இந்தியாவில் நவம்பர் மாதம் (அக்டோபரில் விற்பனையான) மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் வசூல் ஆண்டுக்கு ஆண்டு 25.3 சதவீதம் அதிகரித்து ரூ.1,31,526 கோடியாக உள்ளது. இது ஜூலை 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஜிஎஸ்டி-யின் கீழ் இரண்டாவது அதிக வருவாய் சேகரிப்பாக உள்ளது. ஜி.எஸ்.டி வரி உயர்வு போக்கில் இரண்டு குறிப்பிட்ட தூண்டுதல்களைக் கொண்டுள்ளது: பல இணக்க நடவடிக்கைகள் மற்றும் வரி அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் அதிக கண்காணிப்பு ஆகியவற்றுடன் பொருளாதார நடவடிக்கைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இணக்க நடவடிக்கைகளில் வருமானத்தை தானாக நிரப்புதல், இ-வே பில்களைத் தடுப்பது மற்றும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக வரி அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் வழங்குதல் ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,41,384 கோடியாக இருந்தது. அது இந்த ஆண்டு இறுதி விற்பனையைக் கணக்கில் கொண்டு, மறைமுக வரி ஆட்சியில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.
ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?
நவம்பரில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,31,526 கோடி, இதில் சிஜிஎஸ்டி – மத்திய அரசின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டிற்கும் மாநிலத்திற்குள் விதிக்கப்படும் வரி – ரூ. 23,978 கோடி எஸ்ஜிஎஸ்டி – மாநிலங்களுக்கு இடையேயான விநியோகங்களுக்கு விதிக்கப்பட்ட வரி ஆகியவை அடங்கும். மாநிலங்களால் சரக்கு மற்றும் சேவை இரண்டுக்கும் வரியாக – ரூ.31,127 கோடி ஐஜிஎஸ்டி – அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படும் வரி – ரூ.66,815 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலிக்கப்படும் ரூ.32,165 கோடி உட்பட) மற்றும் செஸ் வரி ரூ. 9,606 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.653 கோடி உட்பட) ஆகும். அரசு 27,273 கோடி ரூபாயை சி.ஜி.எஸ்.டி.க்கும், 22,655 கோடி எஸ்.ஜி.எஸ்.டி,-க்கும் ஐ.ஜி.எஸ்.டி-யில் இருந்து வழக்கமான தீர்வாக செலுத்தியுள்ளது. நவம்பர் 2021-ல் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சி.ஜி.எஸ்.டி-க்கு ரூ. 51,251 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-க்கு ரூ. 53,782 கோடியும் ஆகும். நவம்பர் 3-ம் தேதி ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.17,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த போக்கு எதைக் குறிக்கிறது?
ஜிஎஸ்டி வருவாய்கள் வேகம் அதிகரித்து, ஆண்டுக்கு ஆண்டு 25.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2019-20 தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தை விட 27 சதவீத வளர்ச்சி செய்துள்ளது. வரி அதிகாரிகள் இணக்கத்தை மேம்படுத்த கடுமையான இணக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் ஜிஎஸ்டி வருவாய் உயர்வு போக்கு, இணக்கத்தை மேம்படுத்த கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் விளைவு என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. “மத்திய வரி அமலாக்க முகமைகள், மாநில அமைப்புகளுடன் சேர்ந்து பெரிய வரி ஏய்ப்பு வழக்குகளை கண்டறிந்துள்ளன. முக்கியமாக போலி விலைப்பட்டியல் தொடர்பான வழக்குகள், ஜிஎஸ்டிஎன் உருவாக்கிய பல்வேறு தகவல் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன், சந்தேகத்திற்குரிய வரி செலுத்துவோரின் ரிட்டர்ன், இன்வாய்ஸ் மற்றும் இ-வே பில் தரவுகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கின்றனர்” என்று கூறியது.
“கடந்த ஓராண்டில், கணினித் திறனை மேம்படுத்துதல், ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் கடைசித் தேதிக்குப் பிறகு, வரி தாக்கல் செய்யாதவர்களைத் தடுத்தல், வருமானத்தைத் தானாகப் பெருக்குதல், இ-வே பில்களைத் தடுப்பது மற்றும் உள்ளீட்டு வரிக் கடன் வழங்குதல் போன்ற ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தாக்கல் செய்யாதவர்கள் கடந்த சில மாதங்களில் வருமானத்தை தாக்கல் செய்வதில் நிலையான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளனர்” என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் இந்தப் போக்கு எப்படி இருந்தது? எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
மொத்த ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நவம்பர் மாத வருவாயானது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 25 சதவீதம் அதிகமாகவும், 2019-20ஐ விட 27 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 43 சதவீதம் அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் (சேவை இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து வருவாயை விட 20 சதவீதம் அதிகமாக இருந்தது.
அந்தந்த மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாயில், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் நவம்பரில் ஜிஎஸ்டி வருவாயில் 24 சதவீத வளர்ச்சியையும், கர்நாடகா 31 சதவீத வளர்ச்சியையும், குஜராத்தில் 26 சதவீத வளர்ச்சியையும், தமிழ்நாடு 10 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
பொருளாதார மீட்சி மற்றும் வரி அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளின் கணிசமான அதிகரிப்புக்கு ஏற்ப ஜிஎஸ்டி வருவாயில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி வருவாயில் அதிகரிப்பு அரசாங்கம் அதன் பட்ஜெட் இலக்குகளை தாண்ட உதவும்.
டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் எம்.எஸ்.மணி கூறுகையில், “ஜிஎஸ்டி வசூல் புள்ளிவிவரங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்களுடன் இணைந்துள்ளன. மேலும், இந்த நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருவாய் இலக்குகளை கடக்க உதவும் அளவில் தற்போது வசூல் நிலைபெற்றுள்ளது. ஜி.எஸ்.டி.என் உடன் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய காலங்களில் ஜி.எஸ்.டி கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது; இவை பொருளாதார வளர்ச்சிக்கு மேலாக, அதிகரித்த வசூலுக்கு பங்களித்திருக்கும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“