காந்தகாரில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒன்றில் 3000 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்கள் முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இப்படியாக அரபிக் கடல் பகுதிகளில் செல்லும் கப்பல்களில் இருந்து கிலோ கணக்கில் ஹெராயின்கள் கைப்பற்றப்படுகிறது.
டெல்லி மற்றும் நொய்டா
ஜனவரி 24 : ரூ. 68 கோடி மதிப்பிலான 8 கிலோ ஹெராயின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உகண்டா வாலிபர்கள் இருவரிடம் இருந்து சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்டது.
மே 9: டெல்லியில் வசிக்கும் ஆப்கானிய தம்பதியிடமிருந்து 125 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது
செப்டம்பர் 28: முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயின் தொடர்பான விசாரணை மூலம் டெல்லியில் உள்ள குடோனில் இருந்து 16.1 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 11 கிலோ பொருள் மற்றும் கொயின் என சந்தேகிக்கப்படும் 10.2 கிலோ தூள், நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
கேரள கடற்கரை
மார்ச் 20 மற்றும் ஏப்ரல் 19 தேதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இலங்கையில் இருந்து வந்த மீன்பிடி படகில் இருந்து கைப்பற்றியது. மற்றொரு இலங்கை படகில் 340 கிலோ ஹெராயின் கைப்பற்ற பிறகு இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த இரண்டு பெரிய அளவிலான போதைப் பொருட்கள் இரானிய கப்பலில் இருந்து பெறப்பட்டது என நம்பப்படுகிறது.
ஓமன் கடற்கரை
ஏப்ரல் 23 மற்றும் 24 தேதிகளில் கனட போர் கப்பல் ஒன்று 23 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான 1,286 கிலோ ஹெராயின் மற்றும் 360 கிலோ மெதம்பெடாமைன் போதைப் பொருட்களை இரண்டு மீன்பிடி கப்பல்களில் இருந்து கைப்பற்றினர்.
சென்னை
மே 7 : தன்ஸானியா நாட்டை சேர்ந்தவர்களிடம் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 15.6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
புது மும்பை
ஜூலை 1 : நவி மும்பையில் அமைந்திருக்கும் நவ சேவா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கண்டெய்னர்களில் இருந்து 300 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
ஈரானிலிருந்து வந்ததாக கருதப்படும் கப்பல், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் இதில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடற்கரை
ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 10 : இலங்கை கப்பற்ப்டை மூன்று மீன்பிடி கப்பல்களில் இருந்து 7 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றியது.
குஜராத்
செப்டம்பர் 11 : முந்த்ராவில் 3000 கிலோ ஹெராயின் இரண்டு கண்டெய்னர்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டாக் கற்களை ஏற்றிக் கொண்டு காந்தகாரில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
செப்டம்பர் 18 : போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து ஈரானின் கோனார்க் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த மீன்பிடி கப்பலில் இருந்து 30 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹெராயின், ஆப்கானிஸ்தான், தாலிபான்
கோவிட் மற்றும் பறிமுதல்கள்
2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் உருவான ஊரடங்கு மற்றும் விமான, கடல்வழி போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக போதைப் பொருட்கள் பறிமுதல்கள் மிகவும் குறைவாகவே பதிவானது. ஆனால் பாப்பி சாகுபடி, அறுவடை மற்றும் ஹெராயின் உற்பத்தி தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை.
பெரிய அளவிலான கடத்தல்கள்
2021ம் ஆண்டு முதல், குறிப்பாக ஏப்ரலில் இருந்து பறிமுதல்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் அளவு அதிகரித்தது. ஆகஸ்ட் 31 க்குள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் துருப்புக்களை வெளியேறுவதாக அறிவித்ததிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள நிச்சயமற்ற விளைவை பெரிய ஏற்றுமதிகள் பிரதிபலித்தன.
தாலிபான் கட்டுப்பாடு
தாலிபான்களால் தான் பாப்பி அறுவடை கட்டுப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவுடனான அவர்களின் யுத்தத்தின் போது அவர்களுக்கு வருவாய் ஈட்டித் தந்த மிக முக்கியமான வாழ்வாதாரம் இதுவே. சமீபத்தில் கைப்பற்றப்படும் பெரிய அளவிலான போதைப் பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றும் தாலிபான்களின் முயற்சியைக் குறிக்கலாம். தாலிபான் ஆட்சியில் பாப்பி சாகுபடிக்கு என்ன இடம் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முந்த்ராவில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் விவகாரம் குறித்து நமக்கு இதுவரை தெரிந்தது என்ன?
40,940 கிலோ செமி ப்ரோசஸ் செய்யப்பட்ட டால்க் ஸ்டோன்களை இறக்குதி செய்ய விரும்பிய உண்மையான இறக்குமதியாளர்கள் விஜயவாடாவை சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் அவருடைய மனைவி வைஷாலி. இந்த இறக்குமதி கண்டெய்னர்களில் தான் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. விஜயவாடாவில் இவர்கள் ஆஷி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர் இது Import Export Code AOTPG6030R என்ற எண்ணில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயnங்கி வருகிறது, இந்த தம்பதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஆர்ஐ இந்த ஜோடி ஆப்கானிஸ்தானில் அதே சப்ளையர் ஹசன் ஹுசைனிடமிருந்து ஜூன் மாதத்தில் இதேபோன்ற சரக்குகளை இறக்குமதி செய்தது என்று கூறுகிறது. பிறகு இந்த சரக்குகள் சுங்கத்துறை மூலமாக டெல்லியில் உள்ள குல்தீப் சிங் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டு சரக்குகளும் நாட்டின் மிகப்பெரிய வணிக துறைமுகமான முந்த்ராவிற்கு வந்தது, அதனுடன் இணைக்கப்பட்ட SEZ, அதானி குழுமத்தால் நடத்தப்படுகிறது. துறைமுகத்திற்கு வந்த கொள்கலன்களை ஆய்வு செய்வதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அதானி குழுமம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் நமக்கு தெரியாதது என்ன?
இந்த 3000 கிலோ ஹெராயின் எங்கே கொண்டு செல்லப்பட்டது?
ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஆந்திராவில் இருக்கும் போது, அங்கே நான்கு துறைமுகங்கள் இருக்கின்ற போது பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் ஏன் முந்த்ராவில் இறக்கப்பட்டது?
போர்ட் ஆபரேட்டர் APSEZ க்கு பங்கு இருக்கிறதா? இந்த இறக்குமதியால் அதானி ஆதாயமடைந்தாரா என்பதை விசாரிக்க புஜில் உள்ள சிறப்பு NDPS நீதிமன்றம் கோரியுள்ளது.
ஜூன் மாதம் இதே போன்று இறக்குமதி செய்யப்பட்ட டால்க் கற்களிலும் போதைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டதா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில்கள் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.