பாஜக தேசிய துணைத் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே, SortedEagle என்ற ட்விட்டர் பக்கத்தில், பதிவிடப்பட்ட டேராடூன் ரயில் நிலையத்தின் பெயரை இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையின் புகைப்படத்தை திங்கள்கிழமை காலை மறு ட்வீட் செய்தார். அந்த பெயர் பலகையில் கடைசியாக உருது மொழி பெயரை மாற்றியுள்ளது. அதில் டேராடூனம் என்று எழுதப்பட்டுள்ளது.
சில நிமிடங்கள் கழித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, டேராடூன் என ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழிகளில் எழுதப்பட்ட பெயர் பலகை மற்றும் சஹஸ்ரபுத்தே மறு ட்வீட் செய்த புகைப்படத்தையும் கொண்ட 2 புகைப்படங்களை சமஸ்கிருந்தம் என்று குறிப்பிட்டு பத்ரா ட்வீட் செய்தார்.
ரயில் நிலையங்களுக்கு பெயரிடுவது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உருவாகியுள்ள குறியீடுகள் மற்றும் கையேடுகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. பெயர்கள் என்ன வண்ணத்தில், என்ன வடிவத்தில் மற்றும் என்ன அளவில் எழுதப்பட வேண்டும் என்பதையும் இது பரிந்துரைக்கிறது.
பெயர் மாற்றம் எவ்வாறு முறைப்படுத்தப்படுகிறது?
இந்திய ரயில்வே இந்த ரயில் நிலையத்தை சொந்தமாகக் கொண்டிருந்தாலும், பெயரிடும் வேலையில் அது ஈடுபடவில்லை. பெயரிடுவது என்பது சம்பந்தப்பட்ட மாநில அரசின் விருப்பப்படி விடப்படுகிறது. ஒரு மாநில அரசு ஒரு நகரத்தின் பெயரை மாற்ற விரும்பினால், அது ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அடையாள பலகைகளில் பிரதிபலிக்க விரும்பினால், அது இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதி அளிக்கும் அமைச்சகமான உள்துறை அமைச்சகத்திற்கு எழுதுகிறது.
உத்தரபிரதேச அரசு முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை மாற்ற விரும்பியபோது, ரயில்வே, உள்துறை அமைச்சகமும் மாநில அரசும் முறைப்படி செயல்படுத்துவதற்கும் போக்குவரத்துக்கு அறிவிப்பதற்கும் காத்திருந்தது. அதன் பிறகுதான் ஸ்டேஷன் பெயர் பலகைகள் மற்றும் டிக்கெட்டுகளில் இந்த பெயர் அதிகாரப்பூர்வமாக பண்டிட் தீன் தயால் உபாத்யாய ஜன்க்ஷன் என்று மாற்றப்பட்டது. அலகாபாத்திலிருந்து பிரயாகராஜ் வரை இதே நடைமுறைதான்.
பெயர் பலகைகளில் இடம்பெற வேண்டிய மொழிகள் எவ்வாறு தீர்மாணிக்கப்படுகின்றன?
இந்த முறை இந்திய ரயில்வே பணிகள் கையேடு என அழைக்கப்படுகிறது. இது 260 ஒரு பக்க ஆவணம். இது சிவில் பொறியியல் கட்டுமான பணிகள் தொடர்பான அனைத்தையும் குறியீடாக்குகிறது. பாரம்பரியமாக, நிலைய பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டன. காலப்போக்கில், உள்ளூர் மொழியான மூன்றாம் மொழியை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அப்படியிருந்தாலும், விஷயம் அவ்வளவு எளிதல்ல. கையேட்டின் பத்தி 424 கூறுகிறது, பெயர்களின் உச்சரிப்பை (மூன்று மொழிகளிலும்) சம்பந்தப்பட்ட மாநில அரசின் அங்கீகாரத்தை ரயில்வே பெயர் பலகைகளில் எழுதுவதற்கு முன்பு பெற வேண்டும்.
“ரயில் நிலையங்களின் பெயர்கள் பின்வரும் வரிசையில் இடம்பெறச் செய்யப்படும்: பிராந்திய மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம், தமிழ்நாட்டைத் தவிர, வணிகத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி முக்கியமான நிலையங்கள் மற்றும் யாத்ரீக மையங்களுக்கு இந்தி பயன்பாடு கட்டுப்படுத்தப்படும். பிராந்திய மொழி இந்தி இருக்கும் இடத்தில், பெயர் பலகைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இருக்கும்…” என்று கையேடு கூறுகிறது.
எந்த பெயர் பலகைகளில் உருது மொழி இருக்கும்?
உத்தரபிரதேசத்தில், உருது அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும. மேலும், ரயில் நிலைய பெயர் பலகைகளிலும் எழுதப்பட்டுள்ளது. உத்தரக்காண்ட் ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே டேராடூன் ரயில் நிலையம் பலகைகளில் உருது மொழியைத் தொடர்கிறது.
ஆனால், அது எல்லாம் இல்லை. உருது என்பது ஒரு குறிப்பிட்ட மாநிலத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட பிராந்திய மொழியாக இல்லாத ஒரு தனித்துவமான மொழியாக இருப்பதால், இந்திய ரயில்வே அதன் பெயர் பலகைகளில் இந்த மொழியில் நிலையங்களின் பெயர்களை எழுதுவதற்கு தனி விதிகளைக் கொண்டுள்ளது.
ரயில்வே பணிகள் கையேட்டின் பத்தி 424 ஒரு தனி பிரிவைக் கொண்டுள்ளது. அது இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களை பட்டியலிடுகிறது. அங்கு அனைத்து நிலையங்களுக்கும் பிற மொழிகளுடன் உருது மொழியில் பெயர்கள் இருக்க வேண்டும். இந்த பட்டியல் காலப்போக்கில் புதுப்பிக்கப்பட்டது. இது தென்னிந்திய மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரா முதல் பீகார் வரை 100 மாவட்டங்களுக்கு கிட்ட உள்ளது. (மாவட்டங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
இதற்குப் பிறகும், நிலைய பெயர் பலகைகளில் உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும் என்று நினைக்கும் மொழி இருந்தால், சம்பந்தப்பட்ட ரயில்வே துறைகள், மண்டல ரயில்வே பயனர்களின் ஆலோசனைக் குழு மற்றும் மாநில அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் அதைச் சேர்க்க கட்டாயப்படுத்தப்படுகின்றன.
டேராடூனில் உருது பெயர் சமஸ்கிருதத்துக்கு மாற்றப்படுகிறதா?
பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சமஸ்கிருதத்தில் பெயர் எழுதுமாறு ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார், அதே நேரத்தில் உள்ளூர் குழு ஒன்று உருது எழுத்துக்கள் அகற்றப்படுவதை எதிர்த்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. உள்ளூர் ரயில் அலுவலகங்கள் கடந்த செப்டம்பம் மாதம் அதிகாரப்பூர்வ சமஸ்கிருத பெயரைப் தருமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது. இப்போதைக்கு, உத்தரக்காண்ட் மாநிலத்தில் பெயர் பலகைகள் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழிகளில் பெயர்களைக் காண்பிக்கும் என்று ரயில்வே கூறுகிறது.
ரயில் நிலையங்களின் பெயர்கள் உருது மொழியில் இடம்பெற வேண்டிய மாவட்டங்கள்?
தர்பங்கா, பூர்ணியா, சீதாமரி மற்றும் கதிஹார், போபால், காண்ட்வா, மோரேனா, குவாலியர், குணா, சாகர், ரத்லம், தேவஸ், தார், இந்தூர், கார்கோன், ராஜ்காட், செஹோர், ரெய்சன், ஜபல்பூர், சிவ்னி, பரேலி, பிஜ்னோர், லக்னோ, மீரட் முசாபர் நகர், ராம்பூர், சஹரான்பூர், பிலிபிட், பஹரைச், கோண்டா, பராபங்கி, பஸ்தி, குர்கான், பலாசோர், கட்டாக், பூரி, பர்த்வான், ஹூப்லி, சித்தோர், கடப்பா, அனந்த்பூர், ஆதிலாபாத், குண்டூர், கர்நூல், கரிம் நகர், கம்மம், மெஹபூப் நகர், மேடக், நெல்லூர், நல்கொண்டா, வாரங்கல், நிஜாம்பாத், பிரகாசம், ரங்காரெட்டி போன்றவை (ஹைதராபாத் நகர் மகாபாலிகா உட்பட ஹைதராபாத்தின் அனைத்து பகுதிகளும்), வட ஆற்காடு, அம்பேத்கர், தருமபுரி, சபர்கன்யா, பல்ஹா , விஜயபுரா, தார்வாட், குல்பர்கா, கோலார், ரெய்ச்சூர், ஷிமோகா, வடக்கு கனரா, கொடகு, தானே, ரெய்காட், ரத்னகிரி, நாசிக், துலே, ஜல்கான், அகமதுநகர், பூர்னே, சோலாப்பூர், அவுரங்காபாத், பர்பானி, பிட், நந்தேத், உஸ்மனபாத்,பல்தானா, அமராவதி, யவத்மால் மற்றும் நாக்பூர் ஆகிய மாவட்ட்டங்கள் ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.