Advertisment

ஹபீஸ் சயீத் வளர்ச்சியும் வீழ்ச்சியும் சொல்வது என்ன?

Hafiz Saeed news :

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹபீஸ் சயீத் வளர்ச்சியும் வீழ்ச்சியும் சொல்வது என்ன?

தீவிரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த நவம்பர் 19 ம் தேதி,  பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (The Financial Action Task Force – FATF) தனது நாட்டை  கறுப்புப் பட்டியலில் வைக்கும் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.

Advertisment

காஷ்மீரில் உள்ள குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த, ஹபீஸ் சயீத் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்  சிம்லாவில் வசித்து வந்தார்.1947 க்குப் பிறகு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள  சர்கோதாவில் வளர்ந்தார். அங்கு அவரது குடும்பம் விவசாயம் செய்தது. சயீத்தின் தந்தை மவுலானா கமாலுதீன் ஒரு மத போதகர்.  தனது மாமா மவுலானா ஹபீஸ் அப்துல்லா மூலம் சயீத், லஷ்கர்-ஏ-தொய்பா  என்ற மிகப்பெரிய "பயங்கரவாத" அமைப்பை நிறுவினார்.

"நிஜ வாழ்க்கையின் கட்டமைப்பில் இருந்து விலகி செல்ல  மதம் ஒரு முகவராக செயல்படுகிறது என்பதை சயீத்தின்  வாழ்க்கை நிகழ்வில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

1974 இல் பட்டப் படிப்பை முடித்த பிறகு, லாகூர்  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (யுஇடி) இஸ்லாமியத் துறையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். உயர் படிப்புக்காக சவுதி அரேபியாவிற்கு சென்ற அவர், 1979ல் ஆப்கானிஸ்தானில்  ஃபத்வா உத்தரவு பிறப்பித்த ஷேக் அப்துல் அஜீஸ் பின் பாஸ் என்ற சவுதி அறிஞரிடம் நெருக்கம் கொண்டார். இந்த கட்டத்தில் தான், ஒசாமா பின்லேடனை பல முறை சந்திக்கத் தொடங்கினார்.

1990 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் வகாபி முஸ்லிம்களோடு இனைந்து லஷ்கர்-ஏ-தொய்பா என்ற அமைப்பை உருவாக்கினர். காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பிறகு, 2003 ஆம் ஆண்டில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இது, பாகிஸ்தானில்  ஜமாத்-உத்-தவா என்ற ஈகை நிறுவனமாக அடையாளம் காணப்பட்டது. பல்வேறு  பயங்கரவாத அமைப்புகளை   ஒன்றிணைத்து அல்கொய்தா அமைப்புக்கு சேவை செய்வதில் ஹபீஸ் சயீதுக்கு  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஏப்ரல் 9, 2016 அன்று, சயீத் பாகிஸ்தானில் ரகசிய நீதிமன்றங்களை நடத்தி வருவதாக 'தி நியூஸ்' என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டது. " பாகிஸ்தானின் அரசியலமைப்பை மிஞ்சிய இந்த ஷரியா நீதிமன்றங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு வழங்கிய நீதிமன்றங்களுக்கு இணையாக இவை செயல்பட்டு வருகிறது. லாகூரில்  மட்டும் கொலை வழக்குகள் உட்பட 5,550 வழக்குகளில் ஜமாத்-உத்-தவா அமைப்பு உருவாக்கிய நீதிமன்றம்  தீர்ப்புகளை வழங்கியுள்ளது.” என்று செய்தி நிறுவனம் தெரிவித்தது.

1990 முதல் இத்தகைய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்திலும் இத்தகைய நீதிமன்றங்கள் உள்ளது.

அடிப்படைக் காரணம்?

"பாகிஸ்தான் அரசு சயீத்திடம் சரணடைந்து விட்டது.  அவரது ஆன்மீக-பயங்கரவாத சாம்ராஜ்யத்திலிருந்து வெளியேற பாகிஸ்தான் அரசு உதவியற்றநிலையில்  உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு ஏன் இந்த நிலை? இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் கட்டுரை ஆசிரியர் காலித் அகமது தனது கட்டுரையில் இரண்டு முக்கிய காரணங்களை குறிப்பிடுகிறார். இஸ்லாமின் கீழ் அரசு என்ற சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சி மற்றும்  இந்தியாவுக்கு எதிரான போக்கு ”என்று கலீத் எழுதுகிறார்.

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment