நல்ல காற்றோட்டமான பகுதிகளில் வசிப்பதும் அவசியம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் நோய் கண்டறியும் வழிமுறைகள் மூலம் ஒமிக்ரானை கண்டறிய இயலுமா?

RT-PCR சோதனைகள் வைரஸில் உள்ள குறிப்பிட்ட மரபணுக்களான Spike (S), Enveloped (E), Nucleocapsid (N) போன்றவற்றைக் கண்டறிந்து வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்துவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. ஆனாலும் ஒமிக்ரானில் எஸ் மரபணுக்கள் பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது. எனவே சில ப்ரைமர்கள் S மரபணு இல்லாததைக் குறிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட S மரபணு மற்ற வைரஸ் மரபணுக்களைக் கண்டறிவதோடு, ஒமிக்ரானை கண்டறியவும் பயன்படுத்தலாம். ஆனாலும் ஒமிக்ரானை உறுதி செய்ய மாதிரிகளை மரபணு வரிசைமுறை உட்படுத்தலுக்கு உட்செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஒமிக்ரானுடன் தென்னாப்பிரிக்கர் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி? கர்நாடக அரசு தீவிர விசாரணை

Corona Omicron

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: