Advertisment

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்; டிஆர்எஸ், பாஜகவுக்கு உள்ள போட்டி என்ன?

கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Greater Hyderabad Municipal Corporation, கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், டிஆர்எஸ், GHMC polls, பாஜக, காங்கிரஸ், TRS, BJP, hyderabad civic polls, hyd municipal polls, Tamil indian express news, express explained

கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் தெலங்கான ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாநகராட்சி தேர்டஹ்ல் முக்கியமானதாக உள்ளது.

Advertisment

ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.எஸ்-க்கு என்ன ஆபத்து?

2018 டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் அலை வெற்றிபெற்றபோதும், ​​2019 ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சி நான்கு முக்கியமான மக்களவை இடங்களை பாஜகவிடம் இழந்தது. அக்கட்சியின் மற்றொரு கோட்டையான மல்கஜ்கிரி தொகுதியில் காங்கிரஸிடம் தோல்வியுற்றது. மற்ற இரண்டு இடங்களையும் அக்கட்சி வென்றது. நவம்பர் 10ம் தேதி நடைபெற்ற துப்பாகா சட்டமன்ற இடைத்தேர்தலில், 2018-ல் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆளும் கட்சி, பாஜகவிடம் தோற்றது. துபாகாவில் ஏற்பட்ட தோல்வியைப் பற்றி கவலைப்படாத டி.ஆர்.எஸ், ஜனவரி மாதம் நடைபெற விருந்த கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலை முன்னெடுத்து, தனது போட்டியாளர்களை பாதுகாப்பான இடத்தில் இருந்து விடுவிக்கும் என்று நம்பியது.

இதனிடையே, அக்டோபர் 13-14 தேதிகளில் பெய்த கனமழையால் ஐதராபாத் மாநகராட்சியின் பெரும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சி நிலைமையைக் கையாண்டதற்காக பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதில் தாமதமாக நடந்துகொண்டதற்காக நகராட்சி நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது அவர்கள் செய்தது போதாது என்று கூறப்பட்டது. பல குடியிருப்பு காலனிகள் பல நாட்களாக நீரில் மூழ்கியிருந்தன. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் குடிநீர் இல்லாமல் இருந்தன. ஏனெனில், தண்ணீரை வெளியே எடுக்க போதுமான பம்புகளை அதிகாரிகள் கொண்டுவர முடியவில்லை.

2016ம் ஆண்டில், டி.ஆர்.எஸ். கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் 150 இடங்களில் 88 இடங்களை வென்றது. அதன் நகராட்சி கவுன்சிலர்கள் வெள்ள நீரில் சிக்கித் தவிக்கும் குடிமக்களின் கோபத்தை எதிர்கொண்டனர். அக்டோபர் 19ம் தேதி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10,000ஐ அரசாங்கம் அறிவித்தது. ஆனால் பண விநியோகம் குழப்பமானதாக இருந்தது. டி.ஆர்.எஸ் அனுதாபிகளுக்கும் பாதிக்கப்படாத நபர்களுக்கும் இழப்பீடு வழங்குவது உட்பட பண விநியோகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை அடுத்து, மீ சேவா மையங்களில் தங்களை பதிவு செய்த பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பணத்தை வரவு வைக்க அரசாங்கம் முடிவு செய்தது. இந்த மையங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக அது மேலும் குழப்பமாக மாறியது. மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஊழியர்கள் திணறினார்கள். நவம்பர் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இதனால், இழப்பீடு விநியோகத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. இது ஆயிரக்கணக்கான மக்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

தென் மாநிலத்தில் பாஜக என்ன வாய்ப்பைப் பார்க்கிறது?

இப்போது இரண்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் நான்கு எம்.பி.க்களைக் கொண்டுள்ள பாஜகவைப் பொறுத்தவரை, இந்த மாநகராட்சி தேர்தல் ஹைதராபாத்தில் தனது இருப்பை அதிகரித்துக்கொள்ளவும் தெலங்கானாவின் எல்லைப்பகுதியில் அதிக இடத்தைப் பெறவும் இது ஒரு வாய்ப்பாகும். கட்சித் தலைவர்களும் இப்போது டி.ஆர்.எஸ்ஸின் முக்கிய போட்டியாளர் காங்கிரஸ் அல்ல பாஜகதான் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள்.

கர்நாடகாவைத் தவிர, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய நான்கு தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக இடங்கள் இல்லை. இங்கே மாநிலக் கட்சிகள் உறுதியாக உள்ளன. 4 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 2 சட்டமன்ற இடங்களை வென்றதன் மூலம் தெலங்கானாவில் பாஜக ஒரு தொடக்கத்தைக் காண்கிறது. பீகார் தேர்தலில் பாஜக 72 இடங்களை வென்றதற்கு உதவிய பீகார் தேர்தல் பொறுப்பாளரான பூபேந்தர் யாதவை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் திட்டத்தை வகுக்க பொறுப்பாளராக நியமித்ததற்கு இதுதான் காரணம். பா.ஜ.க தலைவர்கள் டி.ஆர்.எஸ்ஸின் பரம எதிரியாக காங்கிரஸ் இருந்த இடத்தில் தங்கள் கட்சியை மாற்றியுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் சிறந்த போட்டியாளராக மாறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். பாஜக தன்னை நம்பகமான மற்றும் வளர்ச்சி சார்ந்த மாற்றாக நிறுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள டிஆர்எஸ்-ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணியை உடைக்க விரும்புகிறது. மேலும், கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் அந்த யுக்தியையும் வலிமையையும் சோதிக்க வாய்ப்பை வழங்குகிறது.

கட்சித் தலைவர்கள் துப்பாகா இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றது ஏதோ குருட்டு அதிர்ஷ்டம் அல்ல என்றும் அதிருப்தி அடைந்த மக்கள் காங்கிரஸைத் தவிர வேறு வழியைத் தேடுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் தெலங்கானாவில் பாஜக தனது வாக்கு வங்கிய எவ்வாறு அதிகரித்துள்ளது?

தெலுங்கானாவில் 2014 தேர்தலில் பாஜக 5 சட்டமன்ற இடங்களை வென்றது. இருப்பினும், டிசம்பர் 2018 சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் 4 இடங்களைப் பிடித்தது. டி.ராஜா சிங் மட்டுமே தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இருப்பினும், 4 மாதங்களுக்குள், 3 மக்களவை இடங்களை வென்று செகந்திராபாத்தை தக்க வைத்துக் கொண்டு பாஜக பின்வாங்கியது. அக்கட்சி சட்டமன்றத் தேர்தலில் பெற்ற 7.1 சதவீத வாக்குகளில் இருந்து மக்களவைத் தேர்தலில் 19.45 சதவீத வாக்குகளாக உயர்த்தியது. டி.ஆர்.எஸ் மீதான அதிருப்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் அதிகரித்ததே அதன் வாக்குகள் அதிகரிப்புக்குக் காரணம் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

மத்திய அரசின் திட்டங்களை முன்னிலைப்படுத்த அக்கட்சி வீடு வீடாக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகள் ஏ.ஐ.எம்.ஐ.எம் பக்கம் இருப்பதால் அதனுடன் டிஆர்எஸ் கூட்டணி உறுதி செய்துள்ளது. இது பாஜகவுக்கு திருப்பிய இந்து வாக்காளர்களில் ஒரு பகுதியை அந்நியப்படுத்திள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bjp Telangana Congress Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment