/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-02T200049.373.jpg)
coronavirus, coronavirus social distancing, mask coronavirus, n 95 mask, coronavirus update, கொரோனா வைரஸ், கோவிட்-19, coronavirus latest news, coronavirus social distancing, தனிநபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல், முகக் கவசம் கோவிட்-19 பரவலை எந்தளவுக்கு குறைக்கிறது, how much reduce covid-19 spread, social distancing and masks wearing, Tamil Indian express
தி லான்செண்ட்டில் வெளியான புதிய ஆய்வு ஒன்று தனிநபர் இடைவெளி மற்றும் முகக்க் கவசம் அணிதலின் மூலம் தொற்று நோய் பரவலை எந்தளவுக்கு குறைக்க உதவும் என்பதற்கான சான்றுகளை அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் நிதியளிக்கப்பட்ட மற்றும் உலகளவில் ஆராய்ச்சியாளர்களால் 25,697 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 44 ஒப்பீட்டு ஆய்வுகள் (COVID-19இல் 7, SARSஇல் 26 மற்றும் MERSஇல் 11) தொகுக்கப்பட்டன. கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு சமூக இடைவெளி, கண் பாதுகாப்பு அணிதல், முகக் கவசம் அணிதல் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஒரு மெட்டா பகுப்பாய்வு செய்தது.
தற்போதைய கொள்கைகளின்படி குறைந்தபட்சம் 1 மீட்டர் தனிநபர் இடைவெளி தொற்று நோய்களை பெரிய அளவில் குறைக்கும் என்று கூறப்படுகிற நிலையில் 2 மீட்டர் தனிநபர் இடைவெளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
“முகக் கவசம் அணிவது மக்களை (சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள்) இந்த கொரோனா வைரஸ்கள் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்பதையும், கண் பாதுகாப்பு கூடுதல் நன்மைகளை வழங்கக்கூடும் என்பதையும் இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தலையீடுகள் எதுவும் தொற்றுநோயிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் அளிக்கவில்லை. அவற்றின் பங்குக்கு ஏற்ப இடர் மதிப்பீடு மற்றும் பல சூழல்ரீதியான கருத்தாய்வு தேவைப்படலாம்.” என்று இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சமூக இடைவெளியை ஒப்பீடு செய்துள்ள 9 ஆய்வுகள், 1 மீட்டருக்கும் குறைவாக சமூக இடைவெளியைப் பின்பற்றிய நபர்களில் 13 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதுடன் ஒப்பிடுகையில், 1 மீட்டருக்கும் அதிகமாக சமூக இடைவெளியை கடைபிடித்தவர்கள் 3 சதவீதம் பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பூனேயில் உள்ள புல்மோகேர் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் இயக்குனர் டாக்டர் சுந்தீப் சால்வி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பொதுமுடக்கத்தின் முடிவு தொற்றுநோயின் முடிவு அல்ல. ஆனால், வைரஸுக்கு எதிரான நீண்ட கால போராட்டத்தின் தொடக்கம் சமூக இடைவெளி, கை சுத்தம், கண் பாதுகாப்பு, முகக்கவச அணிதல் ஆகியவை கொரோனா பரவலைக் குறைக்க சிறந்த வழி” என்று கூறினார்.
மேலும், முகக் கவசம் அணிவது மிகவும் பயனுள்ள தலையீடாகத் தெரிகிறது. பருத்தி ரெக்ஸினால் செய்யப்பட்ட துணி முகக் கவசம் அல்லது பருத்தி மற்றும் சிஃப்பான் ஆகியவற்றால் ஆன ஒரு கலப்பின முகக் கவசம் அல்லது பருத்தி மற்றும் பட்டு ஆகியவை நல்ல தரமான பாதுகாப்பை வழங்குகின்றன என்று டாக்டர் சுந்தீப் சால்வி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.