மார்ச்1, 2020ஆம் தேதியன்று நிலுவையில் உள்ள, அனைத்து விதமான குறித்த கால வங்கிக் கடன்களுக்கும், கடன் தவணைகள் மீதான ஆறு மாத கால தற்காலிக செயல் நிறுத்தத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வங்கி தவணையை திருப்பி செலுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய தயாராக உள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு இந்த சலுகையை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு-குறு தொழில் துறையினர் பெற்ற கடன்கள் மற்றும் கல்வி, வீட்டுவசதி, நுகர்வோர் மற்றும் வாகன கடன்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செலுத்த வேண்டும்?
வட்டி மற்றும் வட்டிக்கான வட்டி (கூட்டு வட்டியை) ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை புரிந்துக் கொள்வது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தடைச் சலுகை காலத்தில், நிலுவையில் உள்ள கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
உங்களுடைய கடன் நிலுவைத் தொகை ரூ .50 லட்சமாக இருந்து, கடனுக்கு 8 சதவீத வட்டி விதிக்கப்படுவதாக இருந்தால் (தவனைக் காலம், 19 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம் (228 மாதங்கள்) ஆறு மாத கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தடைச் சலுகை காலத்தில் உள்ள ரூ .2 லட்சம் வட்டிப் பணத்தை நாம் செலுத்த வேண்டியிருக்கும்.
என்ன தள்ளுபடி செய்யப்படுகிறது?
வங்கிகள் இந்த ரூ.2 லட்சம் வட்டிப் பணத்திற்கான கூட்டு வட்டித்தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்காது. வங்கி தவணையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசத்திற்கு வட்டியை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனவே, வங்கிகள் அசல் நிலுவைத் தொகையான ரூ .50 லட்சத்தில், ரூ .2 லட்சத்திற்கான கூட்டு வட்டித் தொகையைச் சேர்க்காது.
எனவே, வங்கி தவணை காலத்தில் சேர்ந்த வட்டித் தொகையை ஒருவர் எவ்வாறு செலுத்த வேண்டும்?
கூட்டு வட்டியை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதால், வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள், ரூ .2 லட்சம் வட்டித் தொகையை, 228 மாத தவனை கால ஈ.எம்.ஐ தொகையில் ரூ .877 ஆக அதிகரிக்கும்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
எவ்வளவு சேமிக்கலாம்?
மேற்கண்ட உதாரணத்தின் படி, வட்டிக்கான வட்டித் தொகையை உங்கள் நிலுவைத் தொகையுடன் வங்கிகள் இணைத்தால், கடனுக்கு 8 சதவீத வட்டி விதிக்கப்படும் என்ற கணக்கில், மாதந்தோறும் ( 228 மாத தவணை காலம்) நீங்கள் ரூ.1,709 வட்டியாகச் செலுத்த வேண்டும். இருப்பினும், வங்கி தவணையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய தயார் என்று மத்திய அரசு தெரிவித்ததால், உங்கள் ஈ.எம்.ஐ தொகை மாதத்திற்கு ரூ .877 மட்டுமே இருக்கும்.
எனவே, கூட்டு வட்டி தள்ளுபடி காரணமாக, மாதந்தோறும் நீங்கள் 832 ரூபாய் வரை சேமிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil