2021-22-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி (திங்கள் கிழமை) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பிறகு இரண்டாம் அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி 11% அடையும் என்று கணிக்கப்பட்டது, என்பது பற்றி இங்கு விரிவாக காணலாம்.
கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7% இருமென்று கணிக்கப்பட்டு இருந்தது. இந்த (2021-22) நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11% இருக்கும் என்று நிதி அமைச்சின் பொருளாதார ஆய்வு திட்டங்கள்
கூறுகின்றன. அதோடு நாட்டின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 15.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த நிதி ஆண்டில் நிலவுள்ள 4.4 சதவீத பணவீக்கத்தை கணக்கில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் நாட்டின் வளர்ச்சி 11 சதவீதத்தை அடையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது?
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றின் பாதிப்பால் வீழ்ச்சியில் இருந்தது. தற்போது சூழ்நிலைகள் மாறாத் துவங்கியுள்ளன, அனைத்து துறைகளும் மீண்டும் பணி புரிய துவங்கியுள்ளன. எனவே இந்திய பொருளாதாரத்தில் வளர்ச்சி இருக்கும்.
இதற்கு உதவும் வகையில் சில சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை தளர்த்தல் போன்றவை வழங்கப் பட உள்ளன.
அதில் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு உந்துதல், உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் மூலம் உற்பத்தித் துறைக்கு
ஊக்கமளித்தல், சேவைத் துறைக்கான தேவையை மீட்டெடுப்பது, தடுப்பூசி தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து போதுமான
பணப்புழக்கத்தைக் கொடுத்து கடன் பெறுதல், விருப்பப்படி நுகர்வு அதிகரிப்பு மற்றும் குறைந்த கடன் வழங்கல் போன்றவையும் ஆகும்"
என்று அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஏன் முக்கியமானது?
தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதோடு கடந்த நிதியாண்டை 2.4 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி அடையும் என்பதை குறிப்பிடத்தக்க ஒன்றாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
இவை மற்ற திட்டங்களுடன் பொருந்துமா?
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகளுக்கு இணங்க, 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்குமென்றும், அது 2022-23 ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாக இருமென்றும் மத்திய நிதியமைச்கம் தனது சர்வேயில் கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப் படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடக
இந்தியா உருவெடுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது