Apurva Vishwanath
இந்து பெண்கள் சொத்து சட்டப்படி, குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 11ம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அதீர்ப்பை வழங்கியது. அதில், ‘திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் 2005-ன்படி, குடும்ப சொத்தின் பங்கீட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சமபங்கு உண்டு. இதில் பெற்றோருக்கு ஒருமுறை மகள் என்றால், அவர் வாழ்நாள் முழுவதும் எப்போதும் கண்டிப்பாக அவர்களுக்கு மகளாகத்தான் இருப்பாள். அதில் எந்தவிதமான மாற்றமோ அல்லது சமரசமோ கிடையாது. கடந்த 2005ம் ஆண்டு இது குறித்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னரே தந்தை இறந்து இருந்தாலும், இந்த உத்தரவு பொருந்தக்கூடிய ஒன்றாகும். அதனை மீறும் அதிகாரம் கிடையாது,’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 1956ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘’இந்து வாரிசு உரிமை சட்டம்’ தான் பெண்களுக்கும் குடும்ப சொத்தில் பங்கு உண்டு என்று முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. உதாரணமாக ஒரு ஆணுக்கு, மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் குடும்பத் தலைவனாக இருக்கும் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் ஆகியோருக்கு மட்டுமின்றி, மகள்களுக்கும் சம பங்குகளாக கிடைக்கும். அதில், அனைவருக்கும் சமஉரிமை உண்டு எனவும் குறிப்பிடப்பட்டது.
2005ம் ஆண்டு சட்டம் சொல்வது என்ன?
இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டும் இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இதனை அப்போதைய அரசான காங்கிரஸ் கட்சி நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமைகள் உண்டு என விரிவுபடுத்தப்பட்ட சட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், 2005க்கு முன்னதாக பெற்றோர் உயிரிழந்து விட்டாலோ அல்லது பாகப்பிரிவினை மேற்கொண்டாலோ பெண்கள் தங்களுக்கான பங்கு சொத்துக்களை பெறுவதற்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பெற்றோர் சொத்தில் ஆண்களுக்கு இணையாக மகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் செல்லத்தக்க ஒன்றா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘2005ம் ஆண்டு முன்பு தந்தை உயிரிழந்து இருந்தால் குடும்ப சொத்தின் பங்குகளை மகள் பெற முடியாது,’ என்று ஒரு நீதிபதியும், ‘சொத்தில் சமஉரிமை உண்டு,’ என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினர்.
வழக்கு கடந்து வந்த பாதை
2005ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தில், பெண்களுக்கும் சமஉரிமை என்ற நிலை அமல்படுத்தப்பட்ட நிலையிலும், அதில் பல்வேறு சிக்கல்கள் இருந்துவந்தன. 2015ம் ஆண்டில், பிரகாஷ் புல்வதி தாக்கல் செய்த வழக்கில், நீதிபதி ஏ கே கோயல் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது, 2005 செப்டம்பர் 9 ம்தேதி அளித்த தீர்ப்பு நடைமுறையே தொடரும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2018ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிபதி ஏ கே சிக்ரி தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், 2001ம் ஆண்டிற்கு முன்பே இறந்திருந்தால்ல மகனைப்போலவே, மகள்களுக்கும் சொத்தில் உரிமை உள்ளதென 2005ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு பொருந்தும் என்று தீர்ப்பளித்தனர்.
அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் 2015ம் ஆண்டு அளித்த தீர்ப்பின் நிலையே உறுதிப்படுத்தப்பட்டது.
இந்து வாரிசு (திருத்தம்) சட்டம், 2005ன் கீழ், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என்பதோடு, பெண்ணின் தந்தை, அந்த காலகட்டத்தில் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த சட்டத்தின்கீழ், சொத்துரிமை கொடுக்கப்பட்டே தீர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தம், திருத்தமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
2005ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில், பெண்களுக்கு சொத்தில் வழங்குவது குறித்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றம், சொத்து பங்கை பிரித்து வழங்கும் போது, ஆண் பிள்ளைகளை போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும். பெற்றோருக்கு ஒரு முறை மகள் தான் என்றாலும், வாழ்நாள் முழுவதும் மகள் தான். 2005ல் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே பெற்றோரை இழந்திருந்தாலும், சொத்தில் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிலை என்ன?
மத்திய அரசின் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெண்களுக்கும் எல்லாவிதத்தில் சம உரிமை என்பதை 2005ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்பபை மேற்கோள் காட்டி வாதிட்டார். மிதாக்ஷரா அமைப்பு, பாலின வேறுபாட்டின் படி பிரித்தாள்கிறது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, பாலின வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக மேத்தா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Hindu women inheritance rights supreme court verdict supreme court verdict on inheritance
சாரதா அம்மா கேரக்டரில் அந்த நடிகை கிடையாதாம்: தெளிவு படுத்திய ராதிகா
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5% ஒப்புக்கொண்டார்? – திருமாவளவன் கேள்வி
ராகுல் காந்தி, அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரம் : முழு விவரம் உள்ளே
அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் – மான் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை