ட்விட்டர் அதன் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் த்ரெட்ஸ் என்ற மைக்ரோ பிளாக்கிங் செயலியை அறிமுகம் செய்தார். இது இன்ஸ்டாகிராமுடன் இணைந்த டெக்ஸ்ட் அடிப்படையிலான உரையாடல் செயலி என மெட்டா கூறியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன, தொடர்ச்சியான குழப்பமான முடிவுகளால் ட்விட்டர் நிலையாக இல்லை. இந்நிலையில் மெட்டா த்ரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கான பயனர்கள் இணைந்தனர். த்ரெட்ஸ் அதன் முதல் ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றதாக ஜுக்கர்பெர்க் கூறினார்.
உலகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் த்ரெட்ஸ் செயலியில் இணைந்து வருகின்றன. கிம் கர்தாஷியன் மற்றும் ஜெனிபர் லோபஸ் போன்ற பிரபலங்களும், ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க பிரதிநிதி அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற முக்கிய அரசியல்வாதிகளும் த்ரெட்ஸில் இணைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி த்ரெட்ஸ் செயலியில் இணைந்த முதல் அரசியல் தலைவர் ஆவார். த்ரெட்ஸ், ட்விட்டருக்கு உண்மையிலேயே போட்டியை ஏற்படுத்த முடியுமா என்பதை நேரம் மட்டுமே பதில் சொல்லும். இருப்பினும் இதில் உள்ள வசதிகள் குறித்து பார்ப்போம்.
ட்விட்டர் போன்ற அம்சங்கள்
100-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது டெக்ஸ்ட் அடிப்படையிலான சமூக வலைதளம். இதில் பயனர்கள் மற்றவர்கள் விரும்பக்கூடிய, பகிர மற்றும் கருத்து தெரிவிக்கக்கூடிய மெசேஜ்களை பதிவிடலாம். 500 வார்த்தைகள் வரை எழுதி போஸ்ட் செய்யலாம். இதில் போட்டோ, லிங்க் இணைக்கலாம். 5 நிமிடம் வரை வீடியோ பதிவிடலாம்.
இன்ஸ்டாகிராம் நெட்வொர்க்கில் இணைப்பு
இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஐ.டி பயன்படுத்தி லைக்கின் செய்து பயன்படுத்தலாம். இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் அதே நபர்களை இதிலும் பின்தொடர முடியும். இருப்பினும், உங்கள் த்ரெட்ஸ் பயன்பாட்டை நீங்களாகவே விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம்.
Fediverse:புதிய வசதி
Fediverse எனப்படும் புதிய அம்சத்தை த்ரெட்ஸ் செயலியில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது Threads பயனர்களுக்கு Mastodon போன்ற மாற்று மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள உதவும்.
இன்ஸ்டாகிராம் வெப்சைட் கூற்றுப்படி, Fediverse என்பது "மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் பல்வேறு சர்வர்களின் சமூக வலைப்பின்னல் ஆகும், அவை இணைக்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
தனியுரிமை கவலைகள்
த்ரெட்ஸ் வாக்குறுதி அளித்திருந்தாலும், அது தொடங்கும் நேரம், புதிய மைக்ரோ-பிளாக்கிங் தளம் ஏற்கனவே அதன் தனியுரிமைக் கொள்கை தொடர்பான சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
ஆரோக்கியம், உடற்பயிற்சி, நிதி, கான்டேக்ஸ், ப்ரௌசிங் ஹிஸ்டரி, , பயன்பாடு, இருப்பிடம் மற்றும் பிற முக்கியத் தகவல்கள் பற்றிய தரவுகளை Meta's Threads சேகரிக்கக்கூடும் என்பதை Apple App Store இல் உள்ள அதிகாரப்பூர்வ பட்டியல் வெளிப்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.