Advertisment

குறைக்கப்பட்ட பி.எஃப். வட்டி விகிதம் உங்களின் ஓய்வூதிய சேமிப்பை பாதிக்கும்… எப்படி தெரியுமா?

அப்போது 20 ஆண்டுகள் கழித்து, இதே 8.5% வட்டியுடன், அவருக்கு ரூ. 1.32 கோடி கார்ப்பஸ் கிடைக்கும். ஆனால் 8.1% வட்டியில் அது 1.25 கோடியாகவே கிடைக்கும். அதாவது ரூ. 7 லட்சம் வரை கார்ப்பஸில் குறைவு ஏற்படும்.

author-image
WebDesk
New Update
How does provident fund interest rate cut impact your retirement corpus

Aanchal Magazine , Sandeep Singh 

Advertisment

provident fund interest rate cut : 2021 மற்றும் 22 ஆண்டிற்கான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறங்காவலர் குழு பரிந்துரை செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. பிஎஃப் வட்டி வீதம் குறைக்கப்பட்ட பிறகு சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று சந்தைகள் எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாற்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு பி.எஃப். வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இ.பி.எஃ.ஒ அமைப்பில் 6.7 கோடி சந்தாதாரர்களும், 6.9 லட்சம் நிறுவனங்களும் இணைந்துள்ளன. வட்டி வழங்கப்பட்ட பிறகு ரூ. 450 கோடி வரை உபரி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விகிதத்தை 8.5% ஆக வைத்திருந்தால், 3,500 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

publive-image

சிறு சேமிப்பு திட்டங்களுடன் பி.எஃப். விகிதம் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?

வட்டி விகிதம் 40 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்ட பிறகும், சிறு சேமிப்பு, ஆண்டுக்கு 2.5 லட்சம் வரையிலான பங்களிப்புக்கு இ.இ.இ. பலன்களை வழங்கும் இ.பி.எஃப். திட்டங்களில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக இவை பயனாளிகளுக்கு அதிக லாபத்தையே வழங்குகிறது. கடந்த ஆண்டு 2021-22 பட்ஜெட்டில், ஒரு வருடத்தில் ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான பங்களிப்புகளிப்புகளை வழங்கும் சந்தாதாரர்களின் வட்டி வருமானத்திற்கு வரி விதிக்க முன்மொழியப்பட்டது. வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பிறகும் கூட 8.1% என்பது அதிகமான வட்டியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் 7.6% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பி திட்டத்திற்கு 7.4% வட்டியும், பப்ளிக் ப்ரோவிடண்ட் ஃபண்டிற்க்கு 7.1% வட்டியும் வழங்கப்படுகிறது.

இது கார்ப்பஸை எவ்வாறு பாதிக்கும்?

சேவையை முடிக்கும் போது இது பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு ரூ. 10 லட்சம் இ.பி.எஃப். கார்ப்பஸாக, மார்ச் 31, 2021 அன்று வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய வருடாந்திர பங்களிப்பானது ரூ. 1.2 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அது வருமான உயர்வு உள்ளிட்டவையை உள்ளடக்கினால் ஆண்டுக்கு 5% வரை உயரும் என்று எடுத்துக் கொள்வோம். அப்போது 20 ஆண்டுகள் கழித்து, இதே 8.5% வட்டியுடன், அவருக்கு ரூ. 1.32 கோடி கார்ப்பஸ் கிடைக்கும். ஆனால் 8.1% வட்டியில் அது 1.25 கோடியாகவே கிடைக்கும். அதாவது ரூ. 7 லட்சம் வரை கார்ப்பஸில் குறைவு ஏற்படும்.

வட்டி விகித குறைப்பு குறித்து அரசு கூறியிருப்பது என்ன?

மாத சம்பளம் பெறும் வகுப்பினருக்கு பெரும் அடியை தந்துள்ளது இந்த வட்டி விகிதக் குறைப்பு. பெரும்பாலும் ஓய்வு மற்றும் இதர முக்கிய இலக்குகளுக்காக பி.எஃப்.பில் சேமிப்பை துவங்கும் மக்கள் இவர்கள் ஆவார்கள். CPI பணவீக்கம் 6% ஐத் தாண்டியிருக்கும் நேரத்தில், நிலையான வைப்புகள் உட்பட பெரும்பாலான நிலையான வருமான திட்டங்கள் எதிர்மறையான வட்டி விகிதங்களை உருவாக்குகின்றன. வரிக்குப் பிந்தைய உண்மையான வட்டியை உருவாக்கும் சில கருவிகளில் பி.எஃப். திட்டமும் ஒன்று.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்த போது, இபிஎப்ஓவின் முதலீடுகள் வணிகப் பத்திரங்கள் போல இல்லை; இது ஒரு அர்ப்பணிப்பு, தொழிலாளர்களுக்கு உத்தரவாதம். அறக்கட்டளையின் பணம் பாதுகாப்பாகவும், பாதுகாப்பாகவும், சிறந்த வருமானத்தை வழங்குவதாகவும் இருக்க வேண்டும்.

இதே நேரத்தில் 10 வருட நிலையான வைப்புத் தொகையை கொண்டுள்ள எஸ்.பி.ஐ. வங்கி 5.45% வட்டியே வழங்குகிறது. அதே போன்று பி.பி.எஃப். சேமிப்பு கணக்கு 6.8% முதல் 7.1% வரையிலான வட்டியை வழங்குகிறது. சமூக பாதுகாப்பு வழங்குவதை கருத்தில் கொண்டும், உலக நிலவரம் மற்றும் சந்தையின் நிலையற்ற தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதிக அபாயங்கள் கொண்ட திட்டத்தில் முதலீடு செய்ய இயலாது என்பதால் நாங்கள் 8.10% என்ற வட்டியை பரிந்துரை செய்கிறோம் என்று கூறினார்.

பல ஆண்டுகளாக, நிதி அமைச்சகம் EPFO ஆல் தக்கவைக்கப்பட்ட உயர் வட்டி விகிதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. மேலும் அதை 8%க்கும் குறைவாக குறைக்க வழி வகை செய்தது. இது 2019-20 மற்றும் 2018-19 வட்டி விகிதங்கள் 8.65%-ஆக இருந்ததை எதிர்த்து கேள்வி எழுப்பியது. IL&FS மற்றும் அதுபோன்ற நிறுவனங்களுக்கு EPFO சேவைகள் வழங்கப்படுவதை கேள்வி எழுப்பிய அமைச்சகம் அதனை ஆபத்தானது என்றும் அறிவித்தது.

இ.பி.எஃப். வருமானத்தின் மீதான வரி எவ்வாறு செயல்படும்?

இந்த முன்மொழிவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பி.எஃப். மற்றும் கிராஜூவிட்டிக்கான ஆண்டு வருமானமும், தானாக முன் வந்து சேமிக்கப்படும் இ.பி.எஃப். பங்களிப்பும் இதில் அடங்கும். மொத்தப் பங்களிப்பு ரூ. 2.5 லட்சத்தைத் தாண்டினால், அதன் மீதான வட்டி மீதான வருமானத்தில் சிறிய அளவு வரி பிடித்தம் செய்யப்படும். முக்கியமாக, இது பணியாளர்களின் பங்களிப்புக்கு மட்டுமே பொருந்தும் தவிர முதலாளிகளின் பங்களிப்பில் இல்லை.

30% அதிக வரி வரம்பில் உள்ள தனிநபருக்கு, ரூ. 2.5 லட்சத்துக்கும் மேலான பங்களிப்புகளுக்கான வட்டி வருமானம் அதே விளிம்பு வரி விகிதத்தில் வரி விதிக்கப்படும். அதாவது, ஒரு தனிநபர் ஒவ்வொரு ஆண்டும் PFக்கு (தன்னார்வ PF பங்களிப்பு உட்பட) ரூ. 3 லட்சம் பங்களிப்பதாக இருந்தால், அவர் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் அதாவது ரூ. 50,000க்கான வட்டியில் வரி விதிக்கப்படும். எனவே வட்டி வருமானம் ரூ.4,050-த்தில் (ரூ. 50,000 இல் 8.1%) வரி விதிக்கப்படும். தனிநபர் அதிகபட்ச வரி 30% வரம்பிற்குள் வந்தால், அவர் ரூ.1,262 வரி செலுத்த வேண்டும்.

ஒரு வருடத்தில் ரூ.12 லட்சத்தை செலுத்தும் தனிநபருக்கு, ரூ.9.5 லட்சத்திற்கான (ரூ. 12 லட்சம் கழித்து ரூ. 2.5 லட்சம்) வட்டி வருமானத்தின் மீது வரி விதிக்கப்படும். ரூ.23,985-ஐ அவர் வட்டியாக செலுத்த வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment