Advertisment

சுயமாக 5 கோவிட் தடுப்பூசிகளை தயாரிக்கும் கியூபா: இதர நாடுகள் இவற்றைப் பெற விரும்புகின்றனவா?

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த வளரும் நாடுகள், மேற்கத்திய நாடுகளிடம் தடுப்பூசிக்காக போராடும் சூழலை குறைக்க கியூபாவின் மருந்துகள் உதவும்.

author-image
WebDesk
New Update
சுயமாக 5 கோவிட் தடுப்பூசிகளை தயாரிக்கும் கியூபா: இதர நாடுகள் இவற்றைப் பெற விரும்புகின்றனவா?

கொரோனா வைரஸ் தொற்றால் உணவு மற்றும் மருந்துகளில் கடுமையான பற்றாக்குறைகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் ஆளும் தீவு நாடான கியூபா, இந்த ஆண்டு இறுதிக்குள் தனது சொந்த தயாரிப்பில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவரையில், கியூபாவில் ஐந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில், இரண்டு தடுப்பூசிகள் இறுதி கட்ட ஆய்விலும், எஞ்சிய மூன்று தடுப்பூசிகள் சோதனையிலும் உள்ளன.

Advertisment

வியக்கத்தக்க வகையில் உயிர்த் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட கியூபா, தனது கனவான உள்நாட்டு மக்களுக்கு தனது சொந்த தயாரிப்பில் உருவான தடுப்பூசியை அளிப்பதற்கு, கொரோனா தடுப்பூசியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம், ஹவானாவில் உள்ள ஃபின்லே இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் சோபெரானா 2 தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவித்ததுடன், மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் தங்களது தடுப்பூசி ஆராய்ச்சி இருப்பதாகவும் அறிவித்தனர். சோதனைகள் வெற்றிகரமாக நிறைவுற்றால், தனது சொந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் ஒரே லத்தீன் அமெரிக்க நாடாக கியூபா மாறும்.

கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தனது சொந்த நாட்டு மக்களை பாதுகாப்பதை அடுத்து, தடுப்பூசி ஏற்றுமதியானது கியூபா பொது முடக்கம் மற்றும் சர்வதேச சுற்றுலா வீழ்ச்சி ஆகிய காரணங்கள் இழந்த தனது பொருளாதாரத்தை மீட்க உதவும். முடங்கியது மற்றும் கடந்த ஆண்டு சர்வதேச சுற்றுலாவில் பெரும் வீழ்ச்சியைக் கொண்டிருந்தது.

தற்போது, ​​கியூபாவில் மொத்தம் ஐந்து தடுப்பூசி மருந்துகள் சோதனையில் உள்ளது. அவற்றின் பெயர்கள் அரசியல் சார்ந்து வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி ஆராய்ச்சியில் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் சோபெரானா எனும் இரண்டு தடுப்பூசி மருந்துகளும் ஸ்பானிய மொழியில் இறையாண்மையை குறிக்கிறது. கியூப புரட்சியின் ஹீரோ ஜோஸ் மார்டி எழுதிய ஒரு கவிதையை குறிக்கும் வகையில், ஆராய்ச்சியில் உள்ள மூன்றாவது தடுப்பு மருந்துக்கு ‘அப்தலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு தடுப்பூசிக்கு ஸ்பானியர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் போராடிய கியூபா கொரில்லாக்களைக் குறிக்கும் விதமாக ‘மாம்பீசா’ என பெயரிடப்பட்டுள்ளது.

சோபெரானா 2 தடுப்பூசிக்கான இறுதி கட்ட மருத்துவ பரிசோதனைகள் கடந்த மாதம் தொடங்கியது. தடுப்பூசியின் இறுதிக் கட்ட சோதனையில் 44,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து இது நாட்டின் ஒழுங்குமுறை நிறுவனமான மருந்துகள், உபகரணங்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு (சி.இ.சி.எம்.இ.டி) ஒப்புதலுக்காக அனுப்ப ஆயத்தமாகும்.

இறுதிக் கட்ட சோதனைகளுக்கு முன்னேறிய முதல் கியூப மற்றும் லத்தீன் அமெரிக்க தடுப்பூசி சோபெரானா என, பின்லே நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குனர் டக்மர் கார்சியா ரிவேரா கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். கியூபா அதிகாரிகள் கோடைகாலத்தின் இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு சோபெரானா 2 தடுப்பூசியின் போதுமான அளவு நாட்டில் இருப்பு இருக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளனர்.

ஈரான், வெனிசுலா உள்ளிட்ட கியூபாவின் நட்பு நாடுகளிலும் இந்த தடுப்பூசிக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தற்போதைய கொரோனா சூழலில், அதற்கு எதிராக நாட்டு மக்களுக்கு எந்தவொரு தடுப்பூசியையும் அளிக்க தொடங்காத நாடுகளில் கியூபாவும் அடக்கம்.

சோபெரானா 2 மற்றும் அப்தலா தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

சோபெரானா 2 மற்றும் அப்தாலா தடுப்பூசிகள் என இரண்டும், வழக்கமான கான்ஜுகேட் தடுப்பூசிகளாகும். இதன் பொருள், கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதி செயல்திறன் மற்றும் ஸ்திரத்தன்மை இரண்டையும் அதிகரிக்கும் பொருட்டு ஒரு கேரியர் மூலக்கூறுடன் இணைக்கப்படுகிறது.

கியூபாவின் இந்த இரு தடுப்பூசிகளையும் எந்தவொரு சிறப்பு குளிர்பதன தேவைகளும் இல்லாமல் சேமித்து வைக்கலாம். இரண்டு வாரங்கள் இடைவெளியில் அளிக்கப்படும் இரண்டு டோஸ்கள் தனிநபர்களை திறம்பட நோய்த்தடுப்பு செய்ய போதுமானதாக இருக்குமா என்பது குறித்து, கியூப ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வை தொடர்ந்து வருகின்றனர். சோபெரானா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளை முடித்தவுடன் இரண்டு அல்லது மூன்று டோஸ் தடுப்பூசி தேவையா என்பதை அவர்களால் கூற முடியும்.

கியூபா அதிகாரிகளின் கூற்றுப்படி, தங்கள் நாட்டு தயாரிப்பில் உருவாகி வரும் தடுப்பூசிகள் வாங்குவதற்கு மலிவானவை மற்றும் சேமிக்க எளிதானவை என குறிப்பிட்டுள்ளனர். அவற்றை, பல வாரங்களுக்கு அறை வெப்பநிலையில் வைக்கவும், 46.4 டிகிரி வெப்பநிலையில் நீண்ட காலமாக சேமிக்ககவும் இயலும். இது, கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த வளர்ந்து வரும் நாடுகள், மேற்கத்திய நாடுகளிடம் தடுப்பூசிக்காக போராடும் சூழலை குறைக்க ஏதுவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, தடுப்பூசி வளர்ச்சிக்கு பொறுப்பான மாநில மருந்து கூட்டு நிறுவனமான பயோ கியூபார்மாவின் தலைவர் எடுவாரோ மார்டினெஸ், இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்களுக்கு செலுத்தி உள்ளோம். இது எந்தவொரு பெரிய பக்க விளைவுகளையும் இதுவரையில் ஏற்படுத்தாமல், சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு ரீதியான பதிலை அளித்து வருகிறது.

சோபெரானா -2 தடுப்பூசியின் இறுதிக் கட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் மே மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நாட்டில் 1,24,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு அப்தலா தடுப்பூசி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கியூபா தடுப்பூசிகளில் பிற நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளனவா?

கியூபாவின் சில தடுப்பூசிகளை 100 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகளை வாங்க, சில நாடுகள் கியூப அரசாங்கத்தை அணுகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை வாங்க முடியாத பல ஏழை நாடுகள், கியூபாவின் மலிவு விலை தடுப்பூசிகளின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பு இருக்கின்றன.

மெக்ஸிகோவும் அர்ஜென்டினாவும் கியூபாவின் தடுப்பூசி மீது தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், வெனிசுலா அப்தலா தடுப்பூசிகளை தயாரிக்கும் என்று அதன் அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.

கியூபாவைப் பொறுத்தவரை, அதன் சொந்த தடுப்பூசிகளை உருவாக்குவதும் ஏற்றுமதி செய்வதும் பொது சுகாதாரத்தைப் பற்றியது மட்டுமல்ல. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீண்ட காலமாக எதிர்கொண்ட ஒரு சிறிய கம்யூனிச நாடாக இருந்தபோதிலும், உயிர்த்தொழில் நுட்பத் துறையில் தனது சக்தியைக் காண்பிப்பதற்கான ஒரு வழியாகவும் கருதுகிறது. இதனால் தான் கியூபா பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடமிருந்து கோவிட் தடுப்பூசிகளை வாங்கவோ அல்லது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி பகிர்வு முயற்சிக்கு பதிவு செய்யவோ விரும்பவில்லை.

கியூபாவின் தடுப்பூசி தட பதிவு :

உலகின் மற்ற நாடுகளை காட்டிலும், சக்தி வாய்ந்த சுகாதாரத் துறையாக உருவாக்குவதாக கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உறுதியளித்தார். அதன் விளைகாக, பிடல் காஸ்ட்ரோ உயிரி தொழில்நுட்பம் மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் பெரிதும் முதலீடு செய்தார். இன்று, கியூபா தங்கள் சொந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் திறன்களைக் கொண்ட ஒரு சில வளரும் நாடுகளில் ஒன்றாகும்.

கியூபாவானது சர்வாதிகார, ஒரு கட்சி அமைப்பு மற்றும் அடக்குமுறை என்று அறியப்பட்ட நிர்வாகமாக இருந்தபோதிலும், சுகாதாரத்துறையில் ஆரம்பகால முதலீடுகள் சிறிய வளரும் தேசத்தில் ஒரு வித்தியாசமான அதிநவீன உயிரி தொழில்நுட்பத் துறையை உருவாக்க உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கியூபா பல மருத்துவ முன்னேற்றங்களுக்கு பெயர் பெற்ற நாடாக விளங்குகிறது. மூளைக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் தடுப்பூசி மற்றும் தீவிர நீரிழிவு புண்களுக்கான ஒரே சிறந்த சிகிச்சை என பல முன்னேறிய மருத்துவ சிகிச்சைகளை கியூபா உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

கியூபாவில் கொரோனா நிலைமை எப்படி இருக்கிறது?

2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உச்சத்தில் இருந்த போது, தொடர்ச்சியான பொது முடக்கம் மற்றும் பிற கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தியதன் மூலம் கியூபா தனது கொரோனா தொற்று எண்ணிக்கைகளை குறைவாக வைத்திருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு, கியூபா கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டுள்ளது. மார்ச் மாத இறுதி முதல், கியூபா ஒரு நாளைக்கு சுமார் 1,000 வழக்குகளை பதிவு செய்து வருகிறது.

இதற்கிடையில், கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளதுடன், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மக்கள் காத்து கிடக்கின்றான்ர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Corona Vaccine Cuba
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment