/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-26T143537.122.jpg)
hantavirus, hantavirus symptoms, hantavirus prevention, hantavirus cases, hantavirus in china
சீனாவின் வுஹான் மாகாணத்தில் துவங்கி இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில், சீனாவில் மீண்டுமொரு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சர்வதேச நாடுகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இம்முறை, சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒருவர், இந்த ஹன்டா வைரஸ் தொற்றுவுக்கு பலியாகி உள்ளார். இந்த செய்தியை, சீனாவிலிருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது. ஹன்டா வைரஸ் புது வகை வைரஸ் இல்லை என்றும், இதன் பாதிப்பு 1993ம் ஆண்டிலேயே ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உணவை கொறித்துத்தின்னும் விலங்குகளான எலி, அணில் உள்ளிட்டவைகளின் மூலம், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிகள், அணில்கள், பார்குபைன்ஸ், ஹேம்ஸ்டர்கள் உள்ளிட்டவைகள் அதிகம் வாழும் வனப்பகுதி, விவசாய நிலங்கள், பண்ணை நிலங்கள் உள்ளிட்டவைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிப்படைவதாக அமெரிக்க தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு பரவுகிறது?
ஹன்டா வைரஸ் பெரும்பாலும், உணவை கொறித்துத்தின்னும் உயிரினங்களான எலி, அணில், பார்குபைன் உள்ளிட்டவைகளையே தாக்குகிறது. இதன்மூலமே, மனிதர்களுக்கு இவ்வைரஸ் பரவுகிறது.
உணவை கொறித்துத்தின்னும் உயிரினங்களான எலி, அணில், பார்குபைன் உள்ளிட்டவைகளின் சிறுநீர், மலக்கழிவு அதன் எச்சில் உள்ளிட்டவைகளுடனான தொடர்பின் மூலமாக, இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுகிறது.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட சின் நோம்பிரே ஹன்டா வைரஸ் தாக்குதலுக்கு, மான் மற்றும் எலிகளே காரணம் என்பது கண்டறியப்பட்டது. இந்த வகை ஹன்டா வைரஸ்கள் தற்போது உணவை கொறித்துத்தின்னும் உயிரினங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை எலி மற்றும் பருத்தி எலி உள்ளிட்டவைகளிடமிருந்தே, மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், இந்த வைரஸ் தொற்று, New World hantaviruses என்று அழைக்கப்பட்டது. இது மனிதர்களிடையே சுவாசித்தலில் பிரச்சனையை உருவுாக்கும் பொருட்டு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் பாதிப்பில் சிக்கியவர்களில் 38 சதவீதம் பேர் மரணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில், ஹன்டாவைரஸ், ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவியது. இது அசாதாரண நிகழ்வாகவே கருதப்பட்டது. இந்த வகை வைரஸ் பாதிப்பிற்கு ஆண்டெஸ் வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
அறிகுறிகள் என்ன?
இந்த வைரஸ் தொற்று கொண்ட நோயாளிகளுக்கு அதிகப்படியான காய்ச்சல், அசதி, தலைவலி, வயிற்றுப்பகுதியில் பிரச்சனைகள், தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு தசை வலி ஏற்படும். 4 முதல் 10 நாட்களுக்கு பிறகே, தொடர் இருமல் மற்றும் சுவாசித்தலில் பிரச்சனையுடன் நுரையீரல் நோய் தொடர்பான அறிகுறிகள் தென்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.