grey hair, stress, stress and grey hair, stress turns hair grey, what causes grey hair, solution to grey hair, hair turning white from stress, explained
Stress and Grey Hair:.. இளம்வயதிலேயே தற்போது சிலருக்கு நரைமுடி வரத்துவங்கிவிட்டது. இதற்கு உணவு, பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், ஹார்வார்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் மன அழுத்தமே, நரைமுடிக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வயது முதிர்வின் காரணமாக, தலைமுடிக்கு கருப்பு நிறத்தை அளிக்கும் நிறமிகளை, நமது உடல் இழப்பது என்பது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், தற்போது சிலருக்கு இளம்வயதிலேயே அல்லது திடீரென்று தலைமுடி முழுவதும் நரைமுடியாக மாறிவிடுகிறது. இந்த குறைபாட்டிற்கு Marie Antoinette Syndrome என்று பெயர்.
பிரான்ஸ் நாட்டு மகாராணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அவருக்கு ஒரேநாள் இரவில் தலைமுடி முழுவதும் நரைமுடியாக மாறியது. அப்போது மகாராணிக்கு வயது 38 மட்டுமே. இதன்மூலம், முடி நரைத்தலுக்கும், மனஅழுத்தத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் ஆய்வுமுடிவுகளை JOURNAL NATURE என்ற ஜெர்னலில் வெளியிட்டுள்ளனர். மனஅழுத்தத்தின் விளைவாக சில நரம்புகள் தூண்டப்பட்டு, தலைமுடிக்கு நிறமளிக்கும் நிறமிகளை கொண்ட ஸ்டெம் செல்களை சிதைத்து, நரைமுடி வரவழைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு
விஞ்ஞானிகள், இந்த சோதனையை எலிகளில் மேற்கொண்டனர். மனஅழுத்தம் காரணமாக எலிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தலைமுடிக்கு நிறமளிக்கும் செல்களின் இயக்கத்தை பாதிப்பதாக அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், கார்டிசால் ஹார்மோன் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அற்ற எலிகளிடமும், நரைமுடி ஏற்பட்ட விதம் விஞ்ஞானிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
விஞ்ஞானிகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில், fight-or-flight response என்பதனடிப்படையில் நரம்புகளில் ஏற்படும் மாற்றமே, நரைமுடிக்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். அசாதாரண சூழ்நிலை உள்ளிட்ட காலங்களில் நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்தான், நாம் அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறோமா அல்லது அந்த சூழ்நிலையை தவிர்க்கிறோமா என்பதை தீர்மானிக்கிறது. இந்த சூழ்நிலையில், நமது நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு, sympathetic nerve system என்று பெயரிட்டுள்ளனர்.
என்ன நடக்கிறது?
அதீத மனஅழுத்தத்தில் இருக்கும்போது இந்த sympathetic nerve system அமைப்பின் மூலமாக, norepinephrine என்ற வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. இதுதான் நரைமுடிக்கு காரணமான குற்றவாளி என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
தலைமுடிக்கற்றையில், சில ஸ்டெம் செல்கள், தலைமுடிக்கு கருப்பு நிறமளிக்கும் நிறமிகளை உற்பத்தி செய்யும் செல்களாக உள்ளன. தலைமுடி உருவாகும்போதே, இந்த செல்கள் உருவாவது குறிப்பிடத்தக்கது.
அதீத மனஅழுத்தத்தின் காரணமாக, சுரக்கப்படும் norepinephrine வேதிப்பொருள், இந்த ஸ்டெம் செல்களின் இயக்கத்தை அதிதீவிரப்படுத்துகின்றன. இதன்காரணமாக, அதில் உள்ள அனைத்து ஸ்டெம் செல்களையும், நிறமி தயாரிப்பு செல்களாக மாற்றிவிடுகின்றன. தலைமுடியின் முக்கிய ஆதாரத்தையே இவை நிர்மூலமாக்கிவிடுகிறது.
சில நாட்களுக்கு பிறகு, நிறமிகளின் மறுஉருவாக்கம் தடைபடுகிறது. அவை முற்றிலும் இழந்தபின், அதனால், தலைமுடிக்கு நிறமளிக்கும் பண்பு முற்றிலும் இழந்துவிடுகிறது. இதன் பாதிப்பு நிரந்தரமானதாகிவிடுவதாக, ஸ்டெம் செல் உயிரியல் அறிஞர் யா சீ ஹ்யூ தெரிவித்துள்ளார்.
எலிகள் மற்றும் மனிதர்களில் சோதனை
பெரும்பாலான சோதனைகளுக்கு எலிகளே சோதனை விலங்காக பயன்படுத்தப்படுவதற்கு காரணம் யாதெனில், எலிகள் சாதாரணமாக கிடைக்கின்றன. அதனை கையாள்வது எளிது. மனிதர்களில் ஏற்படும் மாற்றங்கள் போலவே, எலிகளின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனெனில், எலிகளுக்கும், மனிதனுக்கும் மரபுரீதியாகவும், உயிரியல் அடிப்படையிலும் மற்றும் நடத்தை அடிப்படையிலும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. மனிதர்களில் மனஅழுத்தம் காரணமாக நரைமுடி ஏற்படுவது போன்றே, எலிகளிலும் நரைமுடி பிரச்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களில் நரைமுடிக்கு காரணம், மயிர்க்கற்றைகளில் உள்ள ஸ்டெம் செல்களில், நிறமிகளை உருவாக்கும் செல்களின் இயக்கம் பாதிப்படைவதே, இந்த நிலையே, எலிகளிலும் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதன்காரணமாகவே, இந்த நரைமுடி சோதனைக்கு எலிகளை, விஞ்ஞானிகள் சோதனை விலங்காக பயன்படுத்தினர்.
அதீத மனஅழுத்தத்தின் காரணமாக, ஒரு ஸ்டெம் செல்லில் ஏற்படும் அழுத்தமானது, உடலில் உள்ள அடுத்தடுத்த ஸ்டெம் செல்களின் இயக்கங்களை பாதிக்கிறது. இதன்காரணமாக, ஒட்டுமொத்த ஸ்டெம் செல்களின் இயக்கமும் நிலைகுலைய செய்யும் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. இதன்மூலம், விஞ்ஞானிகள், மனஅழுத்தத்தின் பாதிப்பை தெளிவாக உணர்ந்தனர். நமது உடல் மற்றும் மனதில் ஏற்படும் மனஅழுத்தமானது, நமது உடலின் செல் மற்றும் திசுவையும் எந்தளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதை விஞ்ஞானிகள் தெளிவாக கண்டறிந்து விரிவாக விளக்கியுள்ளனர்.