/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1821.jpg)
how gumnaami has resurrected theories of subhas chandra boses death - சுபாஷ் சந்திர போஸ் மரண வாதங்கள் 'கம்னாமி'யால் எப்படி உயிர்த்தெழ போகிறது?
Santanu Chowdury
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுதந்திர இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் கும்னாமி பாபா என்ற பெயரில் வசித்து வந்ததாக வைக்கப்படும் வாதத்தை மையப்படுத்தி, எடுக்கப்பட்டிருக்கும் 'கம்னாமி' எனும் வங்காள மொழி திரைப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு, போஸ் குடும்பத்தார் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 'இது போஸுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானம்' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தைபேயில் ஆகஸ்ட் 18, 1945ம் ஆண்டு தைஹோகு விமான நிலையம் அருகே நடந்த விமான விபத்தில் போஸ் பலியாகிவிட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.
கம்னாமி இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி, தனது திரைப்படம் மீதான விமர்சனத்தை மறுத்துள்ளார். நேதாஜி காணாமல் போன பிறகு உருவான மூன்று கோட்பாடுகளையும் உள்ளடக்கியே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார். இத்திரைப்படம் மத்திய தணிக்கைச் சான்றிதழ் ஆணையம் முன்பு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி திரையிடப்பட்டு, அவர்கள் அனுமதியோடு இந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி ரிலீஸாக காத்திருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1822-300x217.jpg)
நேதாஜி மறைந்த பிறகு அல்லது காணாமல் போன பிறகு பல விதமான வாதங்கள் உலா வந்தன. இருப்பினும், அதில் மூன்று வாதம் மட்டுமே அதிக முக்கியத்துவம் பெற்று ஏகப்பட்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டும் இன்றும் முடிவில்லா விவாதங்களுடன் வலம் வருகிறது.
பொதுவாக நம்பப்படும் முதல் வாதம், அவர் தைபேயில் 1945ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் பலியானார் என்பதே. இரண்டாவது வாதம், ரஷ்ய சிறையில் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.
சுபாஷ் சந்திர போஸின் மரணத்தை விசாரித்த உளவுத்துறை அதிகாரி கலோனல் ஜான் ஃபிக்னஸ் (மறைவு), ஜூலை 25, 1946ல் சமர்ப்பித்த அறிக்கையின் படி, ஆகஸ்ட் 18, 1945ல் டியாஹோகு ராணுவ மருத்துவமனையில், போஸ் மரணமடைந்தார் என்பதை உறுதியாக தெரிவித்திருக்கிறார். விமான விபத்து ஏற்பட்டதால், அந்த அதிர்ச்சியில் இதயம் செயலிழந்தும், ஏகப்பட்ட தீக்காயங்களுடனும் மரணித்ததாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜியின் மறைவுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையை கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது.
1956ம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் கலோனல் மற்றும் எம்.பி. ஷா நவாஸ் கான் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு, போஸ் மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவும், போஸ் விமான விபத்தில் தான் இறந்தார் என அறிக்கை சமர்ப்பித்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1823-300x217.jpg)
அதன் பிறகும், போஸ் உயிருடன் இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், 1970ம் ஆண்டு பஞ்சாப் ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜி.டி.கோஸ்லா தலைமையில், ஒரு புதிய விசாரணை கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிஷனும், போஸ் குறித்த ஜான் ஃபிக்னஸ் மற்றும் ஷா நவாஸ் கமிட்டியின் காரணங்களை ஏற்றுக் கொண்டது.
பிறகு, 1999ம் ஆண்டு, நீதிமன்ற உத்தரவின் படி, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் முகர்ஜியை, போஸ் மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசு நியமித்தது. மூன்று முறை கால நீட்டிப்பிற்கு பிறகு, நவம்பர் 8, 2005ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்த முகர்ஜி கமிஷன், போஸ் விமான விபத்தில் தான் பலியானார் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் மே 17, 2006ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அரசு அந்த அறிக்கையை நிராகரித்துவிட்டது.
நேதாஜியின் குடும்பம் உட்பட பல தரப்பினரும், மேற்கு வங்க அரசாங்கத்திடமும், மத்திய அரசிடமும் இருக்கும் போஸ் மரணம் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட கோரினார். அது, போஸ் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் கிடைக்க உதவி புரியும் என கோரப்பட்டது.
செப்டம்பர் 2015ம் ஆண்டு, மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி, நேதாஜி குறித்த 64 ரகசிய கோப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், ஜனவரி 23, 2016 முதல் நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தது. முதல் கட்டமாக 100 கோப்புகள் வைக்கப்பட்டது. அதே வருடம், மேலும் 100 கோப்புகள் வைக்கப்பட்டது. இருப்பினும், இதன் மூலமும் நேதாஜி மறைவு குறித்து எந்த வலுவான ஆதாரமும் கிடைக்கவில்லை.
போஸ் மரணம் குறித்து 1956ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஜப்பான் அரசு அறிக்கை, கடந்த 2016 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டதிலும், ஃபிக்னஸ் அறிக்கை, ஷா நவாஸ் கமிட்டி அறிக்கை மற்றும் கோஸ்லா கமிஷன் அறிக்கை ஆகியவை குறிப்பட்ட விமான விபத்து மரணம் என்பதை அது ஏற்றுக் கொண்டது.
மூன்றாம் வாதத்தின் படி, அந்த வங்காள திரைப்படத்திற்கு கம்னாமி பாபா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஃபைஸாபாத் மாவட்டத்தில் கம்னாமி பாபா அல்லது பகவான்ஜி அல்லது மஹாகல் எனும் பெயரில் போஸ் வாழ்ந்து வந்ததாக உறுதியாக நம்பப்படுகிறது. ஆனால், அந்த பெயரில்லா புதிர் 1985ம் ஆண்டு இறந்து போனது.
கம்னாமி பாபா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர் யார் என்பதை அடையாளப்படுத்த, அலகாபாத் உயர்நீதிமன்றம், உத்தர பிரதேச அரசை கடந்த 2013ம் ஆண்டு கேட்டுக் கொண்டது. நீதி ஆணையம் 2016ல் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து 2019ல் அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி விஷ்ணு சஹாயின் கமிட்டி, கம்னாமி பாபாவாக நேதாஜி வாழ்ந்தாரா என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தாண்டு மே மாதம், நேதாஜி ஆராய்ச்சியாளர்கள் அனுஜ் தார் மற்றும் சந்திரச்சூர் கோஸ் தங்களது Conundrum: Subhas Bose’s life after death எனும் புத்தகத்தை வெளியிட்டனர். 15 வருட ஆராய்ச்சியின் பதிலாக வெளியான அந்த புத்தகத்தில், விமான விபத்திற்கு பிறகு சுதந்திர இந்தியாவில் போஸ் உண்மையில் வாழ்ந்ததாகவும், மூன்றாவது வாதமான கம்னாமி பாபா உண்மை என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை, இந்த புத்தகத்தின் அடிப்படையில், கம்னாமி படம் எடுக்கப்பட்டுள்ளதா என்று விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் அதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
நேதாஜியின் குடும்ப உறுப்பினர்கள் போஸ் குறித்த தார் மற்றும் கோஸின் மூன்றாம் வாத ஆதரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்களது டெல்லி சார்ந்த அமைப்பான 'மிஷன் நேதாஜி' மீதும் விமர்சனம் வைத்தும், வஞ்சனையுடன் போஸுக்கு எதிராக அவர்கள் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தார் மற்றும் கோஸ் ஆகியோர் போஸ் குடும்பத்தினரின் குற்றச்சாட்டை மறுத்தும், கம்னாமி பாபாவுக்கும் நேதாஜிக்கும் உள்ள தொடர்பு குடும்பத்தாருக்கே தெரியும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க, போஸ் குடும்ப உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.