scorecardresearch

உலக நாடுகள் அனைத்தும் தங்கள் விவசாயிகளை ஆதரிக்கிறது: இந்தியாவின் நிலை என்ன?

How Indian government support its farmers : மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று  விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

உலக நாடுகள் அனைத்தும் தங்கள் விவசாயிகளை ஆதரிக்கிறது: இந்தியாவின் நிலை என்ன?

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தேசிய தலைநகர் புதுடெல்லி  எல்லையில் போராடி வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததையடுத்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று  விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக பங்களித்த போதிலும் இந்தியாமக்கள்தொகையில் கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர் வேளாண் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய அரசு தனது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை இங்கே காண்போம்.

 

உற்பத்தியாளர் ஆதரவு மதிப்பீடு: குறைந்தபட்ச ஆதரவு விலை, வரியில் இருந்து விலக்கு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தடைகள் போன்ற அரசின் கொள்கை வழியாக விவசாயிகளுக்கு கிடைக்கும் பணம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், உற்பத்தியாளர் ஆதரவு மதிப்பீடு இந்தியாவில் நெகடிவ் ஆக உள்ளது. அரசு விவசாயிகளிடம் இருந்து மறைமுகமாக வரிகளை வசூல் செய்து செய்கிறது என்பது இதன் பொருள்.

 

நுகர்வோர் ஆதரவு மதிப்பீடு: வேளாண் விளைபொருட்களை சர்வதேச விலைகளை ஒப்பிடுகையில் நுகர்வோர் அதிகமான அல்லது குறைவான விலையில் வாங்குவதை நுகர்வோர் ஆதரவு மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் தரவுகள் படி (ஒஇசிடி) இந்தியாவில் நுகர்வோர் குறைந்த விலையில் வேளாண் விளைபொருட்களை வாங்குகின்றனர்.

 

உற்பத்தியாளர் பாதுகாப்பு: சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடும்போது வேளாண் பொருட்களுக்கு விவசாயிகள் பெறும் சராசரி விலை அடிப்படையில் உற்பத்தியாளர் பாதுகாப்பு நிர்ணயிக்கப்படுகிறது.  இந்தியாவில், விவசாயிகள் சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் 13% சதவீதம் குறைவான விலையில் விளைப்பொருட்களை விற்கின்றனர்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: How indian government support its farmers compared to other countries farmers protest