Advertisment

தாஜ்மஹாலை அச்சுறுத்தும் மாசு, பூச்சிகள்: உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

தாஜ்மஹாலைப் பாதுகாப்பதில் உள்ள தோல்விகள் குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டித்துள்ளது.

author-image
WebDesk
New Update
தாஜ்மஹாலை அச்சுறுத்தும் மாசு, பூச்சிகள்: உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாஜ்மஹாலின் 500 மீட்டர் சுற்றளவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ஆக்ரா மேம்பாட்டு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (செப். 26) உத்தரவிட்டது.

Advertisment

இந்த வழக்கில் மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சி.திங்ரா , தாஜ்மஹாலை சுற்றிலும் 500 மீட்டர் சுற்றளவிற்கு வெளியே இடம் ஒதுக்கிய கடைக்காரர்களின் குழு - நினைவுச்சின்னத்தின் மேற்கு வாயிலுக்கு அருகில் சட்டவிரோத வணிகங்களில் ஈடுபடுவதாக கூறினார்.

இதையும் படியுங்கள்: பாகிஸ்தானுக்கு எஃப்- 16 போர் விமானங்களை வழங்கிய அமெரிக்கா: இந்தியா கண்டிப்பது ஏன்?

தொடர்ந்து, இது இது நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகளை முற்றிலும் மீறுவதாகும் என்பதை சுட்டிக் காட்டிய அவர், இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறும், வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், பல்வேறு வகையான மாசுபாட்டிலிருந்து தாஜ்மஹாலைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், 2018 ஆம் ஆண்டில், அது மத்திய அரசையும் உத்தரப் பிரதேச அரசையும், மௌகலாயர் கால கட்டடக் கலையை பாதுகாப்பது கடமை எனக் கூறியது.

தாஜ் ட்ரேபீசியம் மண்டல வழக்கு

1970 களில் இருந்து, தாஜ்மஹாலுக்கு அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமில உமிழ்வுகள் தாஜ்மஹாலின் பளபளக்கும் வெள்ளை பளிங்கு மேற்பரப்பு நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் சில இடங்களில் சில இடங்களில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் படிந்துள்ளது. இதையடுத்து, இந்த நினைவுச்சின்னத்தை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும் வகையில், தாஜ் ட்ரேபீசியம் மண்டலம் (TTZ) என்று அழைக்கப்படும் தாஜைச் சுற்றி 10,400 சதுர கிமீ பரப்பளவை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிர்ணயித்தது.

இதற்கிடையில், வழக்கறிஞரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான எம்.சி.மேத்தா 1984-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் அருகிலுள்ள மதுரா பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை நினைவுச்சின்னத்திற்கும் அதன் சுற்றுப்புற மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. எனவே, தாஜ்மஹாலைப் பாதுகாக்க TTZ க்குள் காற்று மாசுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, 1996இல், உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் (எம்.சி. மேத்தா vs மத்திய அரசு), "TTZ இல் உள்ள வளிமண்டல மாசுபாடு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை  அகற்ற வேண்டும்" என்று கூறியது.

தொடர்ச்சியான மாசுபாடு

2010 ஆம் ஆண்டில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) சமர்ப்பித்த அறிக்கையில், TTZ பகுதியில் மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு அரசாங்க திட்டங்கள் இருந்தபோதிலும், சின்னமான தாஜ்மஹால் தொடர்ந்து நீர் மற்றும் காற்று மாசுபாட்டால் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

1998 மற்றும் 2000 க்கு இடையில், அரசாங்கம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களைத் தொடங்கினாலும், ஆக்ராவில் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

பைபாஸ் உருவாக்கம், மின் விநியோகத்தில் மேம்பாடுகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களின் குறைப்பு ஆகியவை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் துகள்களின் உமிழ்வுகள் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட அதிக அளவை எட்டியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலை வெளியேற்றம், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு ஆகியவற்றால் மாசுபட்ட யமுனை நீர், நினைவுச்சின்னத்தையும் சேதப்படுத்துகிறது என்று NEERI அறிக்கை கண்டறிந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனங்கள்

ஜூலை 2018 இல், தாஜ்மஹாலைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் காட்டிய "சோம்பலை" உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக கண்டித்தது.
மேலும் இந்த அமர்வு உத்தரப் பிரதேச மாநில அரசிடமும் இதுதொடர்பான கவலை இல்லை. அதுதவிர மாசுபாட்டை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை என்றது.

முன்னதாக, 2017 டிசம்பரில், நினைவுச்சின்னத்தைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்தது.

தொடர்ந்து, , தாஜ்மஹாலின் பளிங்கு - வெள்ளை, மஞ்சள், பழுப்பு-பச்சை நிறம் மாறுவது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

மேலும், நினைவுச்சின்னத்தை பாதுகாக்க இயலாமைக்காக இந்திய தொல்லியல் துறையை (ASI) குற்றம் சாட்டிய உச்சநீதிமன்றம், தாஜ்மஹாலைக் காப்பாற்ற வேண்டுமானால் ASI தூக்கி எறியப்பட வேண்டும்" என்று கூறியது.

பூச்சிகளால் ஏற்படக் கூடிய சேதம்

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுக்கள் தவிர, தாஜ்மஹால் யமுனையின் மாசுபாட்டின் காரணமாக நிறமாற்றம் அடைந்துள்ளது, இது நீர்வாழ் உயிரினங்களின் இழப்புக்கு வழிவகுத்தது.

2018 இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், மேத்தா, “ஆற்றில் உள்ள அசுத்தமான பொருட்களில் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதாகவும், பின்னர் மாலையில் தாஜ்மஹாலைத் தாக்குகின்றன” என்றார்.

மேலும், முன்னதாக, ஆற்றில் மீன்கள் இருந்தன, அவை பூச்சிகள் மற்றும் அவற்றின் லார்வாக்களை சாப்பிட்டன, ஆனால் இப்போது, கடுமையான நீர் மாசுபாட்டால், ஆற்றில் எந்த நீர்வாழ் உயிரினங்களும் இருந்ததற்கான அறிகுறியே இல்லை” எனவும் கூறினார். தொடர்ந்து தாஜ்மஹாலின் வடக்குப் பகுதியில் இந்தப் பூச்சிகளின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. பளிங்குகள் மங்குகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Taj Mahal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment