டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவைத் தேர்தல் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து, டெல்லி பாரதீய ஜனதா தலைமை வரும் காலங்களில் பெரும் மாற்றங்களை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, 2017 ஆம் ஆண்டு நடத்தபப்ட்ட டெல்லி நகராட்சி தேர்தலின் போது தான் கட்சிக்குள் இணைக்கபப்ட்டார். அப்போது மூன்று நகராட்சிகளையும் வென்றது பாஜக. 'பூர்வாஞ்சல்' வாக்குகளை ஒருங்கிணைப்பதில் திவாரியின் பங்கு ஒரு முக்கியமான காரணியாகக் காணப்பட்டது.
பூர்வாஞ்சல் :
கிழக்கு உ.பி. மற்றும் பீகாரில் வேர்களைக் கொண்ட மக்கள் “பூர்வஞ்சாலி” என்று கருதப்படுகிறார்கள். இவர்கள் டெல்லியில் பெரிய வாக்கு வங்கியாக கருதப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் அதிக அளவில் பூர்வாஞ்சலி வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பூர்வஞ்சாலி மக்கள் தொகை சுமார் 35 சதவீதமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிழக்கு வடகிழக்கு டெல்லியில் அதிக அளவில் குடியிருந்தாலும், நகரமயமாதலை முன்னிட்டு கடந்த 20 ஆண்டுகளில் பூர்வஞ்சாலி மக்கள் நகரம் முழுவதும் பரவி வருகின்றனர். தெற்கு மற்றும் டெல்லியின் புறநகர் பகுதிகள் தற்போது பூர்வஞ்சாலியின் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன
இந்த பகுதிகளை ஆம் ஆத்மி கட்சி தன்னை நன்கு பலப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். நரேலா, புராரி, பட்லி, ரிதலா, சுல்தான்பூர் மஜ்ரா, தியோலி, அம்பேத்கர் நகர், சங்க விஹார் மற்றும் வடகிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
பாஜகவிற்குள் மோதல்கள் : பல டெல்லி தலைவர்கள் தங்களை டெல்லி பாஜாகவின் முகமாக காட்டத் துடிக்கின்றனர் என்பது கடந்த நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடந்த நிகழ்வுகள் காட்டுகின்றது. தேசிய பாஜக தலைமையின் தலையீட்டால் தான் பிரச்சனைகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
பாஜகவின் மூலோபாயத்திற்கு பின்னடைவு : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல மத்திய அமைச்சர்கள், 200 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், 11 முதலமைச்சர்கள், கட்சியின் பல மூத்த தலைவர்கள் இந்த தேர்தலுக்காக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
பாஜக சுவரொட்டிகளில், மோடியை பிராதனப்படுத்தினாலும், தேர்தல் யுக்திகள் அத்தனையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தேறியது. அவர் நகரம் முழுவதும் 52 நடைபயணம் மேற்கொண்டார்.
ஷாஹீன் பாக் மற்றும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பாஜகவின் பிரச்சாரத்தில் முக்கிய அம்சங்களாக இருந்தன. குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு முன்பு, பாஜகவின் பிரச்சாரம், ஆம் ஆத்மி அரசின் குறைகளை விவரிக்க முயன்றது.
எவ்வாறாயினும், நிர்வாகமா? அல்லது தேசியவாதமா ? போன்ற கேள்வியை மக்களிடம் பக்குவமாய் கொண்டு சென்றது ஆம் ஆத்மி.