போர்வெல்லில் சிக்கும் குழந்தைகளை மீட்கும் முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவது ஏன்?

Borewell rescue operations : தேசிய பேரிடர் மீட்பு படை, கடந்த 2009ம் ஆண்டு முதல் மேற்கொண்ட போர்வெல்லில் சிக்கும் குழந்தைகள் மீட்பு நிகழ்வுகளில் 70 சதவீதம் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

By: Updated: October 31, 2019, 06:44:56 PM

Mehr Gill

திருச்சி சிறுவன் சுஜித் வில்சன், போர்வெல்லில் ( ஆழ்துளை கிணறு) சிக்கி பல போராட்டங்களிடையே 80 மணிநேரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழகத்தை இந்தாண்டு தீபாவளியை, சோக நாளாக அனுசரிக்க வைத்தது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

அதிர்ச்சி தகவல் : தேசிய பேரிடர் மீட்பு படை, கடந்த 2009ம் ஆண்டு முதல் மேற்கொண்ட போர்வெல்லில் சிக்கும் குழந்தைகள் மீட்பு நிகழ்வுகளில் 70 சதவீதம் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் போர்வெல் விதிமுறைகள் எவ்வாறு வகுக்கப்படுகின்றன?

விவசாய நடவடிக்கைகளில், நீர் பயன்பாடு மற்றும் மேலாண்மை பணிகளுக்காக, போர்வெல்கள் தோண்டப்படுகின்றன. இந்த ஆழ்துளை கிணறுகள், 100 முதல் 1,500 அடி ஆழம் வரை தோண்டப்படுகின்றன. 6 இஞ்ச் முதல் 12 இஞ்ச் வரையிலான பிவிசி பைப்புகளின் துணைகொண்டு, நிலத்தில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
போர்வெல்லில் குழந்தைகள் விழுந்து மரணம் அடைவதை தடுக்கும் பொருட்டு, உச்சநீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டில் நெறிமுறைகளை வகுத்தது. அதன்படி, இருக்கும் போர்வெல்லை சீரமைக்கவோ, பழுதை சரிபார்க்கவோ அல்லது புதியதாக போர்வெல்லை அமைக்கவோ வேண்டும் எனில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட தாலுகா அலுவலர் உள்ளிட்டோரின் அனுமதி பெற வேண்டும். போர்வெல்லை சீரமைக்கும்போதோ அல்லது பழுமதுபார்க்கும்போதோ அல்லது புதிய போர்வெல் அமைக்கும்போதோ பாதுகாப்பு வேலி அமைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். போர்வெல் குறித்த விபரங்களை, மாவட்ட நிர்வாகம் ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
சுஜித் வில்சனின் மரணத்துக்கு பின், சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

போர்வெல் மரணங்கள் எவ்வாறு நிகழ்கின்றன?

இந்தியா, சர்வதேச அளவில் நிலத்தடி நீரை பயன்படுத்தும் மிகப்பெரிய நாடு. நிலத்தடி நீரை உறிஞ்ச நாடெங்கும் 27 மில்லியன் போர்வெல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த போர்வெல்களில் தண்ணீர் வற்றியபிறகு, அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார் மற்றும் பிவிசி பைப்புகள் அகற்றப்படுகின்றன. ஆனால், அந்த போர்வெல்கள் சரிவர மூடப்படுவதில்லை. 2009ம் ஆண்டு முதல் இந்த மூடப்படாத போர்வெல்களில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் விழுந்துள்ளன. இந்த குழந்தைகள் மீட்பு விவகாரத்தில் 30 சதவீதம் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே, இந்த போர்வெல்கள் மரணத்திற்கு அதிகளவில் ஆட்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
மத்திய நீர் மேலாண்மை அமைச்சகம் நடத்திய ஆய்வின்படி, கிராமப்பகுதிகளில் 85 சதவீதமும், நகரப்பகுதிகளில் 50 சதவீதம் குடிநீர் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்கு மற்றும் விவசாய பணிகளுக்காக 55 சதவீதமும், போர்வெல்லின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த போர்வெல்களில் நீர் இருக்கும்வரை அவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் வற்றிய பிறகு, அவை பராமரிக்கப்படாததால், இதுபோன்ற போர்வெல் மரணங்கள் நிகழ காரணமாக அமைந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முன்னிலை

இந்தியாவில் அதிகளவில் போர்வெல் மரணங்கள் நிகழும் மாநிலங்களில் தமிழகம், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் (17.6 சதவீதம்) முன்னணியில் உள்ளன. ராஜஸ்தான் (11.8 சதவீதம்), கர்நாடகா (8.8 சதவீதம்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 5.9 சதவீத அளவிற்கு போர்வெல் மரணங்கள் நிகழ்வதாக தேசிய பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், இதுவரை தேசிய அளவில், 37 போர்வெல்லில் சிக்கும் குழந்தைகளை மீ்ட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் 15 நிகழ்வுகளில் மட்டுமே குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு, இந்த மீ்ட்பு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

போர்வெல்லில் காணப்படும் ஆழ்துளையின் அளவு, ஆழம், குழி தோண்டும் உபகரணங்கள், பிராண வாயு, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வசதி, ஒளி வசதி போர்வெல் அமைந்துள்ள நிலப்பகுதி உள்ளிட்டவைகளை பொறுத்து மீட்பு நடவடிக்கைகள் வேறுபடும். பொதுவாக, குழந்தை போர்வெல்லில் விழுந்து விட்டால், அந்த குழிக்கு இணையாக இரண்டு குழிகள் தோண்டப்படும். பின் அது பக்கவாட்டில் இணைக்கப்படும். இந்த குழிகளின் மூலம் அந்த குழந்தைக்கு பிராண வாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படும். ஆனால், இந்த நடைமுறை அதிக காலநேரம் எடுத்துக்கொள்வதால், குழந்தையை உயிருடன் மீட்பதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:How borewell rescues are attempted why they often fail

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X