Advertisment

குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களை குறைக்க கனடா முடிவு; இந்தியர்களுக்கான பாதிப்பு என்ன?

கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தவர்கள். கொள்கை மாற்றம் அவர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பது இங்கே

author-image
WebDesk
New Update
canada justin

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. (ராய்ட்டர்ஸ்/டெனிஸ் பாலிபௌஸ்/ கோப்பு புகைப்படம்)

Anju Agnihotri Chaba

Advertisment

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று (ஆகஸ்ட் 26) கனடா நாட்டில் "குறைந்த ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக" அறிவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: How Canada’s policy of ‘reducing low-wage, temporary workers’ may impact Indians

இந்த முடிவு சமீபத்திய கொள்கை மாற்றத்தை பிரதிபலிக்கிறது. முன்னதாக, கனடாவில் இத்தகைய தொழிலாளர்களின் எண்ணிக்கையை 2023ல் 6.2 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்கள் தொகையில் 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையால் யார் பாதிக்கப்படுவார்கள்? மற்றும் அதன் பெரிய தாக்கங்கள் என்ன? முழு விபரம் இங்கே.

கனடாவில் இந்த "தற்காலிக பணியாளர்கள்" யார்?

இவை பல்வேறு வகையான தனிநபர்களை உள்ளடக்கியது.

முதலில் தற்காலிக வேலை விசாவில் இருப்பவர்கள். அத்தகைய நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு கனடா டாலர் 13-19 (ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ. 800-1,200) வரை கிடைக்கும் வேலைகளில் பணிபுரிய ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பாக இரண்டு வருடங்கள் தங்கி வேலை செய்ய கனடாவிற்கு வருகிறார்கள்.

இரண்டாவது சர்வதேச மாணவர்கள். படிப்பை முடித்த பிறகு, பல மாணவர்கள் ஒன்று முதல் மூன்று வருட வேலை விசாவில் கனடாவில் இருக்கிறார்கள், அந்த நேரத்தில் அவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு (PR) விண்ணப்பிக்கிறார்கள். கட்டுப்பாடுகள் இருந்தாலும், மாணவர்களும் தங்கள் படிப்பின் போது வேலை செய்கிறார்கள்.

மூன்றாவதாக துணையின் (கணவன்/ மனைவி) வேலை விசாவில் உள்ளவர்கள். இந்த அனுமதியின் கீழ் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் பல சர்வதேச மாணவர்கள் தங்கள் துணையை கனடாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

நான்காவது தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு அல்லது LMIA ஒப்பந்தங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களை உள்ளடக்கியது. எல்.எம்.ஐ.,ஏ, கனேடியர்கள் கிடைக்காதபோது வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களை அனுமதிக்கிறது.

CUAET (அவசர பயணத்திற்கான கனடா-உக்ரைன் அங்கீகாரம்) மற்றும் புகலிடம் கோருவோர் போன்ற சிறப்பு மனிதாபிமான பாதைகளின் கீழ் வருகை தருபவர்கள் மற்றும் கனேடியர்கள் மற்ற நாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கும் பரஸ்பர இளைஞர் திட்டங்களில் பங்கேற்பவர்களும் தற்காலிக பணியாளர்களாகக் கருதப்படுகிறார்கள்

இத்தகைய தொழிலாளர்களை "குறைக்கும்" கனடாவின் கொள்கை இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்?

இந்தக் கொள்கை மாற்றம் கடந்த ஆண்டு வரை கனடாவின் சர்வதேச மாணவர்களில் 40 சதவீதத்தைக் கொண்டிருந்த இந்தியர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது குறிப்பாக பஞ்சாபில் இருந்து வருபவர்களை பாதிக்கும். மாணவர்கள், அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிற குறைந்த கூலி தொழிலாளர்கள் உட்பட கனடாவிற்கு வரும் இந்தியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். தற்காலிக பணியாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் இந்த நபர்களுக்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்தி, அவர்களின் வருமானம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை பாதிக்கும்.

உண்மையில், கடந்த ஆண்டு வரை, கனடா அனுமதிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அல்லது துணையின் வேலை விசாக்களை வழங்குவதில் எந்த வரம்புகளும் இல்லை. பின்னர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மேலும் ஜஸ்டின் ட்ரூடோவின் சமீபத்திய கருத்துக்கள் கொள்கை மாற்றத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன, இது கனடாவை ஒரு இடம்பெயர்வு இடமாக பார்க்கும் இந்தியர்களை மோசமாக பாதிக்கலாம்.

முந்தைய அறிக்கையில், கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர், சமீபத்திய ஆண்டுகளில் கனடாவிற்குள் நுழையும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் "கூர்மையான அதிகரிப்பு" ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமானம், குழந்தை பருவ கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற தொழில்களில் தற்காலிக தொழிலாளர்கள் முக்கியமான பாத்திரங்களை வகிக்கின்றனர் என்றும் கூறினார்.

நிரந்தர குடியுரிமைக்கான பாதையை உறுதி செய்வதன் மூலம் அமைப்பை மேலும் திறமையானதாக்க வேண்டியதன் அவசியத்தையும் மார்க் மில்லர் வலியுறுத்தினார். சில வல்லுநர்கள் இதை பாலிசியின் சாத்தியமான அம்சமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

“கொள்கை இரண்டு திசைகளில் செல்லலாம். பெரும்பாலான இளங்கலைப் படிப்புகளில் துணையின் வேலை விசாவை மூடுவதன் மூலம் தற்காலிகத் தொழிலாளர்களின் புதிய நுழைவைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படியை கனடா ஏற்கனவே எடுத்துள்ளது, ஏற்கனவே கனடாவில் இருப்பவர்களுக்கு வேலை விசாவை புதுப்பிக்கவோ அல்லது நீட்டிக்கவோ இல்லை" என்று கனடாவில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வு-வெளிநாட்டு ஆலோசகர் குர்ப்ரீத் சிங் , இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் கூறினார்.

"மாற்றாக, தற்காலிக பணியாளர்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறுவதற்கு கனடா அதிக வாய்ப்புகளை வழங்கக்கூடும், மேலும் அவர்களை கனடா பொருளாதாரத்தில் முழுமையாக ஒருங்கிணைக்க முடியும்," என்று குர்ப்ரீத் கூறினார்.

அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், கனடா எந்தப் பாதையில் செல்கிறது என்பதை பல அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்தாய்வுகள் தீர்மானிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India Canada
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment