Advertisment

நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்தியில், மின் தேவையை அதிகரித்த கோடை காலம் - எப்படி?

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு; இதற்கிடையில் கோடை காலம் காரணமாக மின் தேவை அதிகரிப்பு; மின் தேவையின் தற்போதைய நிலை என்ன?

author-image
WebDesk
New Update
நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்தியில், மின் தேவையை அதிகரித்த கோடை காலம் - எப்படி?

Karunjit Singh , Anil Sasi 

Advertisment

Explained: How heat wave added to power demand amid coal shortages: அக்டோபர் 2021 இல், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையிலிருந்து பொருளாதாரம் மீண்டபோது, ​​​​எரிசக்தி தேவையின் கூர்மையான எழுச்சி நிலக்கரி எரியும் அனல் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, இதனை பருவமழைக்கு பிந்தைய சாதாரண நிலக்கரி விநியோக நெருக்கடி என மத்திய மின்துறை அமைச்சர் ஆர் கே சிங் குறிப்பிட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் ஒரு நெருக்கடியை எதிர்நோக்குகிறது, இந்த முறை நிலக்கரி எரியும் அனல் ஆலைகளில் அதிக எரிபொருள் பற்றாக்குறை உள்ளது. இந்த அனல் மின் நிலையங்கள் இந்தியாவின் அடிப்படை மின் உற்பத்தி திறனில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை உருவாக்குகின்றன.

இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகள், கடந்த ஆண்டு இந்த நேரத்தில் 56 சதவீத சராசரி ஆலை வெளியீட்டு காரணியுடன் (PLF) இயங்கிய நிலையில், தற்போது குறைந்து 26 சதவீத சராசரி ஆலை வெளியீட்டு காரணியுடன் (PLF) இயங்குகின்றன. PLF என்பது ஒரு மின் உற்பத்தி நிலையத்தின் அதிகபட்ச வெளியீட்டைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதன் வெளியீட்டின் பெரிய அளவீடு ஆகும். உலகளாவிய எரிசக்தி பற்றாக்குறை மற்றும் உக்ரைனில் நடந்து வரும் போரின் காரணமாக புதிய நிச்சயமற்ற தன்மையால், இறக்குமதி செய்யப்பட்ட வெப்ப நிலக்கரி விலை கடந்த ஆண்டு ஒரு டன்னுக்கு சுமார் $50-100 இல் இருந்து இப்போது $225 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த ஆலைகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் கேள்விக்குள்ளாகி உள்ளன.

மேலும், கலப்பட நிலக்கரியை பயன்படுத்தி அதிகளவில் இயங்கி வந்த புதிய அனல் ஆலைகள், உள்நாட்டு நிலக்கரி கலவையை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியதால், ஏற்கனவே பலவீனமான உள்நாட்டு நிலக்கரி விநியோக உள்கட்டமைப்பில் நெருக்கடி அதிகரித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்கள், பிட்ஹெட் அல்லாத நிலக்கரி ஆலைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன. இது நாட்டின் 165 முக்கிய அனல் மின் ஆலைகளில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தரவுகளின்படி, உண்மையான நிலக்கரி இருப்பு ஏப்ரல் இறுதி வரை உள்ள விதிமுறைகளின் கால் பகுதிக்கும் குறைவாகவே உள்ளது.

தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படும் முக்கிய அனல்மின் நிலையங்களில் மின்தடை அல்லது உற்பத்தி குறைவதற்கான குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) அல்லது அதன் துணை நிறுவனங்களிடமிருந்து குறைந்த நிலக்கரி விநியோகம் காரணமாக குறைந்தது 16 ஆலைகள் போராடி வருவதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 28 CEA அறிக்கையின்படி தொகுக்கப்பட்ட காரணங்களில், 23 ஆலைகள் ரயில்வே ரேக்குகள் கிடைக்காமை அல்லது அவற்றின் பற்றாக்குறை காரணமாகவும், 10 ஆலைகள் நிலக்கரி விநியோகம் பெருமளவு தடைபட்டதன் காரணமாகவும், 5 ஆலைகள் பாரதீப் துறைமுகத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவும், 12 ஆலைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பு குறைவு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பற்றாக்குறை நிலைமையைப் போலன்றி, தேவை மற்றும் வழங்கல் இரண்டிலும் உள்ள மிகப்பெரிய நெருக்கடிகள் வேறுபட்டதாகத் தெரிகிறது. கடந்த அக்டோபரில் தேவைக்கான மிகப்பெரிய காரணி இரண்டாவது கொரோனா அலைக்குப் பிறகு பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது, அதே சமயம் விநியோகப் பக்கத்தில், CIL இன் பருவமழைக்குப் பிந்தைய உற்பத்தி துயரங்கள் ஒரு முக்கிய காரணியாக இருந்தன.

இம்முறை, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலையானது, முக்கிய தேவை காரணியாக உள்ளது, இது மின்சாரத்திற்கான தேவையை அதிகரித்துள்ளது, குறிப்பாக வீடுகளுக்கான மின்சாரம், விவசாயத்திற்கான மின்சாரம் மற்றும் தொழில்துறைக்கான மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் எரிசக்தி தேவை ஏறக்குறைய 9 சதவீதம் உயர்ந்தது, மேலும் ஏப்ரல் 29 அன்று 207 ஜிகாவாட் (1 ஜிகாவாட் அல்லது 1,000 மெகாவாட்) அளவிற்கு தேவை உயர்ந்தது, மே - ஜூன் மாதத்திற்குள் தேவை 220 ஜிகாவாட்டைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விநியோக பக்கத்தில், மூன்று குறிப்பிட்ட காரணிகள் உள்ளன. அவை இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி குறைதல், சில ஆலைகளுக்கு CIL இலிருந்து குறைந்த விநியோகம் மற்றும் ரயில் ரேக்குகள் பற்றாக்குறை காரணமாக விநியோக தடைகள், பணம் செலுத்தாத விநியோக நிறுவனங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல் (இது மின்துறையில் தொடரும் பிரச்சனை).

கடந்த காலத்தைப் போலல்லாமல், அக்டோபர் பிற்பகுதியில் இருந்து தேவை குறையத் தொடங்கும் மற்றும் குளிர்காலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறை ஆண்டின் இரண்டாம் பாதி வரை தேவை நிலையில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மார்ச் மாதமும் தொடங்கி பருவமழை வரை நிலக்கரி இருப்புக்களை கட்டியெழுப்பும் செயல்முறை ஒரு கடினமான பணியாக இருக்கும். மின்சார அமைச்சகம் தேவையை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக நிலக்கரி அமைச்சகத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள நிலையில், மின்சார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தேவை அதிகரிப்பு "பெரும்பாலும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தது" ஆனால் ரயில்வே ரேக்குகள் கிடைப்பது, மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு முக்கிய தடையாக உள்ளது என்று கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி போக்குவரத்துக்கு ஒரு நாளைக்கு 415 ரேக்குகளை வழங்க ரயில்வே ஒப்புக்கொண்டாலும், "எதிர்பார்ப்பு மற்றும் நாங்கள் வழங்கிய (தேவை) கணிப்புகளின்படி வழங்கப்பட வேண்டிய ரேக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை" என்று அதிகாரி கூறினார். வழங்கப்பட்ட ரயில் ரேக்குகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 387 ரேக்குகள். "அக்டோபரில் இருந்து ஒரு நாளைக்கு 415 ரேக்குகள் கிடைத்திருந்தால் இந்த பிரச்சினை எழுந்திருக்காது," என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: சமஸ்கிருத உறுதி மொழி சர்ச்சை; சரக் ஷபத் என்பது என்ன?

அனல் மின் நிலையங்கள் குறைந்த நிலக்கரி கையிருப்பை எதிர்கொள்ளக்கூடும் என்பதை மின் அமைச்சகம் டிசம்பரில் உணர்ந்ததாகவும், சரக்குகளை அதிகரிக்க நிலக்கரியை இறக்குமதி செய்யத் தொடங்குமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். இந்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், கடந்த ஐந்து நாட்களில் ஒரு நாளைக்கு 400 ரேக்குகளுக்கு மேல் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு, ஏப்ரல் 28 அன்று 427 ரேக்குகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும்” கூறினார்.

"இந்திய ரயில்வேயானது செப்டம்பர் முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றுவதை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் ஒரு நாளைக்கு ஏற்றப்படும் ரேக்குகள் (உள்நாட்டு மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டும்) மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு 310 லிருந்து 409 ரேக்குகளாக அதிகரித்துள்ளது, அதாவது 32% அதிகரித்துள்ளது” என கூடுதல் டைரக்டர் ஜெனரல் மற்றும் இந்திய ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் ஜெயின் கூறினார். ரேக் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம், போக்குவரத்து நெரிசல் குறைவான வழித்தடங்களில் ரயில்களை தற்காலிகமாக மாற்றியமைத்துள்ளது அல்லது ரத்து செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment