வழக்கு விசாரணைகளில் இருந்து நீதிபதிகள் தங்களை எப்படி விலக்கிக் கொள்கிறார்கள்? ஏன்?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் – நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அனிருத்த போஸ் – மேற்கு வங்கம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டனர்

How judges recuse from cases, and why

 Apurva Vishwanath 

How judges recuse from cases, and why : கடந்த வாரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் – நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அனிருத்த போஸ் – மேற்கு வங்கம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டனர். ஜூன் 21 அன்று, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனுப் பாம்பானி, இடைத்தரகர்களை ஒழுங்குபடுத்தும் ஐடி விதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டிஜிட்டல் ஊடக நிறுவனங்களின் மனுவை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

ஏன் ஒரு நீதிபதி ஒரு வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விலக்கிக் கொள்கிறார?

சர்ச்சைக்குரிய விவகாரமாக இருக்கும் போது நீதிபதி வழக்கு விசாரணையில் இருந்து விலகலாம். வழக்கை தீர்மானிக்கும் போது அவர் பக்க சார்புடையவர் என்ற கருத்து உருவாவதை தடுப்பதற்காகவும் அவர் வழக்குகளில் இருந்து விலகலாம். இந்த சர்ச்சை என்பது பல்வேறு வகைகளில் இருக்கலாம். ழக்குத் தொடுக்கும் ஒரு நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பது முதல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினருடன் முன் அல்லது தனிப்பட்ட தொடர்பு வைத்திருப்பது வரை எந்த காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம்.

தனது சொந்த வழக்கில் யாரும் நீதிபதியாக இருக்க முடியாது என்ற சட்டத்தின் சரியான செயல்முறையின் முக்கியமான கொள்கையில் இருந்து இந்த நடைமுறை உருவாகிறது. நியாயமான முறையில் ஒரு நீதிபதி நடந்து கொள்ள வேண்டும் என்பதால், ஆர்வமும், சர்ச்சையும் ஒரு வழக்கில் இருந்து விலகுவதற்கான காரணங்களாக அமையும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்போது, நீதிபதி உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியாக பதவி உயர்வு அடைந்திருந்தால், அவர் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளலாம்.

ஒரு வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான நடைமுறை என்ன?

மனசாட்சிப்படி ஒரு வழக்கில் உள்ள எந்த ஒரு மோதலையும் வெளிப்படுத்த நீதிபதி விரும்பினால், வழக்கில் இருந்து விடுவித்துக் கொள்ளும் முடிவு பொதுவாக நீதிபதியிடமிருந்து வருகிறது. சில சூழ்நிலைகளில், வழக்கில் வழக்கறிஞர்கள் அல்லது கட்சிகள் அதை நீதிபதி முன் கொண்டு வருகின்றன. வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நீதிபதி முடிவு செய்தால், அந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு புதிய அமர்விற்காக பட்டியலிடப்படுகிறது.

பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்த பிரச்சினையை கையாண்டிருந்தாலும், வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான முறையான விதிகள் எதுவும் இல்லை.

ரஞ்சித் தாக்கூர் Vs மத்திய அரசு (1987) வழக்கில், கட்சிக்காரரின் மனதில் உள்ள அச்சத்தின் நியாயமான தன்மைதான் சார்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சோதனைகள் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நான் பக்கசார்பானவனா? என்று தன் மனசாட்சியைப் பார்த்து கேள்வி எழுப்பிக் கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. ஆனால் அவர் அக்கட்சிக்காரரின் மனதை பார்த்து கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. தனது ஆர்வத்தை வெளிப்படுத்தாவிட்டால் அல்லது விசாரணை மற்றும் முடிவை தீர்மானிப்பதில் எந்த ஆட்சேபனையும் எழுப்பப்படாவிட்டால், ஒரு நீதிபதி அவர் பங்குகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் வழக்கை விசாரிக்கவோ, முடிவு எடுக்கவோ மாட்டார் என்று 1999 ஆம் ஆண்டில் நீதி வாழ்க்கையில் மதிப்புகளை மறுசீரமைத்தல் சாசனத்தின் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஒரு வழக்கில் இருந்து விலக்கிக் கொள்வதை நீதிபதி மறுக்க முடியுமா?

விலகிக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்ட பிறகு விலகிகொள்வதும் அல்லது வழக்கில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் முழுக்க முழுக்க அந்த நீதிபதியின் கையில் தான் உள்ளது. ஆனால் திபதிகள் ஒரு மோதலைக் காணாவிட்டாலும் கூட பயத்தின் காரணமாக விலகிக் கொண்ட சில சம்பவங்களும் உள்ளன. வழக்கில் இருந்து விலகிக் கொள்ள மறுத்த சம்பவங்களும் கூட அரங்கேறியுள்ளது.

உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில், நீதிபதி அருண் மிஸ்ரா, கட்சிகளின் பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், அவர் முன்னர் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட அரசியலமைப்பு அமர்வில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள மறுத்துவிட்டார். அயோத்தி-ராம ஜென்ம பூமி வழக்கில், நீதிபதி யு.யு லலித், வழக்கறிஞராக இருந்த போது ஒரு கிரிமினல் வழக்கில் ஆஜரானார் என்று பிரதிகள் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து, அரசியலமைப்பு அமர்வில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

வழக்குகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான காரணங்களை நீதிபதிகள் பதிவு செய்கிறார்களா?

இது தொடர்பான முறையான வழிமுறைகள் இல்லாத காரணத்தால், வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கான காரணத்தை பதிவு செய்வதும் செய்யாமல் இருப்பதும் நீதிபதியின் தனிப்பட்ட முடிவாக இருக்கிறது. சில வழக்குகளில், திறந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் விலகுவதற்கான காரணத்தை கூறுகின்றனர். சில வழக்குகளில் காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை.

மேற்கு வங்க வழக்குகளில் இருந்து விலகிய இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், இதற்கு முன்பு கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை மற்றும் நாரதா மோசடி வழக்குகளில் இருந்து அவர்கள் தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அரசியல் சண்டைகளாக இவை உருவெடுத்துள்ளன.

தேசிய நீதி நியமன ஆணைக்குழு (National Judicial Appointments Commission) அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று 2015 ஆம் ஆண்டில் ஒரு முக்கிய தீர்ப்பில், நீதிபதி குரியன் ஜோசப் மற்றும் நீதிபதி மதன் லோகூர் ஆகியோர் நீதிபதிகள் வெளிப்படைத்தன்மையை கட்டியெழுப்ப மறுக்கப்படுவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் மற்றும் செயல்முறையை நிர்வகிக்க சட்ட விதிகளுக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How judges recuse from cases and why

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com