Advertisment

குழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா?

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை  பரப்புவதில் குழந்தைகளின் செயல்பாடுகள் பெரியவர்களைப் போலவே உள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
under five age kids carry high viral load

Coronavirus Updates

சமீப காலம் வரை, கொரோனா பரவலில், குழந்தைகளின் பங்கு குறைவானது என்று நம்பப்பட்டது. இருப்பினும், நாவல் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை  பரப்புவதில் குழந்தைகளின் செயல்பாடுகள் பெரியவர்களைப் போலவே உள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில, ஆய்வுக் கட்டுரைகள் இந்த கூற்றை ஏற்க மறுக்கின்றன.

Advertisment

1. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, JAMA Pediatrics எனும் நாளிதழில் கடந்த வாரம் வெளியானது.  லேசான மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகளை வெளிபடுத்திய 145 குழந்தைகளின் மூக்கில் இருந்து வந்த நீர்த்துளிகளிலும், எச்சிலிலும் இருந்த வைரல் சுமையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். 5 வயதுக்குட்பட்ட மழலையர்கள், 5-17 வயதுடைய குழந்தைகள்,  பெரியவர்கள் என மூன்று வயதுப் பிரிவினரிடமும்  இந்த வைரல் சுமை ஒப்பிடப்பட்டது.  ஆய்வு முடிவில், மற்ற வயதுப் பிரிவினரை விட ,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் வைரல் சுமை  அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இளைஞர்கள் போலவே கொரோனா பெருந்தொற்றை பரப்புவதற்கான திறன் குழந்தைகளிடம் உள்ளது என்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகின்றன என்று சிகாகோவின் ஆன் & ராபர்ட் எச். லூரி குழந்தைகள் மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

2. கடந்த வாரம், 'preprint server' வளையதளத்தில் வெளியிடப்பட்ட  இத்தாலிய ஆய்வு ஒன்று,"கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரோடு தொடர்பில் இருந்த ஒரு குழந்தை பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருய்ந்தாலும், பாதிக்கப்பட்ட அந்த குழந்தை, குடும்ப உறுப்பினர்களை பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது"என்று பரிந்துரைத்தது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இத்தாலியின் ட்ரெண்டோ மாகாணத்தில், தொடர்பு தடமறிதல் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட  2,812 பேரின், 6,690 சமூக தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர். அடையாளம் காணப்பட்டவர்களில் 890 (13%) பேர் கொரோனா நோய்க்கான  அறிகுறிகளை உருவாக்கினர். 2,812 பேரில் குறிப்பாக 15 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகளின் நோய்ப் பரவல் விகிதம் மிகவும் ஆபத்தானது என்று பகுப்பாய்வு கண்டறிந்தது. உதாரணமாக, 14  குழந்தைகளில் எட்டு பேர் (வயது 1-11) தங்கள் தொடர்பில் இருந்த 49 பேரில் 11 பேருக்கு (  (22% சதவீத பாதிப்பு ) கொரோனா பாதிப்பை ஏற்படுத்தினர்.

3. மூன்றாவது  ஆய்வு, தென் கொரியாவில் மேற்கொள்ளப்பட்டது. கோவிட்- 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட  5,706 பேரின், 59,073 சமூக  தொடர்புகளை ஆய்வு செய்தனர். 10,592 குடியிருப்போடு தொடர்புடைய, 11.8% பேருக்கு கொரோனா பெருந்தொற்று  உறுதி செய்யப்பட்டது; 48,481  குடியிருப்போடு தொடர்பில்லாத தொடர்புகளில், 1.9% பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது.

10-19 வயதுடைய கொரோனா நோயாளியைக் கொண்ட ஒரு குடியிருப்பில், 18.6% தொடர்புகள் கொரானாவால்   பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மற்ற வயதினரின் சராசரி போஆதிப்பு விகிதம்  11.8% என்ற அளவில் இருந்தனர்.  இதன் விளைவாக, வயதான குழந்தைகளும், இளைஞர்களும் தான் கொரோனா பரவலை அதிகமாக பரப்பும் திறன் கொண்டவர்கள் என்று கூறப்பட்டது.

4.  சுவிட்சர்லாந்தில்  மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் நாளிதழில் வெளியானது.

மார்ச் 10 முதல் ஏப்ரல் 10 வரை ஜெனீவா பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 16 வயதிற்குட்பட்ட  குழந்தைகளின் குடியிருப்பு தொடர்புகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர்.  40 குடியிருப்புகளில்  , மூன்றில் மட்டுமே குழந்தை முதன்மை நோயாளிகாக இருந்தனர் என்பதை ஆய்வாளர்கள் முதலில் கண்டறிந்தனர். மற்ற, குடியிருப்புகளில்,பெரியவர்களுக்குப் பிறகு அல்லது பெரியவர்களுடன் இனைந்து நோய் அறிகுறிகளை உருவாக்கியுள்ளனர்.  இதன்மூலம்,  பெரியவர்கள் தான் குழந்தையை பாதிப்படையச் செய்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment