Advertisment

குடியரசு தின அலங்கார ஊர்திகள்: வடிவமைப்பு- தேர்வு முறை எப்படி?

அணிவகுப்பிற்கு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டவணையை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வாக வெளியிடவில்லை. கிடைத்த தகவலின்படி, இந்தாண்டு அணிவகுப்பில் 21 அலங்கார ஊர்திகள் இடம்பெறவுள்ளது.

author-image
WebDesk
New Update
குடியரசு தின அலங்கார ஊர்திகள்: வடிவமைப்பு- தேர்வு முறை எப்படி?

நாட்டின் 73 ஆவது குடியரசு நாள் விழா ஜனவரி 26 ஆம் தேதி வெகு கோலாகமாகக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அணிவகுப்பில் பங்கேற்கும் மாநில அலங்கார ஊர்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Advertisment

இந்நிலையில், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில், "குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு எந்தவொரு காரணமும் அல்லது நியாயமும் கூறப்படாமல் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, மேற்கு வங்கத்தின் சார்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகளில் சிறப்பாகத் தயார் செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

அணிவகுப்பிற்கு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டவணையை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வாக வெளியிடவில்லை. கிடைத்த தகவலின்படி, இந்தாண்டு அணிவகுப்பில் 21 அலங்கார ஊர்திகள் இருக்கும். அதில் 12 மாநில அலங்கார ஊர்திகளும், மத்திய அரசு அல்லது சுயாதீன நிறுவனங்களின் கீழ் உள்ள ஒன்பது துறைகள் சார்பான ஊர்திகளும் இடம்பெறும் என தெரிகிறது.

மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி மட்டும் நிராகரிக்கப்படவில்லை, கேரளா சார்பில் முன்மொழிந்த ஸ்ரீ நாராயண குருவைக் கொண்ட அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அணிவகுப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு அமைச்சகம், இந்த முடிவு நிபுணர் குழுவால் எடுக்கப்பட்டது. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என உறுதியாக கூறுகின்றனர்.

அணிவகுப்பிற்கான அட்டவணை தயாரிக்கும் பிராசஸ் தொடங்குவது எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டங்களுக்கு பொறுப்பான பாதுகாப்பு அமைச்சகம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு துறைகள் மற்றும் சில அரசியலமைப்பு அதிகாரிகளை அணிவகுப்பில் பங்கேற்குமாறு அட்டவணை மூலம் அழைக்கிறது.

பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 80 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும், செயலாளர்கள் மூலமாக அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், தேர்தல் ஆணையம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றிற்கும் செப்டம்பர் 16 அன்று கடிதம் எழுதி அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்மொழிவுகளின் ஷாட்லிஸ்ட் செய்யும் பணி அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது.

முன்மொழிவுகளை எவ்வாறு மாநிலங்கள், துறைகள் அமைக்க வேண்டும்?

அணிவகுப்பின் பங்கேற்பாளர்கள் தங்கள் மாநிலம்/ யூனியன் பிரதேசம்/ துறை தொடர்பான கூறுகளை, மேலோட்டமான கருப்பொருளுக்குள் காட்சிப்படுத்த வேண்டும். இந்தாண்டு
வழங்கப்பட்ட தீம், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும். அதன்படி, பங்கேற்பாளர்கள் இந்தியா@75 - சுதந்திரப் போராட்டம், யோசனைகள் @ 75, சாதனைகள் @ 75, செயல்கள் @ 75 மற்றும் தீர்வு @ 75 போன்றவற்றை கருப்பொருளாக கொண்ட வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சகம் தரப்பிலும் அலங்கார ஊர்தியில் எதனை சேர்க்கலாம் என்பது குறித்த அடிப்படை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருந்தது. பங்கேற்பாளர்கள், புகழ்பெற்ற நிறுவனங்களின் இளம் தகுதி வாய்ந்த வடிவமைப்பாளர்களை" ஈடுபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அலங்கார ஊர்தியில், படங்களை பெரிதாக காட்சிப்படுத்தும் டிஜிட்டல் வால்ஸ், ரோபாட்டிக்ஸ் அல்லது மெகாட்ரானிக்ஸ் பயன்படுத்தி நகரும் சாதனங்கள், 3D பிரிண்டிங், ஆக்மென்ட் அல்லது விர்ச்சுவல் ரியாலிட்டி உபயோகித்தல், ஊர்தியை ஜோலித்திட ஸ்பெஷன் அம்சங்களும் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் ஒரே மாதிரியாக இருக்ககூடாது. ஏனென்றால், அணிவகுப்பில் நாட்டின் பன்முகத்தன்மையைக் காட்ட வேண்டும்.

முன்பக்கத்தில் ஹிந்தியிலும், பின்புறம் ஆங்கிலத்திலும், சைடில் பிராந்திய மொழியிலும் எழுதப்பட வேண்டிய மாநிலம்/ யூனியன் பிரதேசம்/ துறையின் பெயரைத் தவிர, அட்டவணையில் எந்த எழுத்தும் அல்லது லோகோவும் இருக்கக்கூடாது.

மேலும், பாதுகாப்பு அமைச்சகம் பங்கேற்பாளர்களை ஊர்சியில் பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டிக் அடிப்படையிலான பொருட்களை தவிர்த்துவிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தியிருந்தது.

ஊர்தி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

பாதுகாப்பு அமைச்சகம் கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனம் போன்ற துறைகளில் இருந்து புகழ்பெற்ற நபர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறது. அவர்கள் முன்மொழிவுகளில் இருந்து ஊர்தி ஷாட்லில்ட் செய்திட உதவுகிறார்கள்.

முதலில், முன்மொழிவுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியங்கள் அல்லது வடிவமைப்புகள் இந்தக் குழுவால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஏனென்றால், இது ஓவியம் அல்லது வடிவமைப்பில் ஏதேனும் மாற்றங்களுக்கான பரிந்துரையை செய்யலாம்.

ஓவியம் எளிமையாகவும், வண்ணமயமாகவும், புரிந்துகொள்ள எளிதாகவும், தேவையற்ற விவரங்களைத் தவிர்க்கவும் வேண்டும். இது சுய விளக்கமாக இருக்க வேண்டும். எழுத்துப்பூர்வ விளக்கங்கள் தேவையில்லை.

ஊர்தியில் ஒரு பாரம்பரிய நடனம் இருந்தால், அது நாட்டுப்புற நடனமாக இருக்க வேண்டும். ஆடைகள் மற்றும் இசைக்கருவிகள் பாரம்பரியமாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். முன்மொழிவில் அந்த நடனத்தின் வீடியோ கிளிப்பிங் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

முன்மொழிவு தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பங்கேற்பாளர்கள் தங்கள் ஊர்தியின் 3டி டிசைன் மாடலை சமர்பிக்க வேண்டும். அவை பல அளவுகோல்கள் அடிப்படையில், இறுதித் தேர்வுக்காக நிபுணர் குழுவால் மீண்டும் பரிசோதிக்கப்படுகின்றன.

இறுதித் தேர்வை மேற்கொள்கையில் நிபுணர் குழுவானது, காட்சி முறையீடு, வெகுஜனங்களின் மீதான தாக்கம், யோசனை/ கருப்பொருளின் யோசனை, இசையுடன் கூடிய மற்ற காரணிகளையும் பார்க்கிறது.

இந்த குழு பல நாள்களில் 6க்கு மேற்பட்ட முறை சந்தித்து ஆலோசித்து, ஊர்தியை ஷாட்லிஸ்ட் செய்கின்றன. ஷாட்லிஸ்ட் செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு அடுத்த ரவுண்ட் குறித்து தகவல் அளிக்கப்படும்.

ஊர்திக்கு ஏதெனும் சைஸ் உள்ளதா?

பாதுகாப்பு அமைச்சகம் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு டிராக்டர் மற்றும் ஒரு டிரெய்லரை வழங்குகிறது. அதில், ஊர்தி பொருத்தப்பட வேண்டும்.

கூடுதல் டிராக்டர் அல்லது டிரெய்லர் அல்லது வேறு எந்த வாகனத்தை அத்துடன் இணைத்திட பாதுகாப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

வேண்டுமானால், பங்கேற்பாளர் அமைச்சகம் வழங்கிய டிராக்டர் அல்லது டிரெய்லருக்கு பதிலாக மற்ற வாகனங்களை இணைத்துகொள்ளலாம். ஆனால் மொத்த எண்ணிக்கை இரண்டு வாகனங்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

டிராக்டர் ஊர்தியின் கருப்பொருளுக்கு இணங்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். மேலும் டிராக்டருக்கும் டிரெய்லருக்கும் இடையில் திருப்புவதற்கும் சூழ்ச்சி செய்வதற்கும் சுமார் ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பங்கேற்பாளர்கள் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு ஊர்தி அருகில் தரை வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யலாம்.

ஊர்தி வைக்கப்படும் டிரெய்லரின் பரிமாணங்கள் 24 அடி, 8 அங்குல நீளம்; எட்டு அடி அகலம்; நான்கு அடி இரண்டு அங்குலம் உயரம்; 10 டன் சுமை தாங்கும் திறன் கொண்டது ஆகும். எனவே, ஊர்தியானது, 45 அடிக்கு மேல் நீளத்திற்கு அதிகமாகவோ, அகலம் 14 அடிக்கு மேலாகவோ, தரையில் இருந்து 16 அடி உயரத்துக்கு மேலாகவோ இருக்கக்கூடாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi Mamata Banerjee Explained Republic Day 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment