scorecardresearch

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?

நீதித்துறை இந்த விஷயத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அணையர்களை பிரதமர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட குழுவின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

Election commission, commissioner, CEC, chief election commissioner, appointment, process, procedure, explained, Supreme Court, current affairs

தேர்தல் ஆணையத்திற்கான நியமனங்கள் தற்போது மத்திய அரசின் தனிச்சிறப்புரிமையாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இப்போது எதிர்க்கட்சிக்கும் அளிக்கிறது. நீதித்துறை இந்த விஷயத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அணையர்களை பிரதமர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட குழுவின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், இந்திய தலைமை நீதிபதியும் அடங்கிய உயர் அதிகாரக் குழு தலைமை தேர்தல் ஆணையரை (சி.இ.சி. ) மற்றும் தேர்தல் ஆணையர்களைதேர்வு செய்வது அவசியம் என்று வியாழக்கிழமை (மார்ச் 2) ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.

இது மிகவும் முக்கியமான தீர்ப்பாகும். இது இந்தியாவின் சிறந்த தேர்தல் முறைகளை உள்ளடக்கிய வழியை மாற்ற முற்படுகிறது. மேலும், தொலைநோக்கு தாக்கங்களை ஏற்படுத்தும். இப்போதைக்கு, இந்த அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசு சுதந்திரமாக செயல்படுகிறது.

நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு மத்திய புலனாய்வு (சி.பி.ஐ) இயக்குநரின் விஷயத்தில் பின்பற்றப்பட்டதைப் போன்ற ஒரு தேர்வு செயல்முறையைப் விசாரிக்கக் கோரி ஒரு தொகுதி மனுக்களில் தீர்ப்பளித்தது. இந்த அமர்வில் நீதிபதி அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ஹ்ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி. ரவிகுமார் ஆகியோர் அடங்கி இருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்த வழக்குகள் என்ன?

பொது நல மனுக்கள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நிர்வகிக்கும் சட்டங்களைக் கோரியது. 2015-ம் ஆண்டில் முதல் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 2018-ம் ஆண்டில் டெல்லி பா.ஜ.க தலைவர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த பிரச்சினையில் இரண்டாவது பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை அரசியலமைப்பு அமர்விற்கு மாற்றியது.

உச்ச ந்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் கடைசி நாளில், அருண் கோயலை மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த நியமன நடைமுறை நவம்பர் 18-ம் தேதி தொடங்கி முடிய 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிபதி ரஸ்தோகி நீதிபதி ஜோசப் அங்கீகரித்த பெரும்பான்மை கருத்துடன் உடன்படும் ஒரு தனி கருத்தை எழுதியுள்ளார். இந்த தீர்ப்பின் அச்சுப் பிரதி வெளியாகமல் நிலுவையில் உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் தற்போது எப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்?

அரசியலமைப்பின் பகுதி XV (தேர்தல்கள்தொடர்பாக) ஐந்து கட்டுரைகள் (324-329) உள்ளன. அரசியலமைப்பின் 324 வது பிரிவு, “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய தேர்தல் ஆணையத்தில் தேர்தல்களின் கண்காணிப்பு, உத்தரவு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏதேனும் இருந்தால் குடியரசுத் தலைவர் அவ்வப்போது சரிசெய்யக்கூடும் என்று கூறுகிறது.

அரசியலமைப்பு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான ஒரு குறிப்பிட்ட சட்ட செயல்முறையை வகுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன?

இந்திய அரசியலமைப்பு தேர்தல் ஆணையத்திற்கு பிரத்தியேகமான அதிகாரங்களுக்குள் செல்லாமல் பெரும் அதிகாரங்களை வழங்கியுள்ளது. ஜூன் 15, 1949-ல் பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர், “மொத்த தேர்தல் இயந்திரங்களும் மத்திய தேர்தல் ஆணையத்தின் கைகளில் இருக்க வேண்டும். இதற்கு மட்டுமே தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு உத்தரவுகளை வழங்குவதற்கு மட்டுமே உரிமை உண்டு” என்று பாபாசாஹேப் அம்பேத்கர் கூறியிருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும் மக்களின் பிரதிநிதித்துவம் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1951 சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றியுள்ளது.

‘மொஹிந்தர் சிங் கில் & மற்றும் பலர் எதிரி தலைமை தேர்தல் ஆணையர், புது டெல்லி மற்றும் மற்றும் பலர் (1977) வழக்கில் உச்ச நீதிமன்றம், பிரிவு 324 “சட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இயங்குகிறது. கண்காணிப்பு, உத்தரவு மற்றும் கட்டுப்பாடு மற்றும் என்ற சொற்கள் அனைத்து தேர்தல்களையும் நடத்துதல் என்பது பரந்த பொருள் தரக்கூடிய சொற்களாக உள்ளன. அரசியலமைப்பு இந்த விதிமுறைகளை வரையறுக்கவில்லை.

உச்ச நீதிமன்றம் பிரிவு 324 என்பது தேசிய மற்றும் மாநில தேர்தல்களுக்கான முழுப் பொறுப்பையும் இந்தய தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் ஒரு முழுமையான ஏற்பாடு என்று கூறியது.

தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வேலை பரிவர்த்தனை) சட்டம், 1991 (தேர்தல் ஆணைய சட்டம்) தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும். இந்த சட்டம் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகளை நிர்வகிக்கிறது.

தேர்தல் ஆணையம் எப்போதுமே 3 பேர் கொண்ட அமைப்பாக இருந்ததா?

தேர்தல் ஆணையம் எப்போதுமே 3 பேர் கொண்ட அமைப்பாக இருந்ததா என்றால், இல்லை. இந்திய குடியரசின் ஏறக்குறைய 40 ஆண்டுகள் 1989 வரை, தேர்தல் ஆணையம் ஒற்றை உறுப்பினர் அமைப்பாக இருந்தது. தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்தார். ஒன்பதாவது லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே, ராஜீவ் காந்தி அரசுக்கும், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஆர்.வி.எஸ், பெரி சாஸ்திரிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த வேறுபாடுகள் 1987 -ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போது அரசாங்கத்திற்கு சில சங்கடமான தருணங்களை ஏற்படுத்தியது. மேலும், 1989 மக்களவைத் தேர்தலின் போது பெரி சாஸ்திரி என்ன செய்வார் என்று பயந்த ராஜீவின் அரசாங்கம், தேர்தல் ஆணையத்தை பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக பலப்படுத்துவதன் மூலம் அவரது அதிகாரங்களைக் குறைக்க முடிவு செய்தது. எனவே, அக்டோபர் 7, 1989-ல் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன், சட்டப்பிரிவு 324(2)-ன் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூடுதலாக இரண்டு பதவிகளை உருவாக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அக்டோபர் 16, 1989-ல், அரசாங்கம் இந்த பதவிகளுக்கு எஸ்.எஸ். தனோவா மற்றும் வி.எஸ். செய்கெல் ஆகியோரை நியமித்தது.

ஆனால், இந்த ஏற்பாடு நீடிக்கவில்லை. தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. மேலும்-, பிரதமர் வி.பி. சிங்கின் தேசிய முன்னணி அரசாங்கம் அக்டோபர் 7, 1989-ல் குடியரசுத் தலைவரின் அறிவிப்பை விரைவில் ரத்து செய்தது. தேர்தல் ஆணையர் தனோவா அவரை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

வி.பி. சிங் அரசாங்கம் பின்னர் 1991-ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தை இயற்றியது. இது தலைமை தேர்தல் ஆணையருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு சமமான அந்தஸ்தை வழங்கியது. மேலும், அவரது ஓய்வு வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தேர்தல் ஆணையர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும், அவர்களின் ஓய்வு வயது 62 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் மீண்டும் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறினால், தலைமை தேர்தல் ஆணையர் அதன் தலைவராகச் செயல்படுவார். தேர்தல் ஆணையர்கள் அவரை விட ஜூனியர்களாக இருப்பார்கள் என்று தான் தேர்தல் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையம் மீண்டும் எப்போது 3 பேர் கொண்ட அமைப்பாக மாறியது?

டிசம்பர் 12, 1990-ல் டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். டி.என். சேஷன் கடுமையாக சுதந்திரமாக இருந்தார். அவர் கமிஷனின் வேலையை தீவிர ஆர்வத்துடன் மேற்கொண்டதால், பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் அக்டோபர் 1, 1993-ல் தேர்தல் ஆணையத்தை மீண்டும் விரிவாக்க முடிவு செய்தது. எம்.எஸ். கில் மற்றும் ஜி.வி.ஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்தல் ஆணைய சட்டத்தில் திருத்தம் செய்ய ஒரு அவசரச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்து, 65 வயதில் ஓய்வு பெற்று, மூன்று பேருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தை வழங்கி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்த்தை சமமாக்கியது.

இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூன்று ஆணையர்களும் இப்போது சமமான முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஒருமனதாக செயல்பட வேண்டும். ஏதேனும், ஒரு பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மை கருத்து மேலோங்கும் என்று கருதும் பிரிவுகளில் திருத்தம் செய்து அறிமுகப்படுத்தியது.

இந்த மூன்று விதிகளும் தனது அதிகாரங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சி என்று குற்றம் சாட்டி டி.என். சேஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்திய தலைமை நீதிபதி ஏ.எம்.அஹ்மதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை நிராகரித்தது. (டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையர் எதிரி இந்திய அரசு & மற்றும் பலர் ஜூலை 14, 1995), அன்றிலிருந்து இந்திய தேர்தல் ஆணையம் 3 பேர் கொண்ட அமைப்பாக செயல்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: How are the cec and ecs appointed and what has the supreme court order changed