Shaju Philip
கேரளாவில் 13 மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் (டி.சி.பி) இணைப்பால் உருவாக்கப்பட்ட கேரள வங்கி, அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. கூட்டுறவு துறையில் அரசுக்கு சொந்தமான முதல் வங்கி இதுவேயாகும்.
கேரள வங்கி மாநிலத்தின் கூட்டுறவு வங்கித் துறையை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்; இது வங்கித் துறையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட மக்களுக்குச் சொந்தமான மற்றும் மக்கள் நிர்வகிக்கும் நவீன வங்கியாக கருதப்படுகிறது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கட்டுப்பாட்டில் உள்ள மலப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கியைத் தவிர அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் கேரள வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் வெளிநாட்டு வங்கிகளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார்.
திட்டம் மற்றும் பரிணாமம்
கேரளாவின் “சொந்த வங்கி” என்பது 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) வாக்குறுதியாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, முழு கூட்டுறவு வங்கித் துறையையும் ஒரே நிறுவனமாக இணைப்பதன் மூலம் கேரள வங்கியை உருவாக்கும் யோசனையை ஆய்வு செய்ய விஜயனின் அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது.
மார்ச் 31, 2017 அன்று ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் (எஸ்.பி.டி) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் கேரள வங்கியின் தேவை அதிகரித்தது. திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், அரசாங்கத்தின் பெரும்பாலான பரிவர்த்தனைகளை நிர்வகித்தது. தவிர இது கேரளாவின் சொந்த வங்கியாகக் காணப்பட்டது.
அக்டோபரில், இந்திய வங்கி (ரிசர்வ் வங்கி) சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒருங்கிணைந்த வங்கியை உருவாக்குவதற்கு இறுதி ஒப்புதல் அளித்தது. இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். இதுகுறித்த அறிக்கை 2020 மார்ச் 31 க்கு முன் மத்திய வங்கியில் சமர்ப்பிக்கப்படும்.
புதிய வங்கி 13 மாவட்ட கூட்டுறவு வங்கிகளை கேரள மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைக்கிறது. கேரள வங்கியின் உருவாக்கம் மாநிலத்தில் கூட்டுறவு வங்கியின் முந்தைய மூன்று அடுக்கு கட்டமைப்பை இரு அடுக்காக குறைத்துள்ளது.
அளவு மற்றும் நிலை
கேரள வங்கி மாநிலத்தில் இரண்டாவது பெரிய வங்கி தடமாக உள்ளது. அதன் 995 கிளைகளின் நெட்வொர்க் எஸ்பிஐக்கு அடுத்தபடியாக உள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு மாநிலம் முழுவதும் 1,215 கிளைகள் உள்ளது. எஸ்பிஐ வங்கியானது, கேரள மாநிலத்தில் 1.53 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தளத்தைக் கொண்டிருக்கும்போது, கேரள வங்கியின் வைப்புத் தொகை ரூ .65,000 கோடியாக உள்ளது. மாநில கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளைப் போலன்றி, கேரள வங்கி, எதிர்காலத்தில், என்ஆர்ஐ வைப்புகளை (NRI Deposits) ஏற்க முடியும், இது அதன் வைப்புத் தளத்தின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும். கேரள வங்கியின் ஒரு பகுதியாக, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் இதுவரை இல்லாத நிகழ்வாக, scheduled bank எனும் நிலையைப் பெறுவார்கள். கேரளாவில் உள்ள கூட்டுறவு வங்கிகள் வைப்பு தொகை மற்றும் கடன்களில் சுமார் 30 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் கேரள வங்கி. என்ஆர்ஐ வைப்புகளை ஏற்கத் தொடங்கிய பின்னர் இது கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
நிர்வாக அமைப்பு
தற்போது, கூட்டுறவுத் துறையின் மூத்த அதிகாரத்துவத்தினர் கேரள வங்கியை நிர்வகிக்கின்றனர். அடுத்த மாதம் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார். எவ்வாறாயினும், கூட்டுறவுத் துறையில் உள்ள மரபுக்கு ஏற்ப, கேரள வங்கி ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பைக் கொண்டிருக்கும். இது முதன்மை கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மாநில கூட்டுறவுத் துறையின் செயலாளர், நான்கு முன்னாள் அலுவல் உறுப்பினர்கள், நபார்ட்டில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர் மற்றும் இரண்டு சார்பற்ற இயக்குநர்கள் குழுவைக் கொண்டிருக்கும். முதன்மை சங்கங்களின் நியமனங்கள் எஸ்சி / எஸ்டி மற்றும் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும்.
ஆதாயங்களும் விமர்சனங்களும்
புதிய கேரள வங்கி, ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம்கள் உள்ளிட்ட நவீன வங்கி வசதிகளை வழங்குகிறது. அவை கூட்டுறவு துறையில் உள்ள ஒரு பெரிய வாடிக்கையாளர்களுக்கு கூட இதுவரை கிடைக்கவில்லை. இத்துறையில் வழங்கப்படும் சேவைகளில், வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் மற்றும் கடன்களில் ஒரு சமநிலை இருக்கும்.
குறைந்தபட்ச வைப்புத்தொகையை பராமரிக்க தவறிய வாடிக்கையாளர்களுக்கு கேரள வங்கி அபராதம் விதிக்காது. அரசாங்கத்தின் அறிக்கைப்படி, வணிக அம்சங்களில் சமரசம் செய்யாமல், அபிவிருத்தி திட்டங்களுக்கு, குறிப்பாக உள்ளூர் சுய அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி சேவைகளை வழங்குவதன் மூலம் கேரளாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வங்கி உதவும்.
இருப்பினும், கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைப்பு வங்கித் துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
முன் உள்ள சவால்கள்
கூட்டுறவுத் துறையில் அடிக்கடி விழும் அரசியலின் நிழலில் இருந்து இந்த புதிய வாங்கியை தற்காத்து, நிபுணத்துவத்தை ஊக்குவிப்பதில் மாநில அரசுக்கான பணி சவால் நிறைந்ததாக இருக்கும். 2016 ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், மாநிலத்தில் ஏற்பட்ட இரண்டு பெரிய வெள்ளப்பெருக்காலும், பொருளாதார வீழ்ச்சி, மாவட்ட மற்றும் முதன்மை கூட்டுறவு சங்கங்களை மோசமாக பாதித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.