Advertisment

அதிவேக இன்டர்நெட்: இந்தியா எப்படி 6G நெட்வொர்க்கை உருவாக்கும்?

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்கு ஆவணத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

author-image
WebDesk
New Update
How will India develop a 6G network?

How will India develop a 6G network?

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்கு ஆவணத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 6ஜி பணியின் ஒரு பகுதியாக, தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் கோட்பாட்டு மற்றும் உருவகப்படுத்துதல் ஆய்வுகளை உள்ளடக்கியதன் மூலம் ஆராய்ச்சிக்கான முன்னுரிமை பகுதிகளை இந்தியா அடையாளம் காணும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

6ஜி ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​30 கோடி இந்திய குடும்பங்களில் ஆண்டுக்கு 16 கோடி குடும்பங்கள்

ஸ்மார்ட்போன்களை வாங்குவதாக தரவுகள் கூறுகிறது. அதாவது இன்று ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 2 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு போன் என்ற அளவில் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகை இரு சக்கர வாகனங்களுக்கும் செலவிடப்படுகிறது. ஒரு சராசரி இந்தியர் தனது தனிப்பட்ட ஸ்மார்ட்ஃபோனை மதிப்புமிக்கதாகவும், அவசியமானதாகவும் பார்ப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

6ஜி என்றால் என்ன?

தொழில்நுட்ப ரீதியாக, 6ஜி இன்று இல்லை என்றாலும் 5ஜி-யை விட 100 மடங்கு வேகமான இணைய வேகத்தை உறுதியளிக்கும் மிக உயர்ந்த தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் 6ஜி சேவைகளைத் தொடங்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அப்போது கூறினார். 5ஜி வினாடிக்கு 10 ஜிகாபிட்கள் வரை இணைய வேகத்தை வழங்க முடியும். அதே சமயம் 6ஜி வினாடிக்கு 1 டெராபிட் வேகம், ultra-low latency-யில் இயக்குவதை உறுதி செய்யும்.

மத்திய அரசின் உத்தேச ஆவணத்தின்படி, 6ஜி தொழில்நுட்பம், ரிமோட்-கண்ட்ரோல்ட் தொழிற்சாலைகள், ஆட்டோமேடிக் கார்கள், ஸ்மார்ட் அணிகலன்கள் ஆகியவற்றில் பயன்படுத்த முடியும். 6ஜி வளர்ச்சிக்கு உறுதியளிக்கும் அதே வேளையில், 6ஜி ஆதரவு தகவல் தொடர்பு சாதனங்கள் பேட்டரி மூலம் இயங்கும் மற்றும் குறிப்பிடத்தக்க கார்பன் தடம் பெற முடியும் என்பதால், அதை நிலைத்தன்மையுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆவணம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 6ஜி சாலை வரைபடம் (Roadmap) என்ன?

6ஜி திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். மேலும் திட்டத்தை மேற்பார்வையிடவும், திட்டத்தில் எழும் சந்தேகம், பிரச்சனைகளை களையவும் ஒரு உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தரநிலைப்படுத்தல், ஸ்பெக்ட்ரம் அடையாளம் காணுதல், சாதனங்கள் வாங்குவது, சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் பாதை அமைப்பதற்கான ஆய்வு செய்யப்படும். ஆலோசனைகள் நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் வணிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும் நடைமுறைகள், நடைமுறைப்படுத்தலுக்கான ஐபிகள், சோதனை முயற்சி ஆகியவை செய்யப்படும்.

குறிப்பாக 6ஜி-கான அதிக அதிர்வெண் பேண்டுகளில், ஸ்பெக்ட்ரம் பகிரப்பட்ட பயன்பாட்டை அரசாங்கம் ஆராய வேண்டும். நெரிசலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளின் மறுமதிப்பீடுசெய்யப்பட வேண்டும். ட்ட பயன்பாட்டை அரசாங்கம் ஆராய வேண்டும். நெரிசலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளின் மறுமதிப்பீடு மற்றும் பகுத்தறிவு, மற்றும் தொழில்துறை 4.0 மற்றும் நிறுவன பயன்பாட்டு நிகழ்வுகளுக்கான கேப்டிவ் நெட்வொர் வசதிகள் ஆகியவையும் செய்யப்பட வேண்டும்.

6ஜி தொழில்நுட்பத்தின் தரத்தை நிறுவ 3GPP, ITU, IEC மற்றும் IEEE போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியா அதிகப் பங்கு வகிக்க வேண்டும் என்று ஆவணம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் உடனடி செயல் திட்டம் என்ன?

அரசாங்கம் பாரத் 6G திட்டத்தை உருவாக்கி, திட்டத்தை மேற்பார்வையிடவும், தரநிலைப்படுத்தல், 6G பயன்பாட்டிற்கான ஸ்பெக்ட்ரத்தை அடையாளம் காணுதல், சாதனங்கள் மற்றும் அமைப்புகளுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதியைக் கண்டறிதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதற்கு ஒரு உயர் மட்ட குழுவை நியமித்துள்ளது.

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூலம் 6G தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு இந்த உயர் மட்ட குழு உதவி மற்றும் நிதியுதவி அளிக்கும். அறிவுசார் சொத்துக்கள், தயாரிப்புகள் மற்றும் குறைந்த விலையில் 6ஜி தொழில்நுட்பம், 6ஜி ஆராய்ச்சிக்கான முன்னுரிமைப் பகுதிகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதையும் இந்தியாவை உலகளவில் முன்னணி வழங்குநராக மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

India Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment