Advertisment

கேரளத்தின் மிகப்பெரிய பணக்காரராக ஜார்ஜ் முத்தூட் உயர்ந்தது எப்படி?

எம்.ஜி. ஜார்ஜ் முத்தூட்டின் திடீர் மரணம் அந்நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
கேரளத்தின் மிகப்பெரிய பணக்காரராக ஜார்ஜ் முத்தூட் உயர்ந்தது எப்படி?

How MG George Muthoot became richest man in Kerala? : இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகைக்கடன் வழங்கும் முத்தூட் நிறுவனத்தின் தலைவர் எம்.ஜி. ஜார்ஜ் முத்தூட் புதுடெல்லியில் காலமானார். 72 வயதான அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். காவல்துறையின் அறிக்கைப்படி, தன் வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. அவருடைய வீடு டெல்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியில் அமைந்திருக்கிறது.

Advertisment

“அமர் காலனி காவல்நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு 9.21 மணி அளவில் அழைப்பு வந்தது. அதில் முத்தூட் அவருடைய வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறினார்கள்” என்று டி.பி.பி. ஆர்.பி. மீனா கூறினார். கீழே விழுந்த அவரை உடனடியாக ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

முத்தூட் நிறுவனத்தை இந்தியா முழுவதும் ஒரு நிதி அதிகார மையமாக மாற்றிய பெருமை அவருக்கே உரியது. இன்று சந்தையில் அந்நிறுவனத்தின் மூலதனம் மட்டும் ரூ. 51 ஆயிரம் கோடி மற்றும் மொத்த வருமானம் ரூ. 8,722 கோடியாகும்.

யார் இந்த ஜார்ஜ் முத்தூட்?

இந்நாளில் கேரளாவின் பத்தினம்திட்டா என்று கூறப்பட்டும் முன்னாள் கொழ்ஞ்சேரியில் 1949ம் ஆண்டு மத்தாய் ஜார்ஜ் ஜார்ஜ் முத்தூட் பிறந்தார். முத்தூட் நிறுவனத்தை உருவாக்கிய முத்தூட் நினான் மத்தாய்யின் பேரனும், எம். ஜார்ஜ் முத்தூட்டின் மகனும் ஆவார் இவர். எம். ஜார்ஜ் முத்தூட் இந்நிறுவனத்தில் நிதிக்கடன் வழங்கும் பிரிவை உருவாக்கினார். மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து மெக்கானிக்கல் பட்டப்பிரிவில் படித்து முடித்தவுடன் தங்களின் சொந்த நிறுவனத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். 1979ம் ஆண்டு மேலாண்மை இயக்குநராக உயர்ந்தார். 1993ம் ஆண்டு இந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

1980களின் ஆரம்ப காலகட்டத்தில், இந்த குடும்ப நிறுவனத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனால் முத்தூட் பாப்பச்சன் க்ரூப் என்ற நிறுவனத்தை அவரின் சொந்தக்காரர்கள் உருவாக்கினார்கள். முத்தூர் ஃபினான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இந்த நிறுவனம்  தற்போது கேரளத்தில் இயங்கி வருகிறது.  ஜார்ஜின் கீழ் நிர்வாகம் இருந்த போது தான், இந்நிறுவனத்தின் வளர்ச்சி கொச்சியை தாண்டி உயர்ந்தது. 5500 கிளைகளுடன், `1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆண்டு வருமானமாக பெறும் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகைக்கடன் வழங்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. டிசம்பர் 2020ன் போது இந்நிறுவனத்தின் கடன் புத்தக மதிப்பு மட்டுமே ரூ. 56 ஆயிரம் கோடியாக இருந்தது என்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஜார்ஜ் முத்தூட் இந்தியாவின் 26வது பணக்காரராகவும், கேரளத்தின் முதல் பணக்காரராகவும் ஃபோர்ப்ஸ் ஆசியா இதழ் பட்டியலிட்டது. கேரளத்தின் மலங்கரா ஆர்த்தோடெக்ஸ் சர்ச்சியின் ட்ரஸ்ட்டியாகவும் இருக்கிறார். தன்னுடைய மனைவி சாரா மற்றும் ஜார்ஜ் எம். ஜார்ஜ் மற்றும் அலெக்ஸாண்டர் எம். ஜார்ஜ் என்ற இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.  அவருடைய இளைய மகன் பால் எம். ஜார்ஜ் 2009ம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு 32 வயது. என்.பி.எஃப்.சியின் செயல் இயக்குநராக பணியாற்றி வந்தார். கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து சங்கனஸெர்ரிக்கு சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

எம்.ஜி. ஜார்ஜ் முத்தூட்டின் திடீர் மரணம் அந்நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது. அனைத்து இயக்குநர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் வருத்தம் மற்றும் இரங்கல்களை அவரின் குடும்பத்தினருக்கு செலுத்தி வருகின்றனர்.

அவருடைய மரணம் குறித்து?

அவருடைய மரணத்தில் சந்தேகம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவரின் குடும்ப உறுப்பினர்கள், சாட்சியங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் அருகே இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.  சில காவல்துறை வட்டாரங்களின் படி, சம்பவம் நடைபெற்ற போது நான்காவது மாடியில் தனியாக தான் நின்று கொண்டிருந்தார் என்றும் அதனையே சி.சி.டி.வி காட்சிகள் தெளிவுப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment