மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் திருத்தங்களை வியாழக்கிழமை அறிவித்தது. இந்த திருத்தம் மத்திய அரசு தொடர்பான ஆன்லைன் தகவல்கள் துல்லியமானதா என்பதை அறிய ஒரு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை நியமிக்க இந்த துறையின் அமைச்சகத்தை அனுமதிக்கிறது.
இது குறித்து நிறைய விமர்சனங்களும் கவலைகளும் இருந்தபோதிலும், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற ஆன்லைன் தளங்களில் அரசாங்கத்துடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை போலி அல்லது தவறானவை என்று குறிப்பிடுவதற்கு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை அனுமதிக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு இருந்தாலும், இந்த அமைப்பு குறிப்பிடும் உள்ளடக்கம், ஆன்லைன் தளங்களால் அகற்றப்பட வேண்டும்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் திருத்தங்களை வியாழக்கிழமை அறிவித்தது. இந்த திருத்தம் மத்திய அரசு தொடர்பான ஆன்லைன் தகவல்கள் துல்லியமானதா என்பதை அறிய ஒரு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பை நியமிக்க இந்த துறையின் அமைச்சகத்தை அனுமதிக்கிறது.
செய்திகளைப் பகிர்வதற்கான மத்திய அரசின் நோடல் ஏஜென்சியான பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (பி.ஐ.பி) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவினால் போலி என்று அடையாளம் காணப்பட்ட எந்த ஒரு செய்தியையும், இந்த அமைச்சகம் முதலில் முன்மொழிந்த சில மாதங்களுக்குப் பிறகு இறுதி விதிகளை ஜனவரியில் பரிந்துரைத்துள்ளன. இதில், ஆன்லைன் தளங்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், இறுதி வரைவு பி.ஐ.பி பற்றிய குறிப்பை நீக்கியுள்ளது.
இந்த முன்மொழிவு ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு உள்ளானது. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, “போலி செய்திகளை நிர்ணயிப்பது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இருக்க முடியாது. அது பத்திரிகை தணிக்கைக்கு வழிவகுக்கும்” என்று கூறியிருந்தது. செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் அசோசியேஷன் இது ஊடகங்களில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தும். இது திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறியது.
இறுதி விதிகள் என்ன கூறுகிறது?
இறுதி விதிகள் கூறுவது என்னவென்றால், பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள் மற்றும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இணைய சேவை வழங்குநர்கள் உட்பட ஒரு ஆன்லைன் ஊடக தளம் – இது தொடர்பான உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்யாமல் இருக்க சரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் உண்மை சரிபார்ப்பு பிரிவு மூலம் போலி அல்லது தவறாக வழிநடத்தப்படும் தகவல்கள் என அடையாளம் காணப்படும்.
சாராம்சத்தில், வரவிருக்கும் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவால் ஏதேனும் ஒரு தகவல் போலியானது எனக் குறிக்கப்பட்டால், அந்த தளங்கள் அதை அகற்ற வேண்டும். தவறினால் மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கு எதிரான வழக்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நிலையை இழக்க நேரிடும். சமூக ஊடக தளங்கள் அத்தகைய இடுகைகளை அகற்ற வேண்டும். இணைய சேவை வழங்குநர்கள் அத்தகைய உள்ளடக்கத்தின் URLகளைத் தடை செய்ய வேண்டும்.
புதிய விதிகளால் ஏற்பட்டுள்ள கவலைகள் என்ன?
இந்த விதிகள் ஆன்லைனில் பேசுவதைத் தடுக்கலாம் என்று சமூக செயற்பாட்டாளர்களின் குழுக்கள் தெரிவித்துள்ளன. டெல்லியை தளமாகக் கொண்ட டிஜிட்டல் உரிமைகள் குழுவான இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் ஒரு அறிக்கையில், “இந்த திருத்தப்பட்ட விதிகளின் அறிவிப்பு, குறிப்பாக செய்தி வெளியீட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள் போன்றவர்களின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமையின் மீது கடுமையான தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69ஏ-ன் கீழ் சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையைத் தவிர்த்து, சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய அடுக்கு முழுவதும் உள்ள பிற இடை தளங்களூக்கு ஒரு தரமிறக்குதல் உத்தரவை இந்த பிரிவு திறம்பட வழங்க முடியும்.
உலகளாவிய உரிமைகள் குழுவான அக்சஸ் நவ், அறிவிக்கப்பட்ட இந்த திருத்தம், முந்தைய முன்மொழிவைப் போலல்லாமல், பத்திரிகை தகவல் பணியகத்தை சரியான உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமாக நியமிக்கவில்லை என்றாலும், அதன் இறுதி விளைவும் மோசமாகத்தான் இருக்கும். ஆன்லைனில் உண்மையின் இறுதி நடுவர்களான MeitY ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களை இது வழங்குகிறது” என்று கூறியுள்ளது.
தணிக்கை தொடர்பான கவலைகள் குறித்து மத்திய அரசு என்ன கூறியுள்ளது?
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பு, இந்த கவலைகளைத் தீர்த்து நம்பகமான முறையில் செயல்படும் என்று உறுதியளித்தார்.
“நாங்கள் ஏஜென்சிக்கு அறிவிக்கும்போது, அரசாங்கத்தின் சார்பில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று மக்கள் மனதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஏஜென்சிக்கு அறிவிக்கும்போது நிவர்த்தி செய்யப்படும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியல் இருக்கும். அதை கடைபிடிக்க வேண்டும்.
இது வழக்கமான வேலையாக இருக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு அரசாங்கத் துறை வகையாக இருக்கும். நாங்கள் நிச்சயமாக உண்மைச் சரிபார்ப்புகளை நம்பகமான முறையில் நடத்த விரும்புகிறோம். அது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, அந்த குறிப்பிட்ட உண்மைச் சரிபார்ப்பைச் சார்ந்திருக்கும் இடைத்தொடர்பாளருக்கும் பயனுள்ள வழியாக இருக்கும்” மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“