Advertisment

மாநிலங்களை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஜி.எஸ்.டி யில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன?

முதலில் ஜிஎஸ்டி வருவாய் நடுநிலைமையோடு அமையவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதம் அவ்வப்போது குறைக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாநிலங்களை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற  ஜி.எஸ்.டி யில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன?

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று தனது   நான்காம் ஆண்டிற்குள் நுழையும் போது, கொரோனா பெருந்தொற்று பொது முடக்கநிலை காரணமாக,   ஜிஎஸ்டி கடினமான சோதனையை எதிர்கொள்வதாக பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

Advertisment

இது 2015-16-ஆம் ஆண்டின் வரிவசூலின் அடிப்படையில் மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்பட வேண்டி  14% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்ற அளவுகோல் முதல் இரண்டு ஆண்டுகளில் பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் 2019-ல் இருந்து பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், 14 சதவீத “உயர்” வருவாய் வளர்ச்சி விகித அனுமானம் கேள்வியாக்கப்பட்டுள்ளதாக சுஷில் குமார் மோடி குறிப்பிடுகிறார்.

கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தைத் தவிர, வேறு எந்த மாதமும் ஜிஎஸ்டி வருவாயில் இரட்டை இலக்க வளர்ச்சியைக் காணவில்லை. செப்டம்பர், அக்டோபர், மார்ச் ஆகிய மாதங்களில் எதிர்மறை வளர்ச்சியை வெளிப்படுத்தியது. எனவே, தற்போது மாநிலங்களின் வருவாய்  இழப்பீடு செய்வதற்கான வழிகளை உருவாக்குவது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக் கூடும். சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையான காலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக ரூ.36,400 கோடியை மத்திய அரசு ஜூன் நான்காம் தேதி தான் விடுவித்தது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான வசூல் 2019-20 நிலைகளில் வெறும் 46%  இருப்பதால் விரைவில்  இந்த நிலைமை மேம்பட வாய்ப்பில்லை,” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, மத்திய அரசாங்கத்தின் கடன் வாங்கும் திறன் குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், நாம் சந்தித்து வரும் இந்த நெருக்கடிக்கு கடன் தீர்வாகாது என்று மோடி தெரிவிக்கிறார். கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் பொருளாதார நிலையின்மை, வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 14 சதவீத கூடுதல் வருவாய் போன்றவைகளை கருத்தில் கொண்டு பார்த்தால்  கடன் வாங்குவதில் உள்ள பல சிக்கல்கள் தெரிய வரும். உதாரணமாக, அது  எப்போது?  எப்படி? திருப்பிச் செலுத்தப்படும்… உண்மையில், அது பிரச்சனையைத் தீர்க்கவில்லை மாறாக நெருக்கடியை சற்று தள்ளிவைக்கிறது” என்று சுஷில் குமார் மோடி வாதிடுகிறார்.

மாற்றாக, மத்திய  அரசு நீண்ட காலக் கடன்கள் மூலமாக மாநிலங்களின் இழப்பீட்டிற்கு  நிதியளிக்கலாம் என்ற கூற்றை ஏற்க மறுத்த மோடி"கடன் வாங்குவதற்கான அடிப்படை வரம்புகள் உள்ளன. மேலும், நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிதி கட்டுப்பாட்டு வழியில் செல்ல வேண்டிய காட்டயாத்தில் இந்தியா உள்ளது" என்று கூறுகிறார்.

மேலும்,மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மத்திய அரசின் உத்தரவாதத்தின் பேரில் ஜிஎஸ்டி கவுன்சில் கடன் பெறலாம் என்ற கூற்றையும் சிலர் முன்வைக்கின்றனர். ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் இதுபோன்ற எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவனம் அல்ல” என்று மோடி தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களைப் பற்றி பேசிய சுஷில் குமார் மோடி, "முதலில் ஜிஎஸ்டி வருவாய் நடுநிலைமையோடு அமையவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதம் அவ்வப்போது குறைக்கப்பட்டது. முக்கியமாக நவம்பர் 2017 மற்றும் ஜூலை 2018 ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் குறைப்பு மிக அதிகம்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், " சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் வரி அடித்தளத்தை கொண்ட ஜிஎஸ்டி சேவையில், வரி விகிதத்தில் 1 சதவீதத்தை உயர்த்தினாலும்,ரூ.60,000 கோடி வருவாய் வசூலிக்கப்படும். ஆனால், அதை செய்வதற்கு இது உகந்த காலம் கிடையாது என்று நினைக்கிறன். இருப்பினும், நிலைமை மோசமடைந்தால் இதனை கட்டாயம் நாம் விவாதிக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.

இறுதியாக, ஜிஎஸ்டி விகித கட்டமைப்பை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சுஷில் குமார் மோடி குறிப்பிடுகிறார். அதவாது, ஒரு பொருளின் மீதான மொத்த வரியில் 60 (அ) 65% பங்கை மாநிலங்களுக்கு ஒதுக்கி கொண்டு, மீதமுள்ளவை மத்திய அரசுக்கு ஒதுக்கலாம் என்று தெரிவிக்கிறார்.

மேலும்“வரலாற்று ரீதியாக, முன்பு அமலில் இருந்து மாநில அரசின் மதிப்பு கூட்டு வரியின் கீழ், ஒரே பொருள் பல முனைகளில் வரிவிதிப்புக்குள்ளாகி   மாநிலங்களுக்கு நல்ல வருவாயை பெற்று தந்தது. எனவே, ஜிஎஸ்டி விகித கட்டமைப்பில் மாநிலங்களுக்கு கூடுதல் வருவாயைக் கொடுக்கும் அளவிற்கு மாற்றம் செய்யப்படவேண்டும்.  இதனால் இழப்பீட்டுச் சுமையைக் குறைக்க முடியும், ”என்று அவர் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment