Advertisment

இந்திய முஸ்லிம்களிடம் எவ்வளவு செல்வம் உள்ளது? ஆய்வு கூறுவது என்ன?

நாட்டின் செல்வத்தை முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்று மோடி பேச்சு; இந்திய முஸ்லீம்களிடம் எவ்வளவு சொத்து உள்ளது? ஆய்வு கூறுவது என்ன?

author-image
WebDesk
New Update
wealth

இந்திய முஸ்லீம்களிடம் எவ்வளவு சொத்து உள்ளது? ஆய்வு கூறுவது என்ன?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Zeeshan Shaikh

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் “தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின்” தங்கத்தை கணக்கிட்டு, பின்னர் அதை இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்று கூறியுள்ளது, அவர்கள் மங்களசூத்திரங்களை (தாலி) கூட விட்டுவிடமாட்டார்கள் என்று கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க: How much wealth do Indian Muslims have? Here’s what a study says

பிரதமரின் கருத்துக்களை "பொய்கள்" மற்றும் "வெறுக்கத்தக்க பேச்சு" என்று காங்கிரஸ் விமர்சித்தது.

நாட்டில் உள்ள பல்வேறு மதப் பிரிவுகளுக்குச் சொந்தமான தங்கம் உள்ளிட்ட செல்வங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்த சமீபத்திய விரிவான அல்லது குறிப்பிட்ட தரவு எதுவும் கிடைக்கவில்லை. ICSSR-அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் தலித் ஸ்டடீஸ் 2020 இல் வெளியிட்ட ‘இந்தியாவில் உள்ள செல்வ உரிமையில் உள்ள குழுக்களுக்கு இடையேயான சமத்துவமின்மை குறித்த ஆய்வு அறிக்கை’யில் சில தொடர்புடைய தகவல்கள் கிடைக்கின்றன.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மற்றும் இந்திய பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்திய அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வின் (AIDIS) தரவுகளைப் பயன்படுத்திய இந்த அறிக்கை, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் முஸ்லிம்களிடையே செல்வத்தின் உரிமை மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தது.

இந்தியாவில் எந்த சமூகக் குழுக்கள் எவ்வளவு செல்வத்தை வைத்திருக்கின்றன?

அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, இந்து உயர் சாதியினர் நாட்டின் மொத்த சொத்துக்களில் 41% வைத்திருக்கின்றனர், அதைத் தொடர்ந்து இந்து ஓ.பி.சி.,கள் (OBC) 31% வைத்திருக்கின்றனர். முஸ்லீம்கள், எஸ்.சி.,க்கள் மற்றும் எஸ்.டி.,கள் முறையே 8%, 7.3% மற்றும் 3.7% சொத்துக்களை வைத்திருந்தனர்.

இந்தியாவில் உள்ள மொத்தக் குடும்பங்களில் (22.2%) இந்து உயர் சாதியினரின் செல்வத்தின் பங்கு விகிதாசாரத்தில் அதிகமாக இருந்தது. இந்த எண்ணிக்கை இந்து OBC களுக்கு 35.8%, முஸ்லிம்களுக்கு 12.1%, SC களுக்கு 17.9% மற்றும் ST களுக்கு 9.1% ஆகும்.

இந்து உயர் சாதியினருக்குச் சொந்தமான சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 1,46,394 பில்லியன் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது, இது எஸ்.டி., பிரிவினரின் (ரூ. 13,268 பில்லியன்) சொத்து மதிப்பை விட கிட்டத்தட்ட 11 மடங்கு அதிகமாக இருந்தது. முஸ்லிம்களின் சொத்து மதிப்பு ரூ.28,707 பில்லியன்.

தற்போதைய விலையில் சமூகக் குழுக்களுக்குச் சொந்தமான மொத்தச் செல்வம் (ரூ பில்லியனில்)

ஆதாரம்: AIDIS 2013; 2020 இல், இந்தியாவில் செல்வ உரிமையில் உள்ள குழுக்களுக்கு இடையேயான சமத்துவமின்மை குறித்த ஆய்வு அறிக்கை

ஒரு குடும்பத்தின் சொத்து உரிமையின் நிலவரம் என்ன?

ஒரு குடும்பத்தின் சொத்து உரிமையின் சராசரி மதிப்பு ரூ.15.04 லட்சமாக இருந்தது, ஆனால் சமூகக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன.

சராசரி குடும்பச் செல்வம் இந்து உயர் சாதியினரிடையே (ரூ. 27.73 லட்சம்), அதைத் தொடர்ந்து இந்து ஓ.பி.சி (ரூ. 12.96 லட்சம்) மத்தியில் இருந்தது. முஸ்லீம் குடும்பங்களின் சராசரி சொத்து (ரூ. 9.95 லட்சம்), எஸ்.டி (ரூ. 6.13 லட்சம்) மற்றும் எஸ்.சி (ரூ. 6.12 லட்சம்) குடும்பங்களை விட அதிகமாக இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.

தற்போதைய விலையில் (ரூபாயில்) இந்தியாவில் உள்ள சமூக-மதக் குழுக்களுக்கு சொந்தமான ஒரு வீட்டின் சொத்து

ஆதாரம்: AIDIS 2013; 2020 இல், இந்தியாவில் செல்வ உரிமையில் உள்ள குழுக்களுக்கு இடையேயான சமத்துவமின்மை குறித்த ஆய்வு அறிக்கை

எந்த சமூகக் குழுவில் அதிக தங்கம் உள்ளது?

ஆய்வின்படி, இந்து OBC கள் தங்கத்தில் அதிகப் பங்கை (39.1%) கொண்டுள்ளனர், அதைத் தொடர்ந்து இந்து உயர் சாதியினர் (31.3%) உள்ளனர். முஸ்லீம்கள் 9.2% பங்கைக் கொண்டுள்ளனர், இது எஸ்.டி.,யினரை விட (3.4%) அதிகம்.

சொத்துக்களின் வகையின்படி சமூக-மதக் குழுக்களிடையே செல்வத்தின் பங்கு (சதவீதத்தில்)

ஆதாரம்: AIDIS, 2013; 2020 இல், இந்தியாவில் செல்வ உரிமையில் உள்ள குழுக்களுக்கு இடையேயான சமத்துவமின்மை குறித்த ஆய்வு அறிக்கை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Muslim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment