Advertisment

பெங்களூருவில் தெருநாய்கள் கணக்கெடுப்பு செய்தது எப்படி?

தெருநாய்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிடுவதுடன், இந்த ஆண்டு கணக்கெடுப்பின் நோக்கம், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு-ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி (ABC-ARV) திட்டத்தின் செயல்திறன் மற்றும் தாக்கத்தை தீர்மானிப்பதும் அடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Bengaluru stray dog census, stray dogs bengaluru, BBMP, பெங்களூரு தெருநாய்கள் கணக்கெடுப்பு செய்தது எப்படி, புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே, தெருநாய்கள் கணக்கெடுப்பு, bruhat bengaluru mahanagara palike, ABC programme, anti rabies bengaluru, bengaluru news

பெங்களூருவில் தெருநாய்கள் கணக்கெடுப்பு செய்தது எப்படி

தெருநாய்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கிடுவதுடன், இந்த ஆண்டு கணக்கெடுப்பின் நோக்கம், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு-ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி (ABC-ARV) திட்டத்தின் செயல்திறன் மற்றும் தாக்கத்தை தீர்மானிப்பதும் அடங்கியுள்ளது.

Advertisment

புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP) கர்நாடகாவின் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) பெங்களூருவில் தெரு நாய்கள் கணக்கெடுப்பைத் தொடங்கியது. இது அம்மாநில தலைநகரில் தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே கடைசியாக தெருநாய்கள் கணக்கெடுப்பு 2019-ல் மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பு அறிக்கைப்படி, பெங்களூரு நகரத்தில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது.


தெருநாய்களின் மொத்த எண்ணிக்கையை மதிப்பிடுவதோடு, இந்த ஆண்டு கணக்கெடுப்பின் நோக்கம், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு-ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி (ABC-ARV) திட்டத்தின் செயல்திறன் மற்றும் தாக்கத்தை தீர்மானிப்பதும் அடங்கும். இது விலங்குகளுக்கு ஏற்ப புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே-வால் (BBMP) செயல்படுத்தப்படுகிறது. தெருநாய் பிறப்புக் கட்டுப்பாடு விதிகள்-2001 தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை கருத்தடை செய்ய வழிவகை செய்கிறது.

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் தெருநாய் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே கணக்கெடுப்புக்கு என்ன முறையைப் பயன்படுத்துகிறது?

பெங்களூரில் தெருநாய்கள் கணக்கெடுப்பு பார்த்தல்-திரும்ப பார்த்தல் (sight-resight (SRS) method) முறையைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது என்று பி.பி.எம்.பி-யின் கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.

பார்த்தல்-திரும்ப பார்த்தல் முறையைப் பயன்படுத்தி, கணக்கெடுப்பாளர் ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் உள்ள உடல் பண்புகள் மூலம் தெருநாய்களைப் பார்த்து நினைவு கூர்ந்து பதிவு செய்கிறார்.

இந்த எஸ்.ஆர்.எஸ் முறையானது அதற்கான குறைந்த செலவு மற்றும் எளிமை காரணமாக நடைமுறையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்தல்-திரும்ப பார்த்தல் ஆய்வின் போது புகைப்படங்களைப் பயன்படுத்துவது நாய் அடையாளங்களை மேம்படுத்தியது. இது அதிக மக்கள்தொகை கணக்கெடுப்பதற்கு வழிவகுத்தது. பார்த்தல்-திரும்ப பார்த்தல் ஆய்வுகளின் போது சுதந்திரமாக சுற்றித் திரியும் தெரு நாய்களை அடையாளம் காண புகைப்படம் எடுத்தல் பயன்பாடு, தெருநாய்களின் அளவு மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றின் மதிப்பீடுகளில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

பெங்களூருவில் எஸ்.ஆர்.எஸ் முறை எப்படி பின்பற்றப்படுகிறது?

புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP) பெங்களூரு நகரத்தை 6,850 மிகக் குறுகிய மண்டலங்களாகப் பிரித்தது. அது ஒவ்வொன்றும் 0.5 சதுர கி.மீ சுற்றளவு கொண்டது. இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1,360 மிகக் குறு மண்டலங்களில் நடத்தப்படும் என்று இணை இயக்குனர் கூறினார்.

பி.பி.எம்.பி மற்றும் மாநில கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த சுமார் 100 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 100 அதிகாரிகள், தலா 2 உறுப்பினர்களைக் கொண்டு 50 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் காலை 6 மணி முதல் 8:30 மணி வரை கணக்கெடுப்பில் பணியாற்றுவார்கள். கனமழை பெய்யும் பட்சத்தில் நீட்டிப்புக்கு உட்பட்டு, 14 நாட்களில் கணக்கெடுப்பு பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அதிகாரிகள் இந்த மைக்ரோ மண்டலங்களில் இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டு ஒவ்வொரு நாளும் தோராயமாக ஐந்து கிலோமீட்டர்கள் பயணிப்பார்கள். ஒரு நாயைக் கண்டால், அவர்கள் ஒரு புகைப்படத்தைக் கிளிக் செய்து, உலகளாவிய கால்நடை சேவை (WVS) தரவு சேகரிப்பு பயன்பாட்டில் பதிவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாய் ஆணா அல்லது பெண்ணா என்பதையும், கருத்தடை செய்யப்பட்டதா அல்லது தடுப்பூசி போடப்பட்டதா என்பதையும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment