Advertisment

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி: வெப்பம் உடலை எவ்வாறு பாதிக்கிறது?

ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க, நேரடி சூரிய ஒளியில், குறிப்பாக மதியம் மற்றும் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் நீங்கள் கடுமையான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்

author-image
WebDesk
New Update
heat stroke symptoms

How heat affects the body, how to stay safe from heatstrokes

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஷாருக்கான் செவ்வாய் கிழமை வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

Advertisment

வெப்பம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் வெப்பமான இந்திய கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் எவ்வாறு தடுப்பது என்பது இங்கே.

ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?

40 டிகிரி செல்சியஸ் வரை உயரும் உடல் வெப்பநிலையை சீராக்க உடல் வியர்க்க முடியாமல், சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புகளின் கடுமையான ஏற்றத்தாழ்வு உள்ளது. அதிக உடல் வெப்பநிலை மற்றும் உப்பு ஏற்றத்தாழ்வு உறுப்புகளை சீர்குலைக்கிறது, இது பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

"இது மூளையைப் பாதிக்கலாம், ஒரு நபர் மயக்கம், சோர்வு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் கோமா நிலைக்குச் செல்லலாம். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்கும் வழிவகுக்கும். இத்தகைய தொடர் அறிகுறிகள் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக மரணத்திற்கு வழிவகுக்கிறது, ”என்று டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறுகிறார். (senior consultant of internal medicine at Indraprastha Apollo Hospital, New Delhi)

இத்தகைய கடுமையான சந்தர்ப்பங்களில், உடலின் மைய வெப்பநிலையை விரைவாகக் குறைப்பதே இதன் நோக்கம். நபர் மீது குளிர்ந்த நீரை ஊற்றுவதன் மூலமும், குளிர் பானங்கள் குடிக்கச் செய்வதன் மூலமும், உப்பு அளவை சமநிலைப்படுத்த எலக்ட்ரோலைட்களை வழங்குவதன் மூலமும் இதைச் செய்யலாம்.

நீங்கள் எப்போது மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும்?

உடல் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும், ஆனால் அவர்களுக்கு வியர்க்காது, மயக்கம், வாந்தி, சிறுநீர் வெளியேறாமல் இருப்பது, சரியாக சுவாசிக்க முடியாமல் போவது- ஒரு நபர் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்தினால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் வெப்பத்தின் தாக்கங்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், இதனால் இளைஞர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வராது என்று அர்த்தம் இல்லை, இது எந்த வயதிலும் நிகழலாம், என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார்.

ஹீட் ஸ்ட்ரோக் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க, நேரடி சூரிய ஒளியில், குறிப்பாக மதியம் மற்றும் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் நீங்கள் கடுமையான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எலக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கக்கூடிய லஸ்ஸி, எலுமிச்சை ஜூஸ், மோர் அல்லது ORS போன்ற திரவங்களை குடிக்கவும். ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை உட்கொள்ள வேண்டாம், ஏனெனில் அவை உங்களை மேலும் நீரிழக்கச் செய்யலாம்.

லைட் வெயிட், வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து, கண்ணாடிகள், குடைகள் மற்றும் காலணிகளைப் பயன்படுத்தவும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 2023 ஆலோசனையின்படி, மக்கள் கர்டெய்ன்ஸ் அல்லது ஷேட்ஸ் பயன்படுத்தி தங்கள் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும், மேலும் ஈரமான துணியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும்.

ஈரப்பதம், இரவு நேர வெப்பநிலை ஏன் முக்கியம்?

டாக்டர் திலீப் மவ்லாங்கர் (former director of the Indian Institute of Public Health, Gandhinagar), கடந்த ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, ​​உணரப்பட்ட வெப்பநிலை சுற்றுப்புற வெப்பநிலையின் உண்மையான வாசிப்பை விட அதிகமாக இருக்கும்.

அதிக ஈரப்பதம் என்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வியர்வை திறம்பட ஆவியாகாது என்பதையும் குறிக்கிறது.

"இரவு வெப்பநிலை அதிகமாக இருந்தால், உடலுக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீங்கள் வெளியேறினால், சில மணிநேரங்களில் குளிர்ச்சியான இடத்திற்கு வீட்டிற்குள் திரும்பி வந்தால், நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.

இரவு வெப்பநிலை குறைவாக இருக்கும்போது உடல் இந்த நிவாரணத்தைக் காண்கிறது. இரண்டு நாட்களுக்கு இரவில் கூட வெப்பநிலை குறையவில்லை என்றால், உடல் மீட்க முடியாது" என்று டாக்டர் மாவலங்கர் கூறினார்.

Read in English: Heatstroke sends Shah Rukh Khan to hospital: How heat affects the body, how to stay safe from heatstrokes

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment