மத்திய நீர் ஆணையம் (CWC) 'இந்தியாவின் நீர் வளங்களின் மதிப்பீடு 2024' என்ற தலைப்பில் தனது ஆய்வில், 1985 மற்றும் 2023-க்கு இடையில் இந்தியாவின் சராசரி ஆண்டு நீர் இருப்பு 2,115.95 பில்லியன் கன மீட்டர் (BCM) என மதிப்பிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: How much water does India have available? Here is what Central Water Commission found
மத்திய நீர் ஆணையம் (CWC) இந்த அளவு தண்ணீர் இருப்பு உள்ளது என்ற முடிவுக்கு எப்படி வந்தது, என்ன கூறுகிறது என்பதை இங்கே பார்ப்போம்.
மத்திய நீர் ஆணையத்தின் தண்ணீர் இருப்பு அளவு எதை அடிப்படையாகக் கொண்டது?
அதன் ஆய்வில், மழைப்பொழிவு, ஆவியாதல், நிலப் பயன்பாடு, நிலப்பரப்பு மற்றும் மண் தரவுத்தொகுப்புகளை முக்கிய உள்ளீடுகளாகப் பயன்படுத்தி சராசரி வருடாந்திர நீர் இருப்பு அடிப்படையிலான வருடாந்திர நிகர-ஓட்டத்தை மத்திய நீர் ஆணையம் (CWC) மதிப்பீடு செய்தது. சிந்து நதியின் மூன்று மேற்கு துணை நதிகள் (சிந்து, ஜீலம் மற்றும் செனாப்) தவிர்த்து, நாட்டில் உள்ள அனைத்து ஆற்றுப் படுகைகளுக்கும் நீர் இருப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.
புவியியல் பகுதிகளில் நீர் இருப்பு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது?
மத்திய நீர் ஆணையத்தின் (CWC) அறிக்கையின்படி, பிரம்மபுத்திரா (592.32 பில்லியன் கன மீட்டர் - BCM), கங்கை (581.75 பி.சி.எம்), மற்றும் கோதாவரி (129.17 பி.சி.எம்) ஆகியவை நாடு முழுவதும் அதிக நீர் இருப்பைக் கொண்ட முதல் மூன்று படுகைகள் ஆகும். சபர்மதி (9.87 பி.சி.எம்), பென்னார் (10.42 பி.சி.எம்), மற்றும் மஹி (13.03 பி.சி.எம்) ஆகியவை நீர் இருப்பு அடிப்படையில் மூன்று படுகைகள் அடிமட்டத்தில் உள்ளன.
ஆற்றுப் படுகைகளில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது?
பராக் மற்றும் மற்ற ஆறுகள் - 93.65 பி.சி.எம்
பிராமணி - பைதராணி 31.27 பி.சி.எம்
பிரம்மபுத்திரா - 592.32 பி.சி.எம்
காவிரி - 26.53 பி.சி.எம்
மகாநதி மற்றும் பெண்ணாறு இடையே கிழக்கு பாயும் ஆறுகள் - 23.33 பி.சி.எம்
பென்னார் மற்றும் காயாகுமரி இடையே கிழக்கு பாயும் ஆறுகள் - பி.சி.எம்27.06
கங்கா - 581.75 பி.சி.எம்
கோதாவரி - 129.17 பி.சி.எம்
சிந்து (கிழக்கு) - 47.30 பி.சி.எம்
கிருஷ்ணா - 86.32 பி.சி.எம்
மகாநதி - 72.82 பி.சி.எம்
மஹி - 13.03 பி.சி.எம்
மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் வடியும் சிறு ஆறுகள் 31.86 பி.சி.எம்
நர்மதா - 49.45 பி.சி.எம்
பென்னார் - 10.42 பி.சி.எம்
சபர்மதி - 9.87 பி.சி.எம்
சுபர்ணரேகா - 14.48 பி.சி.எம்
தபி - 20.98 பி.சி.எம்
தாத்ரி முதல் கன்னியாகுமரி வரை மேற்குப் பாயும் ஆறுகள் - 116.47 பி.சி.எம்
தபியிலிருந்து தாத்ரி வரை மேற்குப் பாயும் ஆறுகள் - 110.44 பி.சி.எம்
லூனி உட்பட கட்ச் & சவுராஷ்டிராவின் மேற்குப் பாயும் ஆறுகள் - 26.95 பி.சி.எம்
மொத்தம் தண்ணீர் இருப்பு அளவு - 2115.95 பி.சி.எம்
முந்தைய மதிப்பீடுகளின் கண்டுபிடிப்புகள் என்ன?
நீர் இருப்பு 2,115.95 பி.சி.எம் என்ற அளவு 2019-ல் செய்யப்பட்ட முந்தைய மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது. இது 1985 முதல் 2015 வரை 1,999.2 பி.சி.எ நீர் இருப்பைக் கணக்கிட்டது.
2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி சுமார் அரை டஜன் நீர் இருப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் நீர் இருப்பு 2,000 பி.சி.எம்-க்கும் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்தது, 1901-03-ல் 1,443.2 பி.சி.எம் அளவைக் கொடுத்தது.
முந்தைய மதிப்பீடுகளை விட தற்போதைய நீர் இருப்பு அளவு ஏன் அதிகமாக உள்ளது?
இது முதன்மையாக முறையான காரணிகளால் ஏற்படுகிறது. முதலாவதாக, புதிய மதிப்பீடு பிரம்மபுத்திராவிற்கு பூட்டானின் பங்களிப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இது 2019-ல் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை. இரண்டாவதாக, கங்கைக்கான நேபாளத்தின் பங்களிப்பு 2019 மதிப்பீட்டில் ஓரளவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது, தற்போதைய ஆய்வு அதை முழுமையாக உள்ளடக்கியது.
மத்திய நீர் ஆணையம் (CWC) குறிப்பிட்டுள்ளபடி, “தற்போதைய ஆய்வில் பிரம்மபுத்திரா படுகையில், கங்கை படுகையில் மற்றும் சிந்து படுகையில் (கிழக்கு நதிகள்) இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து எல்லை தாண்டிய நீரும் அடங்கும்.
இந்த மதிப்பீடு ஏன் முக்கியமானது?
நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளின் சவால்களை எதிர்கொள்ளும் நீர் ஆதாரங்களின் நிலையான மேலாண்மைக்கு நீர் இருப்பு மதிப்பீடு முக்கியமானது.
தனிநபர் நீர் இருப்பைக் கணக்கிடுவதற்கு இது ஒரு முன்நிபந்தனையாகும், இது தண்ணீர் பற்றாக்குறையை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குறிகாட்டிகளில் ஒன்றாகும். நீர் பற்றாக்குறையை கணக்கிடுவதற்கான பொதுவான முறையின்படி, பால்கன்மார்க் இன்டிகேட்டர் அல்லது வாட்டர் ஸ்ட்ரெஸ் இன்டெக்ஸ் எனப்படும், ஒரு நாட்டில் தனிநபர் நீர் இருப்பு 1,700 கன மீட்டருக்கும் குறைவாக இருந்தால், அந்த நாடு "நீர் அழுத்தத்தில்" இருப்பதாகக் கருதப்படும். 1,000 கன மீட்டருக்கும் குறைவான தனிநபர் நீர் இருப்பு ஒரு நாட்டை "தண்ணீர் பற்றாக்குறையில்" வைக்கிறது, அதேசமயம் 500 கன மீட்டருக்கும் குறைவான தனிநபர் நீர் இருப்பு "முழுமையான நீர் பற்றாக்குறை" என்று பொருள்படும்.
ஜல் சக்தி அமைச்சகத்தின் கூறியுள்ளபடி, மத்திய நீர் ஆணையத்தின் 2019-ம் ஆண்டு ஆய்வில் மதிப்பிடப்பட்ட வருடாந்திர நீர் இருப்பு 1,999.2 பி.சிஎம். என்ற அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சராசரி ஆண்டு தனிநபர் நீர் இருப்பு 1,486 கன மீட்டர் ஆகும். சமீபத்திய மதிப்பீடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (2024 இல் 1,513 கன மீட்டர்கள் 1.398 பில்லியன் மக்கள்தொகையைப் பயன்படுத்தி) ஆனால் இன்னும் 1,700 கன மீட்டர் குறிக்குக் கீழே இருக்கும்.
இருப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் பயன்படுத்தக்கூடியதா?
எப்படியானாலும், மத்திய நீர் ஆணையம் குறிப்பிட்டுள்ள நீர் இருப்பு அளவு பயன்படுத்தக்கூடிய தண்ணீரைக் குறிக்கவில்லை. உதாரணமாக, 2019-ம் ஆண்டில், சராசரி நீர் ஆதாரங்களின் இருப்பு 1999.2 பி.சி.எம் என மதிப்பிடப்பட்டது, ஆனால், பயன்படுத்தக்கூடிய மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் 690 பி.சி.எம் மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய நீர் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி, தாபியிலிருந்து தாத்ரி மற்றும் தாத்ரி முதல் கன்னியாகுமரி, சபர்மதி மற்றும் மாஹி வரை மேற்குப் பாயும் ஆற்றுப் படுகைகளைத் தவிர, சிறிய படுகைகளில் பயன்படுத்தக்கூடிய மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் விகிதம் சராசரி நீர் ஆதாரத் திறனுடன் மிக அதிகமாக உள்ளது. மத்திய நீர் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி, பிரம்மபுத்திரா ஆற்றின் துணைப் படுகையில் பயன்படுத்தக்கூடிய மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் சராசரி நீர் ஆதார சாத்தியக்கூறுகளின் விகிதம் குறைந்தபட்சமாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.