திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில் லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் மீண்டும் எழுப்பியுள்ளன.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) நாடு தழுவிய பிரச்சாரத்தை அறிவித்துள்ளது, மேலும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் கவனிக்க "சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்" அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் மத வழிபாட்டுத் தலங்கள் எவ்வாறு இயங்குகின்றன?
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத நிறுவனங்களை சமூகத்தால் நடத்தப்படும் அமைப்பு அல்லது அறக்கட்டளைகள் மூலம் நிர்வகிக்கின்றனர்.
இருப்பினும், பல இந்து, சீக்கிய, ஜெயின் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் விஷயத்தில், அரசாங்கம் கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 30 லட்சம் வழிபாட்டுத் தலங்களில் (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு) பெரும்பான்மையானவை இந்துக் கோயில்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. திருப்பதி கோவிலை நடத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) தலைவரை ஆந்திர அரசு கட்டுப்படுத்தி நியமிக்கிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்கள் கோயில்கள், அவற்றின் வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் சட்டங்களை இயற்றியுள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் சட்டம், 1988-ஐ இயற்றியது, குறிப்பாக, ஜம்முவின் கட்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி மாதா ஆலயத்தை நிர்வகிக்க இந்த சட்டத்தை இயற்றியது.
கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்போது இருந்து தொடங்கியது?
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) 1959 இல் முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்மட்ட முடிவெடுக்கும் கூட்டமான அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏபிபிஎஸ்) உத்தரபிரதேச அரசை "இந்த (காசி விஸ்வநாதர்) கோவிலை இந்துக்களிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியது. "வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது கட்டுப்பாட்டையும், ஏகபோகத்தையும் நிலைநிறுத்தும் அரசாங்கத்தின் போக்கு கடந்த சில ஆண்டுகளாக மேலும் மேலும் வெளிப்பட்டு வருகிறது" என்று தீர்மானம் குறிப்பிட்டது.
1988 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய காரியகாரி மண்டல் (ABKM) "பல்வேறு மாநில அரசாங்கங்கள் இந்து சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் மற்றும் இந்து பக்தர்களின் சரியான பிரதிநிதிகளிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தது.
ABKM தீர்மானம், கோவில்களின் மீதான அரசாங்கக் கட்டுப்பாடு "நியாயமற்றது, அநீதியானது மற்றும் பாரபட்சமானது" என்றும், "அரசுகள் தங்கள் மகத்தான நிதியைக் கருத்தில் கொண்டு கோவில்களைக் கையகப்படுத்துகின்றன" என்றும் கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: How India’s temples are run
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ,க அடிக்கடி ஆர்.எஸ்.எஸ் கடந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்து கோவில்களை தமிழக அரசு கையகப்படுத்துவதாக குற்றம்சாட்டியதை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக மறுத்தார்.
பன்னாலால் பன்சிலால் பிட்டி vs ஆந்திரப் பிரதேச மாநிலம் (1996) இல், ஒரு இந்து மத நிறுவனம் அல்லது அறக்கட்டளையை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் தலைவரான பரம்பரை உரிமையை ரத்து செய்யும் சட்டத்தின் செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது, மேலும் அனைத்து மதங்களுக்கும் சட்டம் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வாதத்தையும் நிராகரித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.