ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற போது, நரேந்திர மோடி SAARC நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார். இம்முறை, இன்று(மே.30) மீண்டும் பதவியேற்கும் போது BIMSTEC நாடுகள், Kyrgyz ரிபப்ளிக் மற்றும் மொரிஷியஸ் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு "அண்டை நாட்டினருக்கு முக்கியத்துவம்" என்ற மோடியின் கோட்பாட்டின்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் உடனான பதட்டத்தின் காரணத்தினால் 2014ல் SAARC நாடுகள் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது பிரதமரின் புதிய முயற்சி காரணமாக, அண்டை நாடுகள், சீனா- ரஷிய பிராந்தியம், மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த பார்வை இதோ,
முஹம்மத் அப்துல் ஹமீது: வங்கதேச அதிபர்
75 வயதான அதிபர் ஹமீது, ஏப்ரல் 2013ல் முதன் முதலாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட, மீண்டும் 2018ல் அதிபரானார். 2009 - 2013 ஏப்ரல் வரை, அவர் வங்கதேச பாராளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீன ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருப்பதால், அவருக்கு பதில் ஹமீது கலந்து கொள்கிறார்.
2014 விருந்தினர்: சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சௌத்ரி
மைத்ரிபால சிறிசேனா: இலங்கை அதிபர்
67 வயதான அதிபர் சிறிசேன, 2015-லிருந்து பதவியில் உள்ளார். வடக்கு மாகாணத்தில் இருந்து தேர்வான முதல் அதிபர் இவர் தான். கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு மஹிந்தா ராஜபக்ஷேவை கொண்டுவர முயன்ற சிறிசேனாவின் முயற்சி இலங்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யு வின் மின்ட்: மியான்மர் அதிபர்
67 வயதான அதிபர் மின்ட், முன்னாள் அரசியல் கைதியாவார். மார்ச் 2018 முதல் இவர் மியான்மரின் அதிபராக பதவி வகித்து வருகிறார். ஆங் சான் சூ யி-யின் நெருங்கிய நண்பரான மின்ட், சில காரணங்களால் சூ யி அதிபராக பதவியேற்றுக் கொள்ள முடியாததால், அவருக்கு பதில் அதிபரானார்.
2014 விருந்தினர்: மியான்மர் அழைக்கப்படவில்லை
சூரோன்பே, ஷரிபோவிச் ஜீன்பேகோவ்: கைர்கிஸ்தான் ரிபப்ளிக் அதிபர்
60 வயதான அதிபர் ஜீன்பேகோவ், நவம்பர் 2017 முதல் பதவி வகித்து வருகிறார். ஏப்ரல் 2016 - ஆகஸ்ட் 2017 வரை பிரதமராக பதவி வகித்தார். பல்வேறு துறைகளில் பணியாற்றிய போதும், கால்நடைப் பிரிவின் நிபுணராகவும் இருந்திருக்கிறார்.
2014 விருந்தினர்: கைர்கிஸ்தான் ரிபப்ளிக் அழைக்கப்படவில்லை
கட்கா பிரசாத் ஷர்மா ஒலி: நேபாள் பிரதமர்
67 வயதான பிரதமர் ஒலி, நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மேன், அக்டோபர் 2015 - ஆகஸ்ட் 2016 வரை பிரதமராகவும் இருந்திருக்கிறார். அதன்பிறகு, 2018ம் ஆண்டு முதல் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார்.
2014 விருந்தாளி: பிரதமர் சுஷில் கொய்ராலா
லோடே ஷெரிங்: பூட்டான் பிரதமர்
51 வயதான பிரதமர் ஷெரிங், நவம்பர் 2018 முதல் பிரதமராக பதவியேற்றுள்ளார். டாக்காவில் மருத்துவம் படித்திருக்கிறார்.
2014 விருந்தாளி: ஷெரிங் டோப்கே
பிரவீன் குமார் ஜகநாத்: மொரீஷியஸ் பிரதமர்
57 வுயதான பிரதமர் ஜகனாத், 2017 முதல் பதவி வகித்து வருகிறார். மொரீஷியஸ் நாட்டின் நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். முன்னாள் பிரதமர் அனெரூட் ஜகனாத் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா வந்த ஜகனாத், பிரவாசி பாரதிய திவாஸின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
2014 விருந்தாளி: மொரிஷியஸ் அழைக்கப்படவில்லை.
க்ரிசாடா பூன்ராச்: தாய்லாந்தின் சிறப்பு தூதர்
61 வயதான க்ரிசாடா பூன்ராச், தாய்லாந்தின் விவசாயம் மற்றும் கைத்தறி அமைச்சராக 2017 முதல் பதவி வகித்து வருகிறார். தாய்லாந்து அரசு அமைப்பதற்கான பணியில் அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா பிஸியாக இருப்பதால், அவருக்கு பதில் க்ரிசாடா பூன்ராச் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
2014 விருந்தாளி: தாய்லாந்து அழைக்கப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.