How crop insurance changes : புதன்கிழமையன்று, மத்திய அரசு, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிர் காப்பீட்டில் மத்திய அரசு அளித்து வந்த மானியத்தில், நீர்பாசனமற்ற பகுதிகளுக்கான விவசாயத்தில் 30%-த்தையும், நீர்பாசன பகுதிகளுக்கான விவசாயத்தில் 25%-த்தையும் கட்டுப்படுத்தியுள்ளது. பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா மற்றும் மாற்றம் செய்யப்பட்ட காலநிலை சார்ந்த பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திலும் ( Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) and Restructured Weather Based Crop Insurance Scheme (RWBCIS)), வருகின்ற கரிஃப் காலத்தில் (மழைக்காலம்) விவசாயிகள் தன்னார்வத்துடன் வந்து இணைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர முயற்சிகளையும் மேற்கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
PMFBY மற்றும் RWBCIS திட்டத்தில் விவசாயிகள் மொத்த காப்பீட்டுத் தொகையில் 2%த்தினை தானியங்கள் மற்றும் கரீஃபில் விளையும் எண்ணெய் வித்துகளுக்கு கட்டுகின்றனர். ராபி காலத்தில் விளையும் எண்ணெய் வித்துகள் மற்றும் தானியங்களுக்கு 1.5% காப்பீட்டுத் தொகையை மக்கள் செலுத்துகின்றனர். அதே போன்று தோட்டக்கலை பயிர்களுக்கு 5%-மும் செலுத்துகின்றனர்.
Crop insurance changes
விவசாயிகளால் செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியம் வீதத்திற்கும், நடைமுறை பிரீமியம் வீதத்திற்கும் உள்ள வேறுபாட்டீனை இயல்பான பிரிமீயம் மானியம் (Normal Premium Subsidy) என்று அழைக்கின்றனர். இதனை மத்திய அரசும் மாநில அரசும் சமமாக பங்கிட்டுக் கொள்கிறது. ஆனால் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இயல்பான பிரிமீயம் தொகையை அம்மாநிலங்களின் நிதிநிலை அறிக்கை சமர்பிக்கும் போது அதிகரித்துக் கொள்ளலாம். இப்போது வரை மத்திய அரசுக்கு மானியம் செலுத்துவதற்கான உச்ச மேல் வரம்பு என எதுவும் இருந்ததில்லை. ஆனால் புதன்கிழமை இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏன் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு?
இந்த முடிவினால் மாநில அரசுகளுக்கு மேலும் சுமை அதிகமாகும். உதாரணத்திற்கு ஒரு கரீப் பயிர் ரூ. 1 லட்சத்திற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதன் நடைமுறை ப்ரீமியம் 40%, விவசாயி செலுத்திய ப்ரீமியம் தொகை 2%( ரூ. 2000). மீதம் உள்ள ப்ரீமியம் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் இருதரப்பும் ரூ. 19 ஆயிரம், 19 ஆயிரம் செலுத்த வேண்டும்.
ஆனால் தற்போதைய நிலையில், வருகின்ற காலகட்டத்தில் இருந்து 30% ப்ரீமியத்திற்கு மட்டுமே மத்திய அரசு மானியம் வழங்கும் என்று வைத்துக் கொண்டால், (30%-த்தில் 2% விவசாயின் ப்ரீமியம் போக மத்திய அரசும் மாநில அரசும் 14% என்று சரிசமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும்). ஆரம்பத்தில் இருந்த 19% பதிலாக வெறும் 14% மட்டுமே செலுத்தும். 30% மேல் ப்ரீமியத்தின் மதிப்பு செல்லும் என்றால் மாநில அரசு தான் மீதம் இருக்கும் அனைத்து தொகையையும் செலுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
ஏற்படும் விளைவுகள் என்ன?
மேலும் சிலரோ, சில இடங்களில் விளையும் சில பயிர்களுக்கு, ப்ரீமியம் தொகை 30%-க்கும் மேலே சென்றால், மத்திய அரசு மானியம் வழங்குவதை நிறுத்தக் கூடும் என்றும் கூறுகின்றனர். பிப்ரவரி 19ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ”மத்திய வேளாண்துறை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்ற பங்குதாரர்கள் மற்றும் முகவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, மாநில வாரியாக, அதிக ப்ரீமியம் கொண்ட பயிர்கள் மற்றும் பகுதிகளுக்கான இடர் குறைப்பு திட்டங்களை உருவாக்கி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
தேசிய அளவில் PMFBY மற்றும் RWBCIS இன் கீழ் சராசரி பிரீமியம் வீதம் 2018-19 ஆம் ஆண்டில் 12.32% ஆக இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சில மாவட்டங்களில் சில பயிர்களுக்கு ப்ரீமியம் விகிதம் 30% ஐ விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, குஜராத்தின் ராஜ்கோட்டில் கரீஃப் நிலக்கடலைக்கான ப்ரீமியம் வீதம் 49% ஐ எட்டியுள்ளது, மேலும் ராபி நெல் பயிருக்கான ப்ரீமியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் (தமிழ்நாடு) விகிதம் 42%ஐ எட்டியுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில், PMFBY மற்றும் RWBCIS திட்டங்களின் கீழ் மொத்த பிரீமியமாக ரூ .29,105 கோடி வசூலிக்கப்பட்டது. இதில் விவசாயிகளின் பங்கு ரூ .4,918 கோடி, மத்திய அரசின் பங்கு ரூ .12,034 கோடி, மற்றும் மாநிலங்களின் பங்கு ரூ .12,152 கோடி. புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, அத்தகைய பயிர்கள் பயிரிடப்படும் மாநிலங்களில் மாநிலங்களின் பங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக அபாயங்களை கொண்ட சில பயிர்களுக்கு ப்ரீமியம் தொகை செலுத்துவதை நிறுத்த விரும்புகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
இந்த திட்டங்களின் கீழ் எத்தனை விவசாயிகள் பயன் பெறுகின்றனர்?
2018-19ம் ஆண்டு காலத்தில் 5.64 கோடி விவசாயிகள் PMFBY திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மொத்தமாக ரூ. 2,35,277 கோடிக்கு தங்களின் பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் PMFBY-க்கு ஒப்புதல் அளித்தபோது, இது “விவசாயிகளின் நலனுக்கான மிகச்சிறந்த திட்டம்” என்று விவரிக்கப்பட்டது, இதன் கீழ் அரசாங்க மானியத்திற்கு மேல் வரம்பு இல்லை. “இருப்பு பிரீமியம் 90% ஆக இருந்தாலும், அது அரசாங்கத்தால் ஏற்கப்படும்” என்று ஜனவரி 13, 2016 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், PMFBYக்கு அரசாங்கம் ரூ .15,695 கோடியை ஒதுக்கியுள்ளது.
மாநில அரசுகள் இந்த முடிவை எப்படி பார்க்கிறது?
மத்திய அரசின் இந்த முடிவு, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமையையே தரும். மத்திய பிரதேச மாநிலம் 2018ம் ஆண்டுக்கான க்ரீஃப் பயிர் ப்ரிமியத்தை கூட செலுத்தவில்லை. சில நேரங்களில் விவசாயிகளுக்கு ப்ரீமியம் மிகவும் தாமதமாகவும் தரப்படுகிறது. சில மாநிலங்களில், PMFBYஇன் ப்ரீமியத்திற்கான செலவு விவசாயத்திற்கான அவர்கள் ஒதுக்கிய பட்ஜெட்டில் 50%க்கும் அதிகமாகும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் நிலை என்னவாகும்?
காப்பீட்டின் கீழ் உள்ள பகுதி மற்றும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பிரீமியம் விகிதங்களில் உயர்வுக்கு வழிவகுக்கும். இப்போதைக்கு கடன் வாங்கிய விவசாயிகளுக்கும் திட்டங்கள் கட்டாயமாகவும், மற்ற விவசாயிகளுக்கு விருப்பமாகவும் உள்ளன. பயிர் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் கடன் வாங்காத விவசாயிகள், கடன் வாங்குபவர்களை விட மிகக் குறைவு. பிந்தையவர்கள் திட்டங்களிலிருந்து விலகினால், காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதுபோன்ற சூழ்நிலையில், சில பகுதிகளில் சில பயிர்களின் பிரீமியம் வீதம் 30% ஐ தாண்டக்கூடும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”