வளைகுடா போரில் இந்தியாவின் பங்கு தெரியுமா?

Gulf War and role of India: வளைகுடா போர் முடிவடைந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு, ஈராக், 48 குவைத் நாட்டினரின் உடல் பாகங்களை உணர்ச்சிபூர்வமாக...

ஓம் மராதே,
இந்தியன் எக்ஸ்பிரஸ் துணை ஆசிரியர்,
வெளியுறவுக் கொள்கை, சட்டம் பொறியியலில் ஆர்வம் உடையவர்

Gulf War and Role of India: வளைகுடா போர் முடிவடைந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு, ஈராக், 48 குவைத் நாட்டினரின் உடல் பாகங்களை உணர்ச்சிபூர்வமாக ஒப்படைத்துள்ளது.

வளைகுடா போர் ஆகஸ்ட் 1990 முதல் பிப்ரவரி 1991 வரை நீடித்தது. இது ஈராக்கால் நடந்த ஒரு சர்வதேச மோதல். சர்வாதிகாரி சதாம் உசேனின் கீழ் ஈராக் அண்டை நாடானா குவைத் மீது படையெடுத்து, அந்நாட்டை தன்னுடைய 19 வது மாகாணம் என்று உரிமை கோரியது. உசேன் ஐ.நா.வின் எச்சரிக்கைகளை மீறிய பிறகு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈராக் படைகளை குவைத்திலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தின.

குவைத் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஈராக் தங்கள் நாட்டை ஆக்கிரமித்த காலத்தில் சுமார் 605 பேர் காணாமல் போயுள்ளனர். வளைகுடா போர் முடிவடைந்த பின்னர், இப்போது முதல் முறையாக, சதாம் காலத்து புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட குவைத் குடிமக்களின் உடலின் பகுதிகளை ஈராக் ஒப்படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

வளைகுடா போரின் போது என்ன நடந்தது?

ஆகஸ்ட் 2, 1990-இல், ஈராக் குவைத்தை இணைத்துக்கொண்டது. அதன் தென்கிழக்கு அண்டை நாடான குவைத் ஈராக்கைவிட 25 மடங்கு அளவில் சிறியது. குவைத்தை ஈராக்கின் ஒரு பகுதி என்று உசேன் கூறினாலும், பாக்தாத் குவைத்துக்குக் கொடுக்க வேண்டிய பெரிய கடனை ரத்துசெய்யவும், குவைத்தின் பெரிய எண்ணெய் இருப்புக்களைப் பெறவும் அவர் இப்பகுதியில் படையெடுத்தார். மேலும், சதாம் உசேன் பாலஸ்தீன மோதலுடன் இணையவும் கோரினார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக ஈராக்கை கடுமையாக கண்டித்ததுடன், ஜனவரி 15, 1991-க்குள் அதன் படைகள் திரும்பபெறவில்லை என்றால் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தது.

ஐ.நா.வின் பல எச்சரிக்கைகளுக்கு உசேன் செவிசாய்க்க மறுத்ததால், அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் 35 நாடுகளில் இருந்து 7 லட்சம் துப்புகளைக்கொண்ட படை சவுதி அரேபியாவில் கூடியது. உசேனின் சாகசங்களால் ஈராக்கின் அண்டை நாடுகளும் அந்த பகுதியில் அச்சுறுத்தப்பட்டிருதன.

ஜனவரி 15 ஆம் தேதி விதிக்கப்பட்ட காலக்கெடுவை பாக்தாத் மீறியது. இதனால், கூட்டணி படைகள் முதலில் பாலைவன புயல் ஆபரேஷனை தொடங்கின. இது ஈராக்கின் வான் பாதுகாப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை அழித்தது. இதைத் தொடர்ந்து ஆபரேஷன் காலாட்படை குவைத்தை விடுவிப்பதற்காக ஒரு தரை வழி தாக்குதலை நடத்தியது. இறுதியாக பிப்ரவரி 28, 1991 அன்று அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்தபோது போர் முடிவுக்கு வந்தது.

போரின்போது, ஈராக் இராணுவம் 8,000 முதல் 50,000 மக்களை இழந்ததாக அறியப்படுகிறது. கூட்டணிப் படையில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர்.

வளைகுடா போரின்போது இந்தியா

பாத்திஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அதை அங்கீகரித்த முதல் சக்திகளில் புது டெல்லியும் ஒன்று. மேலும், குறிப்பாக மற்ற நாடுகள் பாகிஸ்தானை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த காலத்தில் பாக்தாத் தொடர்ந்து இந்திய சார்பு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தது.

வளைகுடாப் போர் தொடங்கியபோது, அந்த நேரத்தில் பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான இந்தியா, அணி சேரா கொள்கை ஒப்பந்த நிலைப்பாட்டை பேணியது. இருப்பினும், பாலஸ்தீன மோதலுடன் அப்போது வெளிப்பட்ட விரோதங்களை இணைக்க வேண்டும் என்ற பாக்தாத்தின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.

1990 ஆகஸ்ட் 13 முதல் அக்டோபர் 20 வரை, போரினால் பாதிக்கப்பட்ட குவைத்திலிருந்து இந்தியா 1,75,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியது. இது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாகும். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களை ஒரு சிவிலியன் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வு 2016 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ‘ஏர்லிஃப்ட்’ இல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close