உலக சுகாதார அமைப்பில் ஹர்ஷவர்தன்: நிர்வாகக் குழு அதிகாரம் என்ன?

உலக சுகாதார சபை, நிர்வாகக் குழு ஆகிய இரண்டும் பொது சுகாதார பிரச்சினைகள் குறித்து  உறுப்பு நாடுகள் எழுப்பும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகின்றன

By: Updated: May 21, 2020, 07:39:22 PM

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுவின் 147 வது அமர்வில் அதன் தலைவராக  மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலக சுகாதார அமைப்பில் (WHO) வரும் காலங்களில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

34 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவின் தலைவராக, தற்போது ஜப்பான்  நாட்டை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகாதானி இருந்து வருகிறார்.

சர்வதேச பொது சுகாதாரத்திற்கு பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான WHO தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கொண்டுவருவதற்கான உலகளாவிய முயற்சிகளில் முன்னணியில் உள்ளது.

உலக சுகாதார அமைப்பில் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் ஒரு உறுப்பு நாடாக இந்தியா  உள்ளது.  இந்தியாவின் வேட்பாளர் ஒருவரே நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பிராந்திய  உறுப்பினர்கள்  கடந்த ஆண்டே ஏகமனதாக முடிவு செய்திருந்தனர்.

நிர்வாகக் குழு :
உலக சுகாதார சபை மற்றும் நிர்வாக குழு ஆகிய இரண்டு முடிவெடுக்கும் அமைப்புகளால் உலக சுகாதார அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் அமைந்துள்ளது.

உலக சகாதார அமைப்பு வலைத்தளத்தின்படி, சுகாதாரத் துறையில் மிகவும் தகுதி வாய்ந்த 34 உறுப்பினர்களைக் கொண்டு நிர்வாக குழு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் மற்றொரு அமைப்பான சுகாதார சபைரில், 194 உறுப்பு நாடுகள் உறுப்பினர்களாக  உள்ளனர்.

ஆப்பிரிக்க, அமெரிக்கா பிராந்தியம், தென்கிழக்கு ஆசியா மண்டலம், ஐரோப்பிய மண்டலம், கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதி, மேற்கு பசிபிக் பிராந்தியம் போன்ற ஆறு பிராந்தியங்களில் சுழற்சி முறையில் ஒருவர் நிர்வாகக் குழுவின் தலைவராக ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்.

ஜனவரியில் நடைபெற்ற பிரதான நிர்வாகக் குழு கூட்டத்தில், 73வது ( மே18 -19 நாட்களில் நடைபெற்றது) சுகாதார சபை கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஒப்புக் கொள்ளப்பட்டு, சபைக்கு அனுப்பு வைக்கப்படும் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உலக சுகாதார கூட்டம் நடந்து முடிந்த பிறகு, ஆண்டின்  இரண்டாவது நிர்வாகக் குழு கூட்டம் ( மே- 22 ) கூடும் என்று எதிர்பார்கப்ப்படுகிறது. இதில், உலக சுகாதார அமைப்பில் செய்ய வேண்டிய நிர்வாக சீர்த்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.

Explained: கொரோனா வைரஸை நாய் கண்டறியுமா? விஞ்ஞானிகள் ஆய்வு

உலக சுகாதார சபையின் முடிவுகள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, ஆலோசனை வழங்குவது, அதன் பணிகளை எளிதாக்குவது போன்றவைகள் நிர்வாகக் குழுவின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

சுருங்க சொன்னால்- உலக சுகாதார சபை, நிர்வாகக் குழு ஆகிய இரண்டும் பொது சுகாதார பிரச்சினைகள் குறித்து  உறுப்பு நாடுகள் எழுப்பும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகின்றன.

உலக சுகாதார அமைப்பில் இந்தியாவின் பங்கு:  ஜனவரி 12, 1948 அன்று உலக சுகாதார அமைப்பு அரசியலமைப்போடு இந்தியா  தன்னை இணைத்துக் கொண்டது . தென்கிழக்கு ஆசியா பிராந்தியக் குழுவின் முதல் அமர்வு அக்டோபர் 4-5, 1948 அன்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வை இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.

தென்கிழக்கு ஆசியாவின் முதல் பிராந்திய இயக்குனராக  டாக்டர் சந்திர மணி நியமிக்கப்பட்டார். 1948-1968 காலகட்டத்தில் சந்திர மணி இந்த பணியில் சிறப்பாக செயல்பட்டார் . தற்போது, இந்த பதவியை மீண்டும் இந்தியர் ஒருவறான டாக்டர் பூனம் கேத்ரபால் சிங்  2014 முதல் நிர்வகித்து வருகிறார்.

2019 முதல், டாக்டர் சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Health minister harsh vardhan reportedly set to take charge as chairman at 22 may 2020 who executive board meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X