15-39 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு மது அருந்துவதற்கான மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும், இந்த வயதிற்குட்பட்ட ஆண்கள், பாதுகாப்பற்ற அளவு மது குடிப்பவர்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர்.
தி லான்செட்டில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, வயதானவர்களை விட இளைஞர்கள் மது அருந்துவதால் அதிக உடல்நல அபாயங்களை எதிர்கொள்கின்றனர். நோயின் உலகளாவிய எண்ணிக்கை (Global Burden of Disease) பகுப்பாய்வு புவியியல் பகுதி, வயது மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆல்கஹால் அபாயத்தைத் தெரிவிக்கும் முதல் ஆய்வு ஆகும். 204 நாடுகளில் மது அருந்துவதற்கான மதிப்பீடுகளைப் பயன்படுத்தி, 2020 ஆம் ஆண்டில் 1.34 பில்லியன் மக்கள் (1.03 பில்லியன் ஆண்கள் மற்றும் 0.312 பில்லியன் பெண்கள்) தீங்கு விளைவிக்கும் அளவில் மதுவை உட்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
40 வயக்கு கீழ் மது அருந்துபவர்களுக்கு அதிக ஆபத்து
15-39 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு தீங்கு விளைவிக்கும் மது அருந்துவதற்கான மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும், இந்த வயதிற்குட்பட்ட ஆண்கள், பாதுகாப்பு இல்லாத அளவுக்கு மது குடிப்பவர்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். 2020 இல் பாதுகாப்பற்ற அளவு மது உட்கொண்டவர்களில், 59.1% பேர் 15-39 வயதுக்குட்பட்டவர்கள், இவர்களில் 76.7% பேர் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயதினரில், மது அருந்துவதால் உடல்நலப் பலன்கள் எதுவும் இல்லை, உடல்நல அபாயங்கள் மட்டுமே உள்ளது. இந்த பிரிவில் 60% ஆல்கஹால் தொடர்பான காயங்கள் ஏற்படுகின்றன. இதில் மோட்டார் வாகன விபத்துக்கள், தற்கொலைகள் மற்றும் கொலைகள் ஆகியவையும் அடங்கும்.
இந்தியாவில், 2020-இல் 15-39 வயதுக்குட்பட்ட 1.85% பெண்களும் 25.7% ஆண்களும் பாதுகாப்பு இல்லாத அளவு மது அருந்தியுள்ளனர். இது 1.79% பெண்களை விடவும், 40-64 வயதுக்குட்பட்ட 23% ஆண்களை விடவும் குறைவாகவே இருந்துள்ளது.
40 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும், உடல்நல அபாயங்கள் வயது மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடுகிறது. இருப்பினும், சிறிய அளவில் ஆல்கஹால் (உதாரணமாக, ஒன்று முதல் இரண்டு 3.4-அவுன்ஸ் ரெட் ஒயின் 3.4-அவுன்ஸ் கிளாஸ்கள்) உட்கொள்வது, இந்த வயதினருக்கு இருதய நோய், பக்கவாதம், மற்றும் நீரிழிவு நோய் போன்ற அபாயங்களைக் குறைப்பது போன்ற சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடும் என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
“எங்களுடைய செய்தி மிகவும் எளிமையானது; இளைஞர்கள் குடிக்கக்கூடாது. ஆனால், வயதானவர்கள் சிறிய அளவில் குடிப்பதால் பயனடையலாம். இளைஞர்கள் குடிப்பழக்கத்தைத் தவிர்ப்பார்கள் என்று நினைப்பது யதார்த்தமாக இல்லாவிட்டாலும், சமீபத்திய ஆதாரங்களைப் பார்ப்பது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம். இதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலம் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க முடியும்” என்று மூத்த ஆய்வாளர் டாக்டர் இம்மானுவேலா ககிடோ, சுகாதார அளவியல் அறிவியல் பேராசிரியர். வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்களுக்கு அழைப்பு
15-39 வயதினரை இலக்காகக் கொண்ட கடுமையான வழிகாட்டுதல்களுடன், வயது மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் உலகளாவிய ஆல்கஹால் நுகர்வு பரிந்துரைகள் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர். தற்போதுள்ள பல வழிகாட்டுதல்களால் பரிந்துரைக்கப்பட்ட மது நுகர்வு அளவு அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள இளைஞர்களுக்கு மிக அதிகமாக உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டாடா நினைவு மையத்தின் மும்பையின் துணை இயக்குனர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், மதுபானம் தொடர்பான கொள்கையை வெளியிட சுகாதார அமைச்சகத்திற்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம். “நாங்கள் தடை செய்யக் கோரவில்லை, ஆனால் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது அவசரத் தேவை. நண்பர்களின் அழுத்தம் காரணமாக மது அருந்தும் வயது குறைந்து வருகிறது, மேலும் 14-16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மது அருந்துகிறார்கள்” என்று அவர் கூறினார்.
எவ்வளவு மது குடிக்கலாம்
மது அருந்தாத ஒருவருடன் ஒப்பிடுகையில், ஒரு நபர் தனது ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் அளவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு எவ்வளவு மது அருந்தலாம் என்பதையும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.
வயது 15-39: இந்த குழுவிற்கு, உடல்நலம் பாதிக்கப்படும் முன் பரிந்துரைக்கப்பட்ட மது அளவு ஒரு நாளைக்கு 0.136 தரமான பானங்கள் (பெட்டியில் வரையறுக்கப்பட்ட தரமான பானம்). ஒரு நாளைக்கு 0.273 பானங்கள் என்று பெண்களுக்கு அந்த அளவு சற்று அதிகமாக இருந்தது.
40-64 வயதினர்: அடிப்படை சுகாதார நிலைமைகள் இல்லாதவர்களுக்கு, பாதுகாப்பான மது அருந்துதல் அளவுகள் ஒரு நாளைக்கு அரை தரமான பானத்திலிருந்து (ஆண்களுக்கு 0.527 மற்றும் பெண்களுக்கு 0.562 ஹவுன்ஸ்) ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு தரமான பானங்கள் வரை (ஆண்களுக்கு 1.69 மற்றும் பெண்களுக்கு 1.82) அருந்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வயது 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்: ஒரு நாளைக்கு மூன்று தரமான பானங்கள் (ஆண்களுக்கு 3.19 மற்றும் பெண்களுக்கு 3.51) அருந்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.