/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-18T194305.374.jpg)
300க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் முதல்கட்ட ஆய்வில் வேகமான பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இருகும் என்று நோயாளிகள் சிகிச்சை பெற்ற ஹூஸ்டன் மெத்தடிஸ்ட் நெட்வொர்க் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளது. அதன் முதல்கட்ட ஆய்வு முடிவுகள் தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பேத்தாலஜியில் வெளியிடப்பட்டுள்ளன.
மார்ச் 28ம் தேதி ஹூஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட பிளாஸ்மாவை கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தி அமெரிக்காவின் முதல் மருத்துவக் கல்வி மையமாக ஆனது. அப்போதிலிருந்து, ஆராய்ச்சியாளர்கள் 350 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையைப் பயன்படுத்தினர். மார்ச் 28 முதல் ஜூலை 6 வரை ஹூஸ்டன் மெதடிஸ்ட் அமைப்பில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கடுமையாக நோய்வாய்ப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை இந்த ஆய்வு கண்காணித்து வந்துள்ளது.
இந்த ஆய்வு சிகிச்சையின் மருத்துவ செயல்திறனை அளவிடுகிறது. மோசமாக நோய்வாய்ப்பட்ட கோவிட் -19 நோயாளிகளை அவர்களுடைய நோயின் ஆரம்பத்தில் அதிக ஆன்டிபாடி பிளாஸ்மாவுடன் மாற்றுவதற்கான அறிவியல் சான்றுகளை இது வழங்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதத்தையும் குறைத்துள்ளது.
கோவிட் -19 எதிர்ப்பு ஆன்டிபாடிகள் அதிக செறிவுள்ள பிளாஸ்மாவுடன் ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்டவர்கள், வேகமான பிளாஸ்மாவுடன் சிகிச்சை அளிக்கப்படாத நோயாளிகளைக் காட்டிலும் உயிர்வாழவும் நோயிலிருந்து மீளவும் அதிக வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அதே நேரத்தில், இந்த ஆராய்ச்சியானது இரத்தமாற்றத்திற்கு கடுமையான எதிர்விளைவுகள் கொண்ட நோயாளிகளையும் சிகிச்சையளிக்கப்படாத மற்றும் சிகிச்சையளிக்க முடியாத இறுதி கட்ட நோய்களைக்கொண்ட நோயாளிகளையும் அதிக திரவம் கொண்ட அல்லது பிளாஸ்மா மாற்றம் செய்யும் அபாயத்தை அதிகரிக்கும் நிலைமைகளைக் கொண்ட நோயாளிகளையும் விலக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.