Nandagopal Rajan
காந்தி ஜெயந்தி நாளில் நாதுராம் கோட்சே பெயர் டிரெண்டிங் ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேசத் தந்தையின்151வது ஆண்டு பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி இந்தியாவில் ட்விட்டர் பயனர்கள் அதிகாலையில் விழித்தெழுந்திருக்கிறார்கள்.
நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியிருப்பது பல ட்விட்டர் பயனர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் ட்விட்டர் தினசரி 17 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற ஒரு மோசமான சிந்தனை எப்படி டிரெண்டிங் ஆனது?
அதற்கு, நீங்கள் முதலில் ட்விட்டர் டிரெண்டிங் வழிமுறை (algorithm) எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ட்விட்டர் டிரெண்டிங் வழிமுறை (algorithm) எவ்வாறு செயல்படுகிறது?
ட்விட்டர் டிரெண்டிங் வழிமுறை (algorithm) பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. பயனர்கள் அவர்கள் யார், அவர்களின் ஈடுபாடு மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த டிரெண்டிங் என்பது ட்விட்டர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலும் வலைதள பயனர்களுக்கும் தெரியும். மேலும், பயனர்களுக்கு தனிப்பட்ட தேவைகளுக்கு இல்லாமல் டிரெண்டிங்கைக் காட்டும் ஒரு பிரபலமான பகுதியும் உள்ளது.
இது குறித்து ட்விட்டர் கூறுகையில் “இந்த வழிமுறை இப்போது பிரபலமான தலைப்புகளை அடையாளம் காண்கிறது. இது சிறிது காலமாக அல்லது தினசரி அடிப்படையில் பிரபலமாக உள்ள தலைப்புகளை விட, ட்விட்டரில் பரபரப்பாக வெளிவரும் தலைப்புகளைக் கண்டறிய உதவுகிறது.” என்று தெரிவிக்கிறது.
மேலும், “டிரெண்டிங்குடன் தொடர்புடைய ட்வீட்களின் எண்ணிக்கை மற்றும் டிரெண்டிங்கை தரவரிசைப்படுத்துதல், தீர்மானிக்கும் டிரெண்டிங்குகள் ஆகியவை டிரெண்டிங் வழிமுறையைப் பார்க்கும் காரணிகளில் ஒன்றாகும்.” என்று கூறுகிறது.
ஆனால், தரவு (data) விஞ்ஞானி கிலாட் லோட்டன் போன்ற வல்லுநர்கள் இந்த வழிமுறை (algorithm) படிப்படியாக நீடித்த வளர்ச்சியைக் காட்டிலும் கூர்மையான அதிகரிப்பை ஆதரிக்கிறது என்றும் டிரெண்டிங்குகள் அளவின் கலவையால் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் ஒரு அளவை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும் என்றும் விளக்கினார்.
எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நிறைய ட்வீட்டுகள் இருந்தால் அது டிரெண்டிங் ஆகத் தொடங்கும். மற்ற டிரெண்டிங்குகள் முக்கியமில்லாத நேரத்தில் இந்த செயல்பாடு நடக்கும்போது, இன்று அதிகாலையைப் போலவே, ஹேஷ்டேக் ஒரு முதல்நிலை டிரெண்டிங் ஆக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 2ம் தேதி என்ன நடந்தது?
அக்டோபர் 2ம் தேதி, அதிகாலை 5 மணியளவில், கீஹோல்.கோ-வின் பகுப்பாய்வுப்படி, இந்தியில் # நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்று ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்வீட்களின் எண்ணிக்கை அதிகரித்தது. #மகாத்மா காந்தி ட்வீட்டுகள் வேகத்தை அதிகரிக்கத் தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே இது அதிகரித்து இருந்தது. # மகாத்மா காந்தி கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் ட்வீட் செய்யப்பட்டாலும், ட்விட்டரின் வழிமுறை (algorithm) #நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்ற டிரெண்டிங்குக்கு அதிக வெயிட்டேஜ் கொடுத்தது.
வெள்ளிக்கிழமை, மதியம் 1 மணியளவில் 80,000க்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் # நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் -ஐப் பயன்படுத்தி இருந்தன. ட்விட்டரில் ஒரு பொதுவான நிகழ்வை ஒரு டிரெண்டிங் ஹேஷ்டேக்கில் பிக்கிபேக் செய்ய முயற்சிக்கும் போக்கு மற்றும் சீரற்ற தொடர்பில்லாத ட்வீட்டுகள் குறித்து புகார் அளிக்கும் ட்வீட்டுகளும் இதில் அடங்கும்.
இந்த டிரெண்டிங்கை தொடங்கிய முதல் ட்வீட்டுகளில் ஒன்று அதிகாலை 1.50 மணிக்கு @vishalurl என்ற கணக்கில் இருந்து, 12 மணி நேரத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறு ட்வீட் மற்றும் 3.5 ஆயிரம் மேற்கோள் ட்வீட்களைப் பெற்றது.
ஹேஷ்டேக்கைப் பெருக்க உதவிய ட்விட்டர் கணக்குகளில் மிக முக்கியமானது *@Harvansh_Batra* இந்த கணக்கு தனது 63,000-க்கும் அதிகமான பின்தொடர்பவர்களுக்கு #நாதுராம் கோட்சே ஜிந்தாபாத் என்ற பல ட்வீட்களை மறு ட்வீட் செய்துள்ளது என்றுtweetbinder.com என்ற பகுப்பாய்வுக் கருவி காட்டியுள்ளது.
20,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட குறைந்தது 5 பேரின் கணக்குகள் இதேபோன்ற நடத்தையைக் காட்டியது. இது ஹேஷ்டேக் டிரெண்டிங்குக்கு உதவுகிறது. மேலும், இதில் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் டிரெண்டிங்குக்கு உதவியதாகத் தெரியவில்லை.
# நாதுராம் கோட்சே இந்தியா முழுவதும் பல இடங்களில் டிரெண்டிங்கில் இருந்தபோது, கேரளா போன்ற இடங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. இதனிடையே, கொல்கத்தாவில் #நாதுராம் கோட்சே அமர் ரஹே என்ற ட்வீட் 18,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களுடன் டிரெண்டிங்கில் இருந்தது.
பிற்பகல் 1 மணியளவில், #காந்தி ஜெயந்தி மற்றும் #மகாத்மா காந்தி ஆகியவை தலா 1,00,000க்கும் மேற்பட்ட ட்வீட்களைக் கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.