கொரோனா: மளிகைக் கடை ஊழியர்கள் மூலமாக அதிக அபாயம்?

மளிகைக் கடை ஊழியர்களிடையே பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேருக்கு அறிகுறி இல்லை.

By: Updated: November 2, 2020, 04:41:21 PM

மளிகைக் கடை ஊழிழர்கள் கோவிட்-19 தொற்றுக்குள்ளாவதற்கான அதிக அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மளிகைக் கடை ஊழிழர்கள் கோவிட்-19 தொற்றுக்குள்ளாவதற்கான அதிக ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மளிகைக் கடைகளில் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் இருப்பவர்கள் மற்ற பணிகளில் உள்ள சக ஊழியர்களை விட 5 மடங்கு தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த ஆய்வு பி.எம்.ஜே குழும இதழான தொழில் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று செய்யப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேருக்கு அறிகுறிகள் இல்லை. இந்த முக்கிய தொழிலாளர்கள் நோய்த்தொற்றின் முக்கியமான ஆதாரமாக இருக்கக்கூடும் என்று அறிவுறுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள ஒரு மளிகைக் கடையின் 104 ஊழியர்களை அவர்கள் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு ஊழியரும் இந்த ஆண்டு மே மாதம் SARS-CoV-க்கு சோதனை செய்யப்பட்டனர். இதில் ஐந்தில் ஒருவர் (104 இல் 21) தொழிலாளர்கள் பரிசோதனையில் SARS-CoV-2 உறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வு 20% பாதிப்பைக் குறிக்கிறது.

ஆதாரம்: BMJ

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:High covid 19 risk found among grocery store employees new research

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X