How did drugs end up on a goa bound cruise ship Tamil News : மும்பை கடற்கரையில் கோவா செல்லும் கப்பலில் என்சிபி அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை இரவு சோதனை நடத்தி போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். இது தொடர்பாக, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
க்ரூஸ் கப்பலை என்சிபி ஏன் சோதனை செய்தது?
சில போதைப்பொருள் விற்பனையாளர்களை விசாரித்ததில், சிலர் கோவாவிற்கு கப்பல் பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுடன் போதைப்பொருட்களையும் கொண்டு செல்வது தெரிய வந்தது என்று NCB அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த குறிப்பின் அடிப்படையில், சுமார் 20 என்சிபி அதிகாரிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிகளாக மாறு வேடமிட்டு, கோர்டெலியா கப்பலில் பயணம் செய்தனர். கப்பலில் இருந்தவர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கும் நேரம் வரை அவர்கள் காத்திருந்தனர். பிறகு அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். கப்பலின் கேப்டன் தெற்கு மும்பையில் உள்ள பல்லார்ட் பியரில் உள்ள சர்வதேச கப்பல் பயண முனையத்திற்கு மீண்டும் தங்களின் பயணத்தைத் திரும்பும்படி கூறினர். பிடிபட்டவர்கள் அருகில் உள்ள என்சிபி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வழக்கின் நிலை என்ன?
தற்போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் என்சிபி அதிகாரிகள் இரத்த பரிசோதனைகள் செய்து, அங்குள்ள சிலரின் பொருள்களைப் பரிசோதிப்பதாகக் கூறியுள்ளனர்.
கப்பலில் என்ன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன?
NCB படி, அவர்கள் கப்பலில் இருந்து கோகோயின், மெஃபெட்ரோன், MDMA மற்றும் ecstasy ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவை அவர்கள் இன்னும் கூறவில்லை. இது, அவர்கள் வழக்கில் எந்த பிரிவுகளைத் தீர்மானிக்கும் என்பதைக் குறிப்பிடும்.
போர்டில் போதைப்பொருள் கடத்தப்பட்டது எப்படி?
இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், சில பயணிகள் பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்ப்பதற்காகவும், போதைப்பொருட்களை கடத்திச் செல்வதற்காகவும் தங்கள் ஆடைகளில் சிறப்பு பாக்கெட்டுகளை தைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனது காலணியின் குதிகாலில் போதைப்பொருட்களை மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
சொகுசு கப்பல்களுக்கான பயணிகள் நுழைவு, பல்லார்ட் பியரில் உள்ள கிரீன் கேட்டில் உள்ளது. வாயில்களில் பாதுகாப்பு சிஐஎஸ்எஃப் மற்றும் மும்பை துறைமுக அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.
கோர்டெலியாவுக்கு சொந்தமான வாட்டர்வேஸ் லீஷர் டூரிஸத்தின் நிர்வாகிகள், பயணிகளுக்கான பொறுப்பல்ல. கப்பலில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பயணிகளைச் சோதிப்பது பாதுகாப்புப் படையினரின் பொறுப்புதான்.
கப்பலில் உள்ள நிகழ்ச்சி விவரங்கள் மற்றும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை விவரித்து பயணிகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு "வரவேற்பு" குறிப்பிலும், போதைப்பொருட்களைக் கப்பலில் அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது.
கப்பலில் நிகழ்வுகள் மற்றும் விருந்துகளை நடத்தக் கப்பல்கள் உரிமம் பெற்றதா?
குரூஸ் கப்பல்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு உரிமம் பெற வேண்டும்.
கப்பல் இயக்குநர் ஜெனரல் அமிதாப் குமார் கார்டெலியாவுக்கு உரிமம் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். மேலும், "இந்த கார்டெலியா கப்பல் வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் உரிமம் பெறவில்லை. உரிமம் பெற ஆபரேட்டர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அதில் சில குறைபாடுகள் இருந்தன மற்றும் உரிமம் வழங்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
கப்பல் உரிமம் இல்லாமல் இயங்குகிறதா என்று கேட்டதற்கு, கார்டெலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் வாட்டர்வேஸ் லீஷர் டூரிஸம் பிரைவேட் லிமிடெட் தலைவர் ஜுர்கன் பைலோம், "இந்த அறிக்கையின் மூலம், கார்டெலியா குரூஸ் எந்த வகையிலும் இந்த சம்பவத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். கார்டெலியா குரூஸ் டெல்லியைச் சேர்ந்த நிகழ்வு மேலாண்மை நிறுவனத்திற்கு ஒரு தனியார் நிகழ்விற்காகத் தனது கப்பலை பட்டயப்படுத்தியிருந்தது.
எங்களுடன் பயணிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வழங்குவதில் கார்டெலியா குரூஸ் மிகவும் கவனத்துடன் இருக்கிறது. இந்த சம்பவம் முரண்பாடானது மற்றும் கார்டெலியா குரூஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாச்சாரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. கார்டெலியா குரூஸில், இதுபோன்ற அனைத்து செயல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எங்கள் கப்பலை வெளியேற்றுவதைக் கண்டிப்பாகத் தவிர்ப்போம். ஆயினும்கூட, கார்டெலியா குரூஸ் எங்கள் முழு ஆதரவை வழங்கி அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறது" என்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.