பல ஆண்டுகளாக உயர்கல்வி நிறுவனங்களில் இடைநிற்றல்கள் குறைந்துவருகின்றன என்றும் உயர்கல்வியில் மொத்த சேர்க்கையானது அவர்களுடைய வயதுடையவர்களில் மொத்த மக்கள்தொகையில் கால்பங்குக்கு மேல் உள்ளனர் என்றும் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரண்டு தனித்தனி கேள்விகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தாக்கல் செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் இடைநிற்றல் குறைந்துவரும் போக்கு நிலவுவதைக் காட்டும் தரவுகளை மத்திய அமைச்சகம் தாக்கல் செய்தது.
ஐஐடி-க்களில் இடைநிற்றல் 2015-16-ம் ஆண்டில் இருந்த 2.25%-இல் இருந்து 2019-20-ம் ஆண்டில் 1% ஆக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், ஐ.ஐ.எம்-களில் 1.04% முதல் 1% க்கு குறைந்துள்ளது. மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 7.49% முதல் 2.82% வரை குறைந்துள்ளது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கண்காணிக்க ஆலோசகர்களை நியமித்தல் மற்றும் சக உதவியுடன் கற்றல் உள்ளிட்ட பல திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த போக்கு அடையப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஎஸ்இ+) 2018-19 தற்காலிக மற்றும் உயர் கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு 2018-19 (ஏஐஎஸ்ஹெச்இ) ஆகியவற்றிலிருந்து பெற்ற தரவை அமைச்சகம் தாக்கல் செய்தது. இது மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர் ) உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர் கல்வி மானவ மாணவிகளுக்கும் ஒன்றாக இருந்தது.
மொத்த சேர்க்கை விகிதம் வயது வித்தியாசமின்றி ஒரு குறிப்பிட்ட அளவிலான கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இது கொடுக்கப்பட்ட கல்வி நிலைக்கு அதிகாரப்பூர்வமாக ஒத்திருக்கும் வயதினரின் மக்கள்தொகையால், முடிவை 100 ஆல் பெருக்குகிறது.
உயர்கல்வி அளவில் ஏஐஎஸ்ஹெச்இ 2018-19 இன் படி, ஜி.இ.ஆர் மாணவர்கள் 26.29%, மாணவிகள் 26.36% ஆகும். பள்ளியில் மேல்நிலை அளவில், ஜி.இ.ஆர் மாணவர்களைவிட மாணவிகளின் விகிதம் சற்று அதிகம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"