தேசியம்? மாநிலம்? இந்தியர்கள் தங்களை எப்படி அடையாளபடுத்திக் கொள்கிறார்கள்?

36% பேர் தேசியம் என்றார்கள். 30% பேர் அவர்களின் மாநில அடையாளத்தை கூறினார்கள்

36% பேர் தேசியம் என்றார்கள். 30% பேர் அவர்களின் மாநில அடையாளத்தை கூறினார்கள்

author-image
WebDesk
New Update
தேசியம்? மாநிலம்?  இந்தியர்கள் தங்களை எப்படி அடையாளபடுத்திக் கொள்கிறார்கள்?

Jyoti Mishra

How Indians identify: as regional, or national : இந்தியர்கள் பிராந்திய மற்றும் தேசிய அடையாளத்தில் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்? தேசம், தேசிய அடையாளம் ஆகியவை அரசியலில் மிக முக்கியத்துவம் பெறுகின்ற போது இது முக்கியமான கேள்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருவரின் தேசிய அடையாளத்தை கோருவதற்காக ஒருவர் தன்னுடைய பிராந்திய - மொழியியல் அடையாளத்தை பயன்படுத்துகிறாரா? அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2016 மற்றும் 2018 காலங்களுக்கு இடையே தேர்தலுக்கு நடுவே அரசியலும் சமூகமும் என்ற தலைப்பில் கணக்கெடுப்பின் தரவுகள் மூலம் இந்த கேள்விக்கான பதிலை நாங்கள் ஆராய்கின்றோம்.

எந்த அடையாளத்துடன் மக்கள் அதிகம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?

Advertisment

மக்கள் தேசியம் அல்லது பிராந்திய அடையாளத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. 36% பேர் தேசியம் என்றார்கள். 30% பேர் அவர்களின் மாநில அடையாளத்தை கூறினார்கள். 27% நபர்கள் இரண்டு அடையாளத்தையுமே தேர்வு செய்வார்கள் என்று கூறினார்கள்.

மாநிலங்களின் தரவுகள் என்ன கூறுகிறது?

சில இடங்களில் மாநில உணர்வுகள் வலுவாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 65% பேரும், தமிழகத்தில் 56% பேரும், மிசோரமில் 51% பேரும், நாகலாந்தில் 46% பேரும் குஜராத்தில் 37% பேரும் தங்களின் மாநில அடையாளங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். சில மாநிலங்களில் தேசியத்தை தேர்வு செய்கிறார்கள். அவைகளில் பெரும்பாலானவை இந்தி பேசும் மாநிலங்களாகும். ஹரியானா (66%), டெல்லி (63%), ம.பி. (61%), ராஜஸ்தான் (51%), பிஹார் (48%), உ.பி. (47%), மற்றும் ஜார்காண்ட் (46%) ஆகிய மாநிலங்களில் தேசிய அடையாளத்தை மக்கள் விரும்புகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களை தவிர்த்தும் சில மாநிலங்களிலும் மக்கள் தங்களை இந்தியர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். மகாராஷ்டிரா (57%), மேற்கு வங்கம் (44%) மற்றும் திரிபுரா (42%). சத்தீஸ்கர் (50%), உத்தரகண்ட் (44%), பஞ்சாப் (43%), கேரளா (38%) மற்றும் அசாம் (37%) இரு அடையாளங்களுக்கும் மக்கள் சமமான முன்னுரிமை அளித்தனர்.

publive-image
Advertisment
Advertisements

பொது இடங்களில் எந்த மொழி பேச மக்கள் பேச விரும்புகின்றனர்? உள்ளூர் அல்லது மற்ற மொழி?

மற்ற பிராந்தியங்களுக்கு மக்கள் செல்லும் போது மொழி முக்கியமான இணைப்பு காரணியாகவும், மோதலின் ஒரு புள்ளியாகவும் உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூர் மொழிகளை கற்கவும் பேசவும் விரும்புகிறார்கள். பொது தொடர்பு முறைகளில் மக்கள் பிராந்திய மொழிகளையே விரும்புகிறார்களா அல்லது தொடர்பு மொழியை ஏற்றுக் கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு, ஐந்தில் இரண்டு பங்கு (42%) பேர் எந்த மொழியை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்கள். 44% பேர் பிராந்திய மொழிகளை தேர்வு செய்தார்கள்.

பிராந்திய மொழியைத் தவிர வேறு ஒரு மொழியை ஏற்றுக்கொள்வது கர்நாடகாவில் மிகக் குறைவானது, அங்கு 83% மக்கள் உள்ளூர் மொழியை பொது இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். மற்ற மொழிகளை விட உள்ளூர் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவும் தரும் மாநிலங்கள் : : ஒடிசா (62%), பீகார் (59%), ஜே & கே (58%) மற்றும் குஜராத் (57%). தனித்த பிராந்திய அடையாளங்களைக் கொண்ட கேரளா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் மூன்றில் இரண்டு பிரிவு மக்கள் எந்த மொழியை வேண்டுமேனாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். தெலுங்கானா, தமிழ்நாடு, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ளூர் மொழியைக் காட்டிலும் அதிகம் பேசப்படும் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். ஹரியானாவில் மட்டுமே 37% மக்கள் இந்தி பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் ஆங்கிலத்தை பொதுமொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: