ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறார் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து குழந்தைகள் உரிமை அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
நேற்று (செப்டம்பர் 23) இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், சிறார் ஆபாசப் படங்கள் மீதான சட்டத்தை கடுமையாக்கிய உச்ச நீதிமன்றம், சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்பது, டவுன்லோடு செய்வது, பகிர்வது என அனைத்தும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என்று கூறியது.
போக்சோ சட்டப் பிரிவு 15 கூறுவது என்ன?
"குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள் வைத்திருப்பதற்கான தண்டனை" தொடர்பான போக்சோ சட்டத்தின் பிரிவு 15 பற்றி பெஞ்ச் விளக்கியது.
முதலில், "வணிக நோக்கங்களுக்காக" ஒரு நபர் குழந்தை ஆபாசப் பொருட்களை சேமித்து வைத்திருக்கும் நிகழ்வுகளுக்கு இந்த சட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், போக்சோ சட்டம், பிரிவுகள் 15(1), (2) மற்றும் (3) ஆகியவற்றின் கீழ் மூன்று இணைக்கப்பட்ட குற்றங்களை அறிமுகப்படுத்துவதற்குத் திருத்தப்பட்டது - அபராதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என சட்டம் திருத்தப்பட்டது.
ஆபாசமாக குழந்தைகளை சித்தரிக்கும் எந்த வகையான நிகழ்வுகளும் குற்றமே. Save செய்து வைப்பது, சிறார் ஆபாசப் படங்களைப் பகிர அல்லது அனுப்பும் நோக்கத்துடன் வைததிருப்பது என அனைத்துமே குற்றமாக மாற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
குழந்தை ஆபாசப் படங்கள் தொடர்பான வழக்குகளில் "உடைமை" (possession) என்பதன் வரையறையை உச்ச நீதிமன்றம் விரிவுபடுத்தியது. குழந்தைகளின் ஆபாசப் படங்களை தனிநபர் physical possession ஆக கொண்டிருக்காத வழக்குகளை உள்ளடக்கியது, ஆனால்
நீதிமன்றம் இதை "ஆக்கபூர்வமான உடைமை" என்று குறிப்பிட்டது மற்றும் "பார்ப்பது, விநியோகிப்பது அல்லது காட்சிப்படுத்துவது" பிரிவு 15 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் "உடைமையில்" இருக்கும் என்று கூறியது.
இது குழந்தைகளின் ஆபாச உள்ளடக்கத்தைப் புகாரளிக்க வலியுறுத்துகிறது. புகாரளிக்காததற்கான அபராதம் "ஐயாயிரம் ரூபாய்க்கு குறையாத அபராதம் மற்றும் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றங்கள் ஏற்பட்டால், அபராதத்துடன் பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாது." தண்டனை வழங்கப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: How Supreme Court strengthened the law against child pornography
வழக்குப் பதிவு எப்படி செய்யப்படும்?
சட்டப் பிரிவு 15ன் கீழ் உள்ள துணைப் பிரிவுகளில் மட்டுமே குற்றம் உள்ளதாக என்று விசாரிக்க கூடாது. மற்ற பிரிவுகளையும் பார்க்க வேண்டும் என காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை அறிவுறுத்தியது. ஒரு துணைப் பிரிவின் கீழ் ஒரு குற்றத்தை செய்யாவிட்டாலும், விசாரிக்க வேண்டும். உடனே காவல்துறை, நீதிமன்றம் எந்த குற்றமும் இல்லை என்ற முடிவுக்கு வர கூடாது. அதற்குப் பதிலாக, மற்ற துணைப் பிரிவுகளில் ஏதாவது ஒரு குற்றம் நடந்துள்ளதா என்பதை காவல்துறை பார்க்க வேண்டும் என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“