verdict on hijab ban:
தனிநபர் விருப்பம் மற்றும் தேர்வில் இருந்து மத சுதந்திரத்தை நோக்கிச் சென்ற விவாதம்; கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு விதித்த தடையை சரியாக ஆய்வு செய்யதாது; சரி தவறை அறிந்து செயல்படும் மனசாட்சியின் சுதந்திரத்தில் இருந்து மத சுதந்திரத்தை தனித்து கூறியது போன்றவற்றின் அடிப்படையில் தான், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.
மாநில அரசின் உத்தரவிற்கு ஆதரவாக 129 பக்கங்களில் வெளியான தீர்ப்பில், ஹிஜாப் விவகாரத்தில் மைய விவாதமாக அத்தியாவசிய மத நடைமுறைகளை வைத்தது உயர் நீதிமன்றம். பேச்சு, கருத்து சுதந்திரம் மற்றும் சம உரிமைக்கான சுதந்திரம் ஆகியவற்றை மனுதாரர்கள் முன்னிலைப்படுத்திய போதும் அவை அனைத்தும் வழித்தோன்றல் உரிமைகள் தான் என்று உயர் நீதிமன்றம் அந்த விவாதங்களை ஓரங்கட்டியது.
மூன்று பேர் கொண்ட அமர்வு, உண்மையில் மனுதாரர்கள் முன்வைத்த உரிமைகளை விளக்குவதைக் காட்டிலும் அரசு தரப்பில் கூறப்பட்ட கட்டுப்பாடுகளை அதிக அளவில் அடிக்கோடிட்டு காட்டியது. “பள்ளி சீருடைகளில், வாதிடப்பட்ட கட்டுப்பாடுகளை மதிப்பிடுவதற்கு, இந்த சோதனைகளை நடத்தும் வகையில் நாங்கள் பரிசீலிக்கும் மனுக்களில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அல்லது தனியுரிமைக்கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கவில்லை” என்று அந்த அமர்வு கூறியது.
மனுதாரர்களின் புகார் அனைத்தும் வழித்தோன்றல் உரிமைகள் (Derivative Rights) மீறப்பட்டதாகவே உள்ளதே தவிர உண்மையான உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படவில்லை என்று மேற்கோள்காட்டிய நீதிமன்றம், இதனை பயன்படுத்தி உண்மையான, கணிசமான உரிமைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுமே தவிர அதன் அனைத்து வழித்தோன்றல் உரிமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாது என்று கூறியது. அது மட்டுமின்றி, தகுதிபெற்ற பொது இடங்கள் என்று பள்ளியை பட்டியலிட்டு அதில் படிக்கும் மாணவர்களை சிறையில் இருக்கும், தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட இயலாத கைதிகளுடன் ஒப்பிட்டு அமர்வு விளக்கம் அளித்தது.
”பள்ளிகள் தகுதி பெற்ற பொது இடம் என்று எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்களுக்கு கல்வியை வழங்கவே அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற தகுதிபெற்ற இடங்களில் இயல்பிலேயே பொது ஒழுக்கம் & தீங்கு விளைவிக்கும் வகையிலான தனிப்பட்ட உரிமைகளை வலியுறுத்துவதைத் தடுக்கின்றன” என்று நீதிமன்றம் கூறியது.
ஹிஜாப் அணிவதை கட்டுப்படுத்த பொது ஒழுங்கு, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மேற்கோள் காட்டி கர்நாடக கல்விச் சட்டம், 1983 இன் கீழ் பிப்ரவரி 5 ஆம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவால் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டப்படும் பாகுபாடுகளை பட்டியல் இட்டனர் மனுதாரர்கள்.
ஆனால் “எந்த அடிப்படையிலும் உடைக் கட்டுப்பாடு என்பது மாணவக்ரளின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுய தேர்வுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று கூறி வாதிட இயலாது” என்று அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தது நீதிமன்றம். இது போன்ற விஷயங்களில், அரசியல் சாசனப்பிரிவுகள் 14 & 15 இன் கீழ் வெளிப்படையான தன்னிச்சை அல்லது பாகுபாடு பற்றிய புகார்களுக்கு முற்றிலும் வாய்ப்பில்லை, மதம், மொழி, பாலினம் அல்லது பலவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு சமமாகப் பொருந்தும் என்று நீதிமன்ற தீர்ப்பு அறிவித்துள்ளது.
பொதுஒழுங்கு அடிப்படையில் அரசியல் சாசனத்தின் கீழ் மத சுதந்திரம் தடை செய்யப்படலாம் என்றாலும், மாநில அரசு வரைவில் உள்ள மொழிப்பிழையை சுட்டிக்காட்டியது. அரசு ஒப்புக் கொண்ட போதும் அது தொடர்பாக மேற்கொண்டு நீதிமன்றம் ஏதும் விசாரிக்காமல் அரசின் சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பலனை அளித்துள்ளது.
அரசு உத்தரவில் பயன்படுத்தப்படும் ‘பொது ஒழுங்கு’ போன்ற சில விதிமுறைகளை அரசியலமைப்பு அல்லது சட்டங்களில் பயன்படுத்தியவையாகக் கருத முடியாது என்பதை நாங்கள் அவசரமாகச் சேர்க்கிறோம். சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கும் சட்டப்பூர்வ உத்தரவை கையில் கொண்டிருப்பதற்கும் கடல் அளவு வித்தியாசம் உள்ளது. சட்டப்பூர்வ கொள்கைகளை உரையாக வடிவமைக்கும் போது, சில சமயங்களில் அரசாங்க அதிகாரிகளிடம் போதுமான வார்த்தை வடிவங்கள் இல்லாத போது வரைவை உருவாக்கும் நபர்கள் விடாமுயற்சி மற்றும் தீவிரமாக இந்த சொல்லாகத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சரி தவறு என்ன என்பதை பிரித்தரியும் உரிமையில் இருந்து வேறுபட்டது ஹிஜாப் அணிவதற்கு மத சுதந்திரத்திற்கான உரிமை என்று மனுதாரர்கள் வாதாடிய போது, அதனை நிரூபிக்க சரியான ஆதாரங்களுடன் வரவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர்கள் தங்கள் தரப்பில் ஏதேனும் எண்ணம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வழிமுறையாகவோ அல்லது குறியீட்டு வெளிப்பாட்டின் வழிமுறையாகவோ தங்கள் தலையில் முக்காடு அணிவதைத் தேர்ந்தெடுத்தனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் மனசாட்சியின் அடிப்படையை வலியுறுத்துவதற்கான வேண்டுகோள்கள் மிகவும் குறைந்ததாகவே உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil