Advertisment

இந்தியாவுடன் ஒப்பீடு: பொருளாதார வளர்ச்சியில் இடைவெளியை குறைத்த வங்கதேசம்

கட்டமைப்பு மாற்றம் மற்றும் அந்நிய செலவாணி வருவாயை ஊக்குவிக்கும் துறைகளில் வங்கதேசம் வளர்ச்சியை கண்டது.

author-image
WebDesk
New Update
How Bangladesh has reduced gap — and is now projected to go past India

 Ashikur Rahman

Advertisment

How Bangladesh has reduced gap — and is now projected to go past India :  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டில் பலர் கரையான்களை போல ஊடுருவுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு வங்கதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அமித்ஷாவின் கருத்து தேவையற்றது, பொருத்தமில்லாதது மற்றும் எந்த ஒரு தகவலையும் அடிப்படையாக கொண்டதல்ல என்று கூறியிருந்தார். சர்வதேச நிதி ஆணையத்தின் சமீபத்திய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து வெளியான தகவல்களில் கரையான்கள் என்று குறிப்பிடப்பட்ட வங்கதேசம் இந்தியா மற்றும் பாகிஸ்தானை காட்டிலும் சமூக மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்கிறது.

An Uncertain Glory: India and its Contradictions என்ற புத்தகத்தில் 2012ம் ஆண்டு அபிவிருத்தி பொருளாதார நிபுணர்கள் ஜீன் ட்ரூஸ் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோர் வங்கதேசம் அதன் அண்டை நாடுகளைக் காட்டிலும் குழந்தை இறப்பு, குழந்தை நோய்த்தடுப்பு, பெண் கல்வியறிவு, மேம்பட்ட சுகாதாரத்திற்கான அணுகல் மற்றும் மொத்த கருவுறுதல் வீதம் போன்ற இண்டிகேட்டர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். 1971ம் ஆண்டு புதிதாக உருவான இந்த நாட்டில், அன்றைய தினம் ஒரு சராசரி வங்கநாட்டை சேர்ந்தவரின் ஆயுட்காலம் 46.5% ஆகும். அது சராசரி இந்தியரின் ஆயுட்காலத்தை விட இரண்டு ஆண்டுகள் குறைவு. 2018ம் ஆண்டு வங்கநாட்டை சேர்ந்தவரின் சராசரி ஆயுட்காலம் 72 ஆண்டுகள். இது இந்தியாவை காட்டிலும் 2 ஆண்டுகள் அதிகம். பொருளாதாரத்தில், 2015ம் ஆண்டு,தனிநபர் வருமானம் இந்தியர்களை காட்டிலும் 25% குறைவாக இருந்தது. சர்வதேச நிதி ஆணையத்தின் கணிப்புகள் சரியாக இருந்தால், அந்த இடைவெளி தற்போது மறைந்துவிடும். 2025ம் ஆண்டு இந்தியாவும் வங்கதேசமும் சரிசமமாக இருக்கும்.

தொற்றுநோயால் தூண்டப்பட்ட இந்தியாவின் வளர்ச்சி (-)10%மாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் வங்கதேசம் (+) 3.8% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரு வருடத்திற்கான நிகழ்வாக இதை காண்பது தவறாகலாம். ஒவ்வொரு சமூக அல்லது பொருளாதார இண்டிகேட்டர்களும் மனித மேம்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பிடிக்க முற்படுகிறது - மேலும் ஒரு நாடு தொடர்ச்சியாக பலவிதமான இண்டிகேட்டர்களில் சிறப்பாகச் செயல்படும்போது, பொருளாதாரத்திலும் இது சாத்தியமாகும். இது சாத்தியப்படும் என்று வங்கதேசத்தில் பெரும்பாலான ஆய்வாளார்கள் காத்துக் கொண்டிருந்தனர். கொரோனா தொற்று இதனை விரைவுப்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

publive-image

இது வங்கதேசத்திற்கு எப்படி சாத்தியமானது?

வங்கதேசத்டின் பொருளாதாரம் எப்போதும் நம்பிக்கை கொண்டதாக இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு, வங்கதேசத்தை, அடியற்ற கூடை என்று வர்ணித்தார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் ஹென்றி ஹிஸிங்கர். வளர்ச்சி அடைந்த பண்டிதர்கள், மக்கள் தொகை நெருக்கமாக உள்ள ஒரு நாட்டில் குறைவான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து நம்பவில்லை. ஆனால் இந்த கருத்துகள் காலப்போக்கில் ஏற்பட்ட சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்கு காரணமாக அமையவில்லை.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

publive-image

ஒரு நீண்ட பார்வையை எடுத்துக் கொண்டால், கடந்த நாற்பது ஆண்டுகளாக வங்கதேசம் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது என்பது தெளிவாகிறது. சுதந்திரத்திற்கு பிறகு பஞ்சம் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக சில இடர்பாடுகள் ஏற்பட்ட போதும் கூட மொத்தமாக 1990களுக்கு பிறகு முன்னேற்றம் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

வங்கதேசத்தின் சராசரி ஜி.டி.பி. வளர்ச்சி கடந்த முப்பது ஆண்டுகளாக உலக நாடுகளின் சராசரி ஜி.டி.பி. வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது. 2010ம் ஆண்டில் இருந்து தெற்காசியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. 1980 முதல் ஒவ்வொரு தசாப்தத்திலும் பங்களாதேஷின் சராசரி பொருளாதார வளர்ச்சி படிப்படியாக அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், பங்களாதேஷ் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் உற்பத்தி மற்றும் சேவைகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 1980ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை விவசாயம் கொண்டிருந்தது. ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக தொழில்துறை இருந்தது. 2018 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 15% ஆக குறைந்தது. இப்போது தொழில்துறை மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 1980 ஆண்டு முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1990களில் இருந்து ஏற்றுமதி மிதமாக உள்ளது. அவை 1992ம் ஆண்டு நிதியாண்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்தது. தற்போது 2019ம் ஆண்டின் நிதியாண்டில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளன - 37 ஆண்டுகளில் (தோராயமாக) 20% வளர்ந்துள்ளது.

91ம் ஆண்டுக்கான நிதி ஆண்டின் போது பணம் பெறுதல் 764 டாலர்களாக இருந்தது. 2019ம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் அது 16.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. வங்கதேசம் உலக அளவில் பணம் பெறும் முதல் 10 இடங்களில் உள்ளது. இது வங்கதேசத்திற்கு குறைந்த ஊதிய உழைப்பிலிருந்து பணம் வருகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய பலவீனங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு 18 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் அனுப்பப்பட்டுள்ளது, இது தொற்றுநோயால் தூண்டப்பட்ட ஊரடங்கில் இருந்து ஒட்டுமொத்த கோரிக்கை அதிர்ச்சியை உறுதிப்படுத்த உதவியது.

கட்டமைப்பு மாற்றம் மற்றும் அந்நிய செலவாணி வருவாயை ஊக்குவிக்கும் துறைகளில் வங்கதேசம் வளர்ச்சியை கண்டது. இது பொருளாதார அடிப்படைகளை தக்க வைக்க பாலிசிமேக்கர்களுக்கு உதவியது. இந்த பொருளாதார முன்னேற்றத்தை தக்கவைக்க பலவீனமான வரிதிரட்டும் திறன், அதிக சுமை கொண்ட நீதித்துறை, போதிய அதிகாரத்துவ திறன் போன்ற நிர்வாக சவால்களை சரி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளும் தடையற்ற வர்த்தகக் கோட்பாட்டின் மீதான நம்பிக்கையை விரைவாக இழந்து வருவதோடு, பெரிய வர்த்தகத் தொகுதிகள் பாதுகாப்புவாதத்தை நோக்கி பெருகி வருவதால், வங்கதேசம் அது போட்டியிடும் சர்வதேச சூழலை முழுமையாக ஆராய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment